search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குட்கா விற்பனை"

    • 27 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
    • தொழிலை விட்டு விட்டு வீட்டில் இருந்தார்.

    பீளமேடு

    கோவை பீளமேடு தொட்டிபாளையம் பிரிவை சேர்ந்தவர் முத்து பெருமாள் (வயது 34), இவர் காளப்பட்டி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மளிகை கடை நடத்தி வந்தார். சமீபத்தில் அவருக்கு ஏற்பட்ட விபத்தில் தனது தொழிலை விட்டு விட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் அவரது வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக பீளமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரது வீட்டில் சோதனை செய்தபோது 27 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர். 

    • குட்கா பொட்டலங்களை பறிமுதல்
    • ஆம்பூரில் உள்ள கடைகளில் போலீசார் திடீர் சோதனை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் குட்கா விற்பனையை தடுக்க மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தலைமை ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் யில், டவுன் போலீசார் ஆம்பூரில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது குட்கா விற்றதாக புதுமனை கே.எம் நகர் முதல் தெருவை சேர்ந்த கலீம் (வயது 33), ரஹ் மான் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த முகமது ஆசிப் (27), வெங்கிளி பகுதியை சேர்ந்த பாரூக் (47), சாய்பான்ஷா கொல்லை பகுதியை சேர்ந்த அப்ரோஸ் (39), கஸ்பா பி பகு தியை சேர்ந்த ரபீல் உல் (59) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து குட்கா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

    • பொன்னேரியை அடுத்த திருஆயர்பாடியில் உள்ள குளிர்பான கடையில் குட்கா, புகையிலை விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • கடையில் போலீசார் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை விற்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த திருஆயர்பாடியில் உள்ள குளிர்பான கடையில் குட்கா, புகையிலை விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அந்த கடையில் போலீசார் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து வியாபாரி ஹரிபாபுவை போலீசார் கைது செய்தனர்.

    • 72 பாக்கெட்டுகள் பறிமுதல்
    • வியாபாரி கைது

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே பெரியாங்குப்பம் ஊராட்சி எம்சி ரோட்டில் நேற்று மாலை ஆம்பூர் தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது எம்சி ரோட்டில் உள்ள மளிகை கடையில் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வியாபாரியை கைது செய்தனர். போலீசார் கடையில் இருந்த தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா பொருட்கள் 72 பாகெட்களை பறிமுதல் செய்தனர்.

    • கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பில் உழைப்பாளர்கள் அதிகம் உள்ளனர்.
    • குட்கா மற்றும் அது சம்பந்தமான போதை பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த தச்சூரில் கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு வாரிய தலைவர் பொன்குமார் தலைமையில் மாநாடு நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர் நாசர் கலந்து கொண்டு பேசினார். வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பில் உழைப்பாளர்கள் அதிகம் உள்ளனர். வியாபாரிகளும் உழைப்பாளர்கள் தான் கூட்டமைப்பிற்கு வியாபாரிகள் எப்பொழுதும் துணை நிற்பார்கள். தமிழக அரசு போதை பொருள் தடுப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு வியாபாரிகள் பேரமைப்பு துணை நிற்கும்.

    குட்கா மற்றும் அது சம்பந்தமான போதை பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். மாறாக எத்தனை முறை நடவடிக்கை எடுத்தாலும் மீண்டும் அதே தவறை கடை உரிமையாளர்கள் செய்தால் பேரமைப்பு மற்றும் வணிகர் சங்கம் நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விருத்தாசத்தில் குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
    • சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் பங்களா தெரு பகுதியில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார்.தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் அப்துல் மாலிக் என்பவர் தனது கடையில் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததை கண்டனர்.

    தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிந்து அப்துல் மாலிக்கை கைது செய்தனர். விசாரணையில் இவர் ஏற்கனவே குட்கா விற்பனையில் கைது செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கபட்டது. குட்கா விற்பனையில் 2-வது முறையாக கைது செய்யப்பட்டதால், அவரது கடைக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல்வைத்தனர்.

    • விழுப்புரம் அருகே குட்கா, பான் மசாலா விற்ற கடைக்கு வருவாய்த் துறையினர் முன்னிலையில் போலீசார் கடைக்கு சீல் வைத்தனர்.
    • தடை செய்யபட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    விழுப்புரம்:

    தமிழகம் முழுவதும் குட்கா, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருட்களை ஒழிப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.

    இதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் போலீசார் மூலம் எடுக்கப்பட்டு இதனை செய்பவர் மீது கடுமையாக தண்டிக்கப்படுபவர் எனவும் தெரிவித்தார்.இதன் மூலம் இந்த புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வோறை முழுமையாக தடுக்க விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தனிப்படை அமைத்து தீவிர சோதனை வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் விழுப்புரத்தில் இருந்து செஞ்சி சாலையில் உள்ள அப்பம்பட்டு பகுதியில் மளிகை கடை ஒன்று உள்ளது. அந்த கடையை அதே பகுதியை சேர்ந்த ராமு என்பவர் நடத்தி வருகிறார். அந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா போன்ற புைகயிலைப் பொருட்கள் மறைத்து வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவல் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று கடையில் சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பது உறுதியானது. உடனே செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து ராமுவை கைது செய்தனர். மேலும் வருவாய்த் துறையினர் முன்னிலையில் போலீசார் கடைக்கு சீல் வைத்தனர் தடை செய்யபட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • வியாபாரி கைது
    • ஜெயிலில் அடைப்பு

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை சுற்றுப்பகுதியில் கள்ள சாராயம் மது பாட்டில்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அச்சமங்கலம் அருகே உள்ள அடியத்தூர் கிராமத்தை சேர்ந்த திருப்பதி (வயது 54) என்பவர் அவரது பெட்டிக்கடையில் அரசு தடை செய்துள்ள ஹான்ஸ் பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்று கொண்டிருந்தது தெரிய வந்தது.

    இதனையெடுத்து போலீசார் அவரது கடையில் சோதனை செய்தபோது விற்பனைக்கு வைத்திருந்த 3 கிலோ குட்பா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து திருப்பதியை கைது செய்தனர். பின்னர் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    • மரக்காணம் அருகே போதை பொருள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
    • செட்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தக வுஸ்பாஷா பெட்டி கடைகளை போலீசார் சோதனை செய்தனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில்உள்ள சில கடைகளில் தடைசெய்யப்பட்ட பான், குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இது போல் போதை ப்பொருட்கள்விற்பனை செய்பவர்களை காவல் துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துவருகின்றனர். இந்நிலையில் மரக்காணம் அருகே அனுமந்தை பஸ் நிறுத்தம் மற்றும் செட்டிக்குப்பம் பகுதியில் உள்ள ஒரு சிலகடைகளில் பான், குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்க ள்விற்பனை செய்ய ப்படுவதாக மரக்காணம் போலீசார்க்கு ரகசிய தகவல்கிடைத்துள்ளது. இதனால் அனுமந்தை கிராமம் மாரியம்மன் கோவில்தெருவைச் சேர்ந்த வள்ளி, செட்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தக வுஸ்பாஷா பெட்டி கடைகளை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்களது கடைகளில் பான், குட்கா ஆகியதடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் இருந்துள்ளது. இதனால் போதைபொருட்களை பறிமுதல் செய்து 2 கடைகளுக்கும் போலீசார்சீல்வைத்தனர்.

    • 10 கிலோ குட்கா வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கேத்தனூரை சேர்ந்த நடராஜன் மகன் கணேசன் (வயது 45 ). இவர் பல்லடம்- உடுமலை சாலையில் உள்ள கேத்தனூரில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் குட்கா விற்பனை செய்வதாக காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு போலீசார் சென்று சோதனை செய்ததில் 10 கிலோ குட்கா வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். உடனடியாக கணேசனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 கிலோ குட்காவை கோப்புபடம். செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

    • அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், குட்கா அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதை தடுப்பதற்காகபோலீசார் பல்வேறு நடவடிக்கை
    • 30 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் குட்கா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், குட்கா அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதை தடுப்பதற்காகபோலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் குமரி, கேரளா எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகள் வழியாக கடந்து செல்கின்ற வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

    இந்நிலையில் நேற்று உண்ணாமலைக்கடை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் கடைகளில் சோதனை செய்தபோது அப்பகுதியில் விஜயன் (வயது 51) என்பவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட 30 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் குட்கா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதையடுத்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் விஜயன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சில்லரை வியாபாரமாக உள்ளூரைச் சேர்ந்த சிலர் வாங்கி, மளிகைக்கடை, பெட்டிக்கடைகளுக்கு சப்ளை செய்கின்றனர்.
    • போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறை சென்று வந்தாலும் மீண்டும் அதே தொழிலை செய்கின்றனர்.

    அவிநாசி,

    அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது போலீசார் சோதனை நடத்தி, பான் பராக், குட்கா விற்பனை செய்வோரை கைது செய்து வருகின்றனர். சமீபத்தில் அவிநாசி பஸ் நிலையம் ,கருவலூர் உள்ளிட்ட இடங்களில் குட்கா விற்பனை செய்த வியாபாரிகளை கைது செய்தனர்.

    போலீசார் கூறுகையில், வெளி மாநிலங்களில் இருந்து பான்பராக், குட்கா போன்ற பொருட்களை மொத்தமாக வாங்கி வரும் வியாபாரிகளிடம் இருந்து சில்லரை வியாபாரமாக உள்ளூரைச் சேர்ந்த சிலர் வாங்கி, மளிகைக்கடை, பெட்டிக்கடைகளுக்கு சப்ளை செய்கின்றனர்.கடைக்காரர்கள்ஒரு பாக்கெட் 10 முதல்15 ரூபாய் என்ற விலையில் வாங்கி வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு ஒரு பாக்கெட் 50 முதல் 60 ரூபாய் வரை விற்கின்றனர்.

    ஒரு பாக்கெட்டுக்கு 35 முதல் 40 ரூபாய்க்கு மேல் லாபம் வைத்து விற்பதன் மூலம் தினமும்சில ஆயிரம் ரூபாயை கண்ணில் பார்த்து விடுகின்றனர். இந்த வியாபாரத்தில் ருசி கண்ட பலரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறை சென்று வந்தாலும் மீண்டும் அதே தொழிலை செய்கின்றனர் என்றனர்.

    நகர மற்றும் கிராமப்புறங்களில் பான் பராக், குட்கா விற்பனை செய்வோர் குறித்து விவரங்களை போலீசார் தெரிந்து வைத்திராமல் இல்லை. எங்கு எந்தெந்த வகையில் அவர்கள் இத்தகைய சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர் என்பதை உள்ளூர் போலீசார் நன்கு அறிந்து வைத்துள்ளனர். எனவே ரோந்து போலீசார், தங்கள் எல்லைக்குள் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க செய்வதற்கான உத்தரவை உயரதிகாரிகள் பிறப்பித்தால் குற்றம் வெகுவாக குறையும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×