விருத்தாசத்தில் அதிரடி: குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல்

விருத்தாசத்தில் குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
விருத்தாசத்தில் அதிரடி: குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல்
Published on

கடலூர்:

விருத்தாசலம் பங்களா தெரு பகுதியில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார்.தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் அப்துல் மாலிக் என்பவர் தனது கடையில் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததை கண்டனர்.

தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிந்து அப்துல் மாலிக்கை கைது செய்தனர். விசாரணையில் இவர் ஏற்கனவே குட்கா விற்பனையில் கைது செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கபட்டது. குட்கா விற்பனையில் 2-வது முறையாக கைது செய்யப்பட்டதால், அவரது கடைக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல்வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com