search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் அருகே  குட்கா, பான் மசாலா விற்ற கடைக்கு சீல் வைப்பு
    X

    விழுப்புரம் அருகே குட்கா, பான் மசாலா விற்ற கடைக்கு சீல் வைப்பு

    • விழுப்புரம் அருகே குட்கா, பான் மசாலா விற்ற கடைக்கு வருவாய்த் துறையினர் முன்னிலையில் போலீசார் கடைக்கு சீல் வைத்தனர்.
    • தடை செய்யபட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    விழுப்புரம்:

    தமிழகம் முழுவதும் குட்கா, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருட்களை ஒழிப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.

    இதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் போலீசார் மூலம் எடுக்கப்பட்டு இதனை செய்பவர் மீது கடுமையாக தண்டிக்கப்படுபவர் எனவும் தெரிவித்தார்.இதன் மூலம் இந்த புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வோறை முழுமையாக தடுக்க விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தனிப்படை அமைத்து தீவிர சோதனை வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் விழுப்புரத்தில் இருந்து செஞ்சி சாலையில் உள்ள அப்பம்பட்டு பகுதியில் மளிகை கடை ஒன்று உள்ளது. அந்த கடையை அதே பகுதியை சேர்ந்த ராமு என்பவர் நடத்தி வருகிறார். அந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா போன்ற புைகயிலைப் பொருட்கள் மறைத்து வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவல் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று கடையில் சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பது உறுதியானது. உடனே செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து ராமுவை கைது செய்தனர். மேலும் வருவாய்த் துறையினர் முன்னிலையில் போலீசார் கடைக்கு சீல் வைத்தனர் தடை செய்யபட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×