என் மலர்
நீங்கள் தேடியது "Rally for peace"
- 2 பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.
- 500-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
குன்னூர்,
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 2 பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இதில் பலர் உயிரிழந்தனர். அங்கு உள்ள தேவாலயங்கள் சூறையாடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் மணிப்பூரில் அமைதி, சமாதானம் நிலவ வேண்டி குன்னூர் பெட்போர்டு பகுதியில் அமைதி ஜெப பேரணி நடத்தப்பட்டது. இதில் அனைத்து திருச்சபைகளைும் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அப்போது மணிப்பூர் மாநிலத்தில் சமாதானம், பாதுகாப்பிற்காக மத்திய அரசு நல்ல முடிவெடுத்து அதற்கான வழிமுறைகளை செய்ய வேண்டும் என்று திருச்சபை தலைவர்கள் பேரணியில் கோரிக்கை விடுத்தனர். குன்னூர் பெட்போர்டு பகுதியில் தொடங்கிய பேரணி மவுண்ட் ரோடு வழியாக குன்னூர் அந்தோணியார் ஆலயம் வந்தடைந்தது.






