குன்னூரில் விபத்தில் சிக்கிய சுற்றுலா பஸ்

2 பெண்கள் உள்பட 22 பேர் ஊட்டிக்கு தனியார் பஸ் மூலம் சுற்றுலா வந்தனர்குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னூரில் விபத்தில் சிக்கிய சுற்றுலா பஸ்
Published on

குன்னூர்,

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த முத்தப்பாளையம் பகுதியில் உள்ள டைல்ஸ் கம்பெனியில் இருந்து 2 பெண்கள் உள்பட 22 பேர் ஊட்டிக்கு தனியார் மினி பஸ் மூலம் சுற்றுலா வந்தனர். அங்கு உள்ள சுற்றுலா தலங்களை சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் ஈரோடு நோக்கி புறப்பட்டனர்.

குன்னூர் அடுத்து காட்டேரி பகுதியில் வேன் சென்றது. அப்போது ஓடும் பஸ்சில் டிரைவர் குழந்தைசாமிக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனால் வாகனம் நிலைதடுமாறி, சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது.

இந்த பஸ் ஒருவேளை மாற்று திசையில் திருப்பி இருந்தால், சுமார் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து இருக்கும். அதிர்ஷ்ட வசமாக தடுப்பு சுவரில் வாகனம் மோதியது. இதனால் வண்டியில் இருந்த 22 பேர் உயிர்தப்பினர்.சுற்றுலா பஸ் டிரைவருக்கு விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com