search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி பண்டிகை நாளில் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் 12 குழந்தைகள் பிறந்தன
    X

    தீபாவளி பண்டிகை நாளில் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் 12 குழந்தைகள் பிறந்தன

    • 8 ஆண், 4 பெண் குழந்தைகள் என மொத்தம் 12 குழந்தைகள் பிறந்துள்ளன.
    • தீபாவளி பண்டிகைகளில் குழந்தை பிறந்தது தங்களுக்கு பரிசாக திகழ்கிறது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் கோர்ட்டு அருகில், அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு கும்பகோணம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள ஊர்களில் இருந்தும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

    அதன்படி தினமும் 100-க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் அவசர சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறது.

    இந்த ஆஸ்பத்திரியில் தினமும் சுகபிரசவமாகவும், அறுவை சிகிச்சையின் மூலமும் ஏராளமான குழந்தைகள் பிறக்கின்றன.

    அதன்படி தீபாவளி பண்டிகை நாளில் 8 ஆண் குழந்தைகள், 4 பெண் குழந்தைகள் என மொத்தம் 12 குழந்தைகள் பிறந்துள்ளன. அதில் சுக பிரசவமாக 6 குழந்தைகளும், அறுவை சிகிச்சை மூலம் 6 குழந்தைகளும் பிறந்துள்ளன.

    குழந்தைகளும், தாய்மார்க ளும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.

    குழந்தைகளை பெற்றெடுத்த பெண்கள், தீபாவளி பண்டிகை பரிசாக தங்களுக்கு குழந்தைகள் பிறந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நண்பர்கள், உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    Next Story
    ×