search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குன்னூர்"

    • மலைப்பாதையில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீலகிரி விபத்து குறித்து அறிந்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், தென்காசியில் இருந்து 54 பயணிகளுடன் ஊட்டிக்குச் சென்ற சுற்றுலா பேருந்து, குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன்.

    காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்பவும் இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

    • குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து.
    • பேருந்தில் பயணித்தவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்.

    தென்காசியில் இருந்து 54 பயணிகளுடன் ஊட்டிக்குச் சென்ற சுற்றுலா பேருந்து, குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையின் மரப்பாலம் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

    இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம், படுகாயமடைந்தோருக்கு ரூ. 1 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், அதில் பயணம் செய்த பயணிகளில் 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

    • குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து.
    • பேருந்தில் பயணித்தவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்.

    தென்காசியில் இருந்து 54 பயணிகளுடன் ஊட்டிக்குச் சென்ற சுற்றுலா பேருந்து, குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையின் மரப்பாலம் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

    இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளில் 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

    • கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரசார விவாதம் செய்தனர்.
    • பொதுக்கழிப்பிடத்தை சீரமைக்கும் பணி, தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது.

    அருவங்காடு,

    குன்னூர் நகரமன்ற மாதாந்திர கூட்டம் தலைவர் ஷீலாகேத்ரின் தலைமையில் நடந்தது.

    நகராட்சி கமிஷனர் ஏகராஜ், நகரமன்ற துணைத் தலைவர் வாசிம்ராஜா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரசார விவாதம் செய்தனர்.

    வாசிம்ராஜா:

    உழவர் சந்தை பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடத்தை சீரமைக்கும் பணி, தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது. ஆனால் அங்கு நீண்ட நாட்களாக பணிகள் முடியவில்லை.

    எனவே சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அங்கு உள்ள காலியிடத்தில் சிறப்பு நிதிஒதுக்கீடு செய்து, சமுதாயக் கூடமோ, உள்விளையாட்டு அரங்கமோ கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    ஜாகிர்உசேன் (தி.மு.க):

    குன்னூர் நகராட்சியில் பிறப்பு-இறப்பு சான்றிதழ் வழங்க அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர். அங்கு பணியாற்றும் ஒருசிலர் பணம் வசூலித்து வருவதாக புகார் எழுந்து உள்ளது. அத்தகைய நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சுசீலா: நகரப் பகுதியில் உள்ள 30 வார்டுகளிலும் தெருநாய் தொல்லை அதிகரித்து உள்ளது. இதனால் உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி அங்கு வரும் சுற்றுலா பயணிகளும் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே தெருநாய்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராமசாமி: எனது வாடில் இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகளை கண்டித்து வரும் நாட்களில் போராட்டம் நடத்தப்படும்.

    முன்னாள் நகராட்சி கமிஷனர் மவுண்ட்பிளசன்ட் பகுதியில் விதிமுறைக்கு புறம்பாக கட்டப்பட்ட 2 கட்டிடங்களுக்கு சீல் வைத்து உள்ளார். ஆனால் இந்தக் கட்டிடங்கள் அனுமதி இன்றி திறக்கப்பட்டு உள்ளது. இதற்கு அனுமதி கொடுத்தவர் யார்?

    நகராட்சி கமிஷனர்:

    அதிகாரிகள் சீல் வைத்த கட்டிடங்களை யார் திறந்தாலும் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு குன்னூர் மாநகராசி கூட்டத்தில் விவாதம் நடந்தது.

    • சி.டி.டி.ஏ ஏல மையத்தில் நடப்பு ஆண்டுக்கான 39-வது ஏலம் நேற்று நடைபெற்றது.
    • மீதம் உள்ள 30 சதவீதம் தேயிலை இருப்பில் வைக்கப்பட்டு உள்ளது.

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டத்தில் 63 ஆயிரம் சிறு-குறு விவசாயிகள் உள்ளனர்.

    இங்கு உற்பத்தியாகும் தேயிலைதூள்கள், சி.டி.டி.ஏ தனியார் ஏலமையம் மற்றும் அரசுக்கு சொந்தமான இன்கோசர்வ் ஏலமையம் ஆகியவை மூலம் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளி நாட்டை சேர்ந்த வர்த்தகர்க ளும் பான் இந்தியா திட்ட த்தின்கீழ் தேயிலைதூள்களை கொள்முதல் செய்து வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் பசுந்தேயிலை மகசூல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் குன்னூரில் உள்ள சி.டி.டி.ஏ ஏல மையத்தில் நடப்பு ஆண்டுக்கான 39-வது ஏலம் நேற்று நடைபெற்றது.

    இதில் 22,8,778 கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது. அவற்றில் டஸ்ட் ரகம் 5,694 லட்சம் கிலோவும், இலைரகம் 17,0884 லட்சம் கிலோவும் அடங்கும்.

    குன்னூர் ஏலமையத்தில் விற்பனை சுறுசுறுப்பாக தொடங்கியது. இதில் 10-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்துகொண்டனர். அப்போது டஸ்ட்ரகம் கிலோவுக்கு குறைந்தபட்சம் ரூ.80 முதல் 85 வரையிலும், இலைரகம் கிலோவுக்கு குறைந்தபட்சமாக ரூ.90 முதல் 110 வரையிலும், அதிகப ட்சமாக கிலோ ஒன்றிற்கு ரூ.120 முதல் ரூ.160 வரையி லும் விலை கிடைத்து உள்ளது.

    ஆகமொத்தம் 70 சதவீதம் தேயிலைதூள்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளது. எனவே மீதம் உள்ள 30 சதவீதம் தேயிலை இருப்பில் வைக்கப்பட்டு உள்ளது.

    பட்டா நிலத்தில் உள்ள சந்தன மரங்களை மர்மநபர்கள் வெட்டினர்.

    குன்னூர்,

    குன்னூர் அருகே உள்ள கட்டபெட்டு சரகம் கூக்கல்தொரை அருகே உள்ள கம்பட்டிகம்பை சாலையோரத்தில் தனியார் பட்டா நிலத்தில் உள்ள சந்தன மரங்களை மர்மநபர்கள் வெட்டுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் கட்டபெட்டு சரக வனச்சரகர் செல்வக்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தன மரத்தினை வெட்டிக் கொண்டிருந்த 5 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் குஞ்சப்பனை, கூக்கல் தொரை மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பால்ராஜ், சவந்திரபாண்டியன், செல்வன், சிவக்குமார்மற்றும் ஜாகீர்உசேன் என்பது தெரியவந்தது. போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு 2.20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    • 2 பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.
    • 500-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    குன்னூர்,

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 2 பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இதில் பலர் உயிரிழந்தனர். அங்கு உள்ள தேவாலயங்கள் சூறையாடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் மணிப்பூரில் அமைதி, சமாதானம் நிலவ வேண்டி குன்னூர் பெட்போர்டு பகுதியில் அமைதி ஜெப பேரணி நடத்தப்பட்டது. இதில் அனைத்து திருச்சபைகளைும் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அப்போது மணிப்பூர் மாநிலத்தில் சமாதானம், பாதுகாப்பிற்காக மத்திய அரசு நல்ல முடிவெடுத்து அதற்கான வழிமுறைகளை செய்ய வேண்டும் என்று திருச்சபை தலைவர்கள் பேரணியில் கோரிக்கை விடுத்தனர். குன்னூர் பெட்போர்டு பகுதியில் தொடங்கிய பேரணி மவுண்ட் ரோடு வழியாக குன்னூர் அந்தோணியார் ஆலயம் வந்தடைந்தது.

    • நீலகிரியில் 19 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது
    • தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரக்கூடாது என அறிவுரை வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய 19 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. இதனை கண்காணிக்கும் வகையில் அரசு அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதை சாலையில் வந்த ஒரு சுற்றுலா வாகனத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு தடை செய்யப்பட்ட ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்கள், டம்ளர்கள், உணவு தட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.இதையடுத்து அந்த பொருட்களை கொண்டு வந்த சுற்றுலா பயணிக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. அதன்பிறகு நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரக்கூடாது என்று அதிகாரிகள் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

    • 2 பெண்கள் உள்பட 22 பேர் ஊட்டிக்கு தனியார் பஸ் மூலம் சுற்றுலா வந்தனர்
    • குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குன்னூர்,

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த முத்தப்பாளையம் பகுதியில் உள்ள டைல்ஸ் கம்பெனியில் இருந்து 2 பெண்கள் உள்பட 22 பேர் ஊட்டிக்கு தனியார் மினி பஸ் மூலம் சுற்றுலா வந்தனர். அங்கு உள்ள சுற்றுலா தலங்களை சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் ஈரோடு நோக்கி புறப்பட்டனர்.

    குன்னூர் அடுத்து காட்டேரி பகுதியில் வேன் சென்றது. அப்போது ஓடும் பஸ்சில் டிரைவர் குழந்தைசாமிக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனால் வாகனம் நிலைதடுமாறி, சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது.

    இந்த பஸ் ஒருவேளை மாற்று திசையில் திருப்பி இருந்தால், சுமார் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து இருக்கும். அதிர்ஷ்ட வசமாக தடுப்பு சுவரில் வாகனம் மோதியது. இதனால் வண்டியில் இருந்த 22 பேர் உயிர்தப்பினர்.சுற்றுலா பஸ் டிரைவருக்கு விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏலத்தில் மொத்தம் 23 லட்சத்து 84 ஆயிரத்து 88 கிலோ தேயிலை தூள் விற்பனைக்கு வந்தன.
    • தேயிலை தூள் ரூ.100க்கும் கீழ் விற்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெற்ற ஏலத்தில் 89.72 சதவீத தேயிலை தூள் விற்பனையானது. இது குறித்து தேயிலை வா்த்தக அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியுள்ள தாவது:-

    நீலகிரி மாவட்டம், குன்னூரில் 25-வது தேயிலை ஏலம் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாள்கள் நடைபெற்றன. இந்த ஏலத்தில் மொத்தம் 23 லட்சத்து 84 ஆயிரத்து 88 கிலோ தேயிலை தூள் விற்பனைக்கு வந்தன.

    எகிப்து, ஈரான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதி யாளா்கள் பங்களிப்பு அதிகம் இருந்ததாலும், உள்நாட்டு தேவை அதிகரிப்பாலும் 21 லட்சத்து 39 ஆயிரத்து 71 கிலோ தேயிலை தூள் விற்பனையானது. இது மொத்த விற்பனையில் 89.72 சதவீதமாகும். சராசரியாக ஒரு கிலோவுக்கு ரூ. 97.94 வரை விலை கிடைத்துள்ளது.

    தற்போது நடைபெற்ற ஏலத்தில் கடந்த வாரத்தை விட ஒரு லட்சம் கிலோ வரை அதிகம் விற்பனைக்கு வந்திரு ந்தாலும், தரத்துக்கு முக்கியத்துவம் தராததால் தேயிலை தூள் ரூ.100க்கும் கீழ் விற்கப்பட்டதாகவும், தரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் ஏலத்தில் கூடுதல் விலை கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் தேயிலை வா்த்தகா்கள் தெரிவித்துள்ளனா்.

    • தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன
    • தேர் அலங்கரிக்கப்பட்டு, அதில் திருவுருவ சிலையுடன் தேர்பவனி நடந்தது.

    குன்னூர்,

    குன்னூரில் நூற்றாண்டு பழமைவாய்ந்த புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இங்கு தேர்பவனி திருவிழா நிகழ்ச்சிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அப்போது தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து புனித அந்தோணியார் சர்ச்சில் இருந்து தேவாலயம் வடிவமைப்பில் தேர் அலங்கரிக்கப்பட்டு, அதில் திருவுருவ சிலையுடன் தேர்பவனி நடந்தது. அந்தோனியார் கோவிலில் தொடங்கிய தேர்பவனி குன்னூர் மவுண்ட் ரோடு, ஒய்.எம்.சி கார்னர், மார்க்கெட், டாக்சி ஸ்டாண்ட், பஸ் நிலையம் வழியாக மீண்டும் மவுண்ட் ரோடு வந்து தேவாலயம் சென்றடைந்தது. குன்னூர் அந்தோணியார் தேர்பவனியில் இந்துக்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டுறவுத் துறை சார்பில் 23 லட்ச ரூபாய் மதிப்பில் பெறப்பட்டுள்ள ஏ.டி.எம் வாகனத்தை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள இளித்துறை கிராமத்தில் கலெக்டர் அம்ரித் முன்னிலையில் கூட்டுறவுத் துறை சார்பில் 23 லட்ச ரூபாய் மதிப்பில் பெறப்பட்டுள்ள ஏ.டி.எம் வாகனத்தை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசுகையில், அதிகளவு சிறு, குறு விவசாயிகள் உள்ள நீலகிரி மாவட்டத்தில் தொலை தூர கிராம விவசாயிகள் பயன் பெறுகின்ற வகையில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் ஏ.டி.எம். வாகன மூலம் பண பரிமாற்றம் செய்வதோடு, மின் கட்டணம், தொலை பேசி கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை சிரமமின்றி செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஏ.டி.எம். வாகனத்தில் வங்கி சேவைகள் மற்றும் நிதியியல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொலைக்காட்சி பெட்டி நிறுவப்பட்டுள்ளது என்றார்.

    ×