search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்தனமரம்"

    • உலகிலேயே மிக விலை உயர்ந்த மரம் சந்தன மரம் தான்.
    • நம்முடைய உள்நாட்டு தேவைக்கு கூட வெளிநாடுகளில் இருந்து சந்தனத்தை இறக்குமதி செய்து வருகிறோம்.

    பல்லடம்:

    காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் 'கோடிகளை கொடுக்கும் சந்தனம் - சாமானியர்களுக்கும் சாத்தியம்' என்ற விவசாய கருத்தரங்கு பல்லடம் அருகேயுள்ள முத்தாண்டிபாளையத்தில் தனியார் சந்தன பண்ணையில் நடைபெற்றது. இதில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து கலந்து கொண்டு பேசினார்.

    காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் பேசுகையில், உலகிலேயே மிக விலை உயர்ந்த மரம் சந்தன மரம் தான். இம்மரத்தை வளர்ப்பதன் மூலம் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு மரத்தில் இருந்து மட்டும் குறைந்தப்பட்சம் ரூ.2 லட்சமும், 25 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரையிலும் விவசாயிகள் சம்பாதிக்க முடியும். சந்தன மரத்தை எல்லா வகையான மண்ணிலும் வளர்க்க முடியும். இம்மரம் உப்பு தண்ணீரிலும் கூட வளரும் சாத்தியம் உள்ளது. இம்மரத்திற்கு இவ்வளவு சிறப்புகள் இருந்தும் திருட்டு பயம் காரணமாக இதை வளர்க்க தயங்குகின்றனர். ஆனால், தற்போதைய தொழில்நுட்ப காலத்தில் மைக்ரோ சிப், சென்சார் மற்றும் ரேடார் தொழில்நுட்பம் என பல்வேறு விதமான தொழில்நுட்ப கருவிகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. அடுத்த 15 ஆண்டுகளுக்குள் இன்னும் பல கருவிகள் வந்துவிடும். எனவே, சந்தன மரத்தை பயமின்றி நடவு செய்யலாம். இந்திய சந்தனத்திற்கு உலகளவில் பெரிய சந்தை வாய்ப்பு உள்ளது. 1950-ம் ஆண்டுகளில் சுமார் 4,000 டன் வரை சந்தனத்தை நாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருமானம் ஈட்டினோம். ஆனால், தற்போது நம்முடைய உள்நாட்டு தேவைக்கு கூட வெளிநாடுகளில் இருந்து சந்தனத்தை இறக்குமதி செய்து வருகிறோம்.

    எனவே சந்தன மரத்திற்கான தேவை நம்மிடம் அதிகம் இருக்கிறது. அதை பூர்த்தி செய்வதற்கு உள்நாட்டில் விவசாயிகள் அதிகளவில் சந்தன மரங்களை வளர்க்க வேண்டும். சந்தன மரத்தை வெட்டி விற்பனை செய்வதில் உள்ள சட்ட சிக்கல்களும் படி படியாக நீங்கி வருகிறது. சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தில் கூட வன சட்டங்கள் எதுவும் விவசாய நிலங்களுக்கு பொருந்தாது என கூறியுள்ளது. இதன்மூலம், விவசாயிகள் தாங்கள் விரும்பும் எந்த வகையான மரத்தையும் தங்கள் நிலங்களில் வளர்த்து விற்க முடியும். எனவே, விவசாயிகள் கோடீஸ்வரர்களாக மாறுவதற்கு சந்தன மரம் வளர்ப்பது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்றார்.

    இதில் திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சாமிநாதன், விவசாய சங்கத் தலைவர்கள், முன்னோடி விவசாயிகள், வனத்துறை அதிகாரிகள், வேளாண் விஞ்ஞானிகள், சுமார் 2000க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    பட்டா நிலத்தில் உள்ள சந்தன மரங்களை மர்மநபர்கள் வெட்டினர்.

    குன்னூர்,

    குன்னூர் அருகே உள்ள கட்டபெட்டு சரகம் கூக்கல்தொரை அருகே உள்ள கம்பட்டிகம்பை சாலையோரத்தில் தனியார் பட்டா நிலத்தில் உள்ள சந்தன மரங்களை மர்மநபர்கள் வெட்டுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் கட்டபெட்டு சரக வனச்சரகர் செல்வக்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தன மரத்தினை வெட்டிக் கொண்டிருந்த 5 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் குஞ்சப்பனை, கூக்கல் தொரை மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பால்ராஜ், சவந்திரபாண்டியன், செல்வன், சிவக்குமார்மற்றும் ஜாகீர்உசேன் என்பது தெரியவந்தது. போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு 2.20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    ×