கள்ள சாராயம், குட்கா விற்பனை

வியாபாரி கைதுஜெயிலில் அடைப்பு
கள்ள சாராயம், குட்கா விற்பனை
Published on

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை சுற்றுப்பகுதியில் கள்ள சாராயம் மது பாட்டில்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அச்சமங்கலம் அருகே உள்ள அடியத்தூர் கிராமத்தை சேர்ந்த திருப்பதி (வயது 54) என்பவர் அவரது பெட்டிக்கடையில் அரசு தடை செய்துள்ள ஹான்ஸ் பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்று கொண்டிருந்தது தெரிய வந்தது.

இதனையெடுத்து போலீசார் அவரது கடையில் சோதனை செய்தபோது விற்பனைக்கு வைத்திருந்த 3 கிலோ குட்பா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து திருப்பதியை கைது செய்தனர். பின்னர் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com