search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ண ஜெயந்தி"

    • கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினர்.
    • கட்டச் சோலைப்பட்டி கிராமத்தார்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

    மேலூர்

    மேலூர் தாலுகா வெள்ளலூர் சேகரம், கட்டச்சோலை பட்டியல் அமைந்திருக்கும் ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் சமேத பாமா ருக்மணி கோவிலின் 16-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. பக்தர்கள் மாலை அணிந்து 15 நாட்கள் விரதம் இருந்து வந்தனர்.

    கோபாலகிருஷ்ண கோவில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக சென்று பின்பு கோவில் வந்தடைந்தனர். பின்னர் கிருஷ்ணனுக்கு பாலா பிஷேக நடைபெற்றது. உரியடித்தல் தீப ஆராதனை நடைபெற்றது. பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கோவில் அருகே உள்ள விநாயகர்கோவில் மண்டபத்தில் சிறப்பு அன்ன தானம் நடைபெற்றது.

    இந்த அன்னதானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட னர். கோபாலகிருஷ்ணன் சுவாமி ஊர்வலம் இடைய வலசை, இடையர்கோவில் பட்டி, இந்திராநகர், வெள்ள லூர் நகரத்தார் வீதி, வெள்ள லூர் மந்தை கருப்பன சுவாமி கோவில், ஏழை காத்த அம்மன் கோவில், அரசு மருத்துவமனை, மன்ற மலை ஒத்தப்பட்டி வழியாக சுவாமி கோவில் வந்தடைந் தது. சிறுவர்களுக்கு விளை யாட்டு போட்டு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கட்டச் சோலைப்பட்டி கிராமத்தார்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது.
    • பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கண்களை கட்டிக்கொண்டு உறியடித்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் பாதயாத்திரையின் இரண்டாம் கட்டத்தை தென்காசி மாவட்டத்தில் தொடங்கினார்.

    இந்நிலையில், நேற்று அவர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் சட்டசபை தொகுதிகளில் பாதயாத்திரை மேற்கொண்டார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவில் அருகே மாலை 4 மணிக்கு கட்சியினருடன் நடைபயணத்தை தொடங்கினார். அங்கிருந்து தெற்கு ரத வீதி, தேரடி, பஸ் நிலையம், சின்னக்கடை பஜார் ஆகிய பகுதிகள் வழியாக நடந்து வந்தார். வழிநெடுகிலும் அண்ணாமலைக்கு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறை அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ராட்டையில் அண்ணாமலை நூல் நூற்றார். ஆண்டாள் கோவில் அருகில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கட்சியின் துண்டால் கண்களை கட்டிக்கொண்டு உற்சாகமாக உறி அடித்தார்.

    முன்னதாக, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலிலுக்கு அண்ணாமலை வந்து தரிசனம் செய்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயரையும் சந்தித்துப் பேசினார்.

    • ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மாலை விசேஷ பூஜைகள் நடைபெற்றது.
    • தூட்டார் தெருவில் உள்ள கிருஷ்ணர் கோவிலிலும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பெரியபாளையம்:-

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி, பஜார் வீதியில் ஸ்ரீராஜமன்னார் கிருஷ்ண பஜனை மந்திர தேவஸ்தான திருக்கோவில் உள்ளது.

    இக்கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு காலை மூலவருக்கு பால், தயிர், நெய் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    இதன் பின்னர், மகா அலங்காரம், மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. மதியம் கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


    மாலை சிறப்பு பூஜை, சிறப்பு ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதன்பின்னர், பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் மங்கள வாத்தியம் முழங்க, வானவேடிக்கையுடன் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதன் பின்னர், கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    மேலும், ஆரணி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஸ்ரீ ஆதி லட்சுமி சமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மாலை விசேஷ பூஜைகள் நடைபெற்றது. தூட்டார் தெருவில் உள்ள கிருஷ்ணர் கோவிலிலும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    • பள்ளியின் நிறுவனர் அன்பரசன் மற்றும் தாளாளர் சங்கீதா அன்பரசன் தலைமை தாங்கினார்கள்.
    • மாணவர்களுக்கு மாறுவேட போட்டி, நடன போட்டிகள் நடைபெற்றது.

    குருபரப்பள்ளி,  

    கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி கூட்டு ரோட்டில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ. பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் பள்ளியின் நிறுவனர் அன்பரசன் மற்றும் தாளாளர் சங்கீதா அன்பரசன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். பள்ளி முதல்வர் ஷர்மிளா வரவேற்றார். விழாவில் மாணவ, மாணவிகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வந்தனர்.

    கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மாணவர்களுக்கு மாறுவேட போட்டி, நடன போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் நிறுவனர் மற்றும் தாளளர் பரிசுகளை வழங்கினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் மேலாளர் பூபேஷ் செய்திருந்தார். 

    • குழந்தைகள் கிருஷ்ணர்- ராதை வேடம் அணிந்து நடனமாடினர்.
    • விளையாட்டுப் போட்டிகளில் சிவசக்தி வித்யாலயா பள்ளி மாணவர்கள் பதக்கங்கள் பெற்றனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தை அடுத்த ஆவுடையானுார் அருகே உள்ள பொடியனூர் சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஆசிரியர் தினவிழா மற்றும் கிருஷ்ண ஜெயந்தி தின விழா கொண்டாடப்பட்டது.

    பள்ளி முதல்வர் நித்யா தினகரன் தலைமை தாங்கினார். மாணவி சுதர்சினி வரவேற்று பேசினார். மாணவி வைஷ்ணவி ஆசிரியர் தின விழா கொண்டாடுவதன் நோக்கத்தை எடுத்து கூறினார். 10-ம் வகுப்பு மாணவிகள் பள்ளி ஆசிரியைகள் எவ்வாறு சிறந்த மாணவர்களை உருவாக்குகிறார்கள் என்பதை நாடகம் மூலம் எடுத்து கூறினர்.

    தொடர்ந்து கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குழந்தைகள் கிருஷ்ணர்- ராதை வேடம் அணிந்து நடனமாடினர். விழாவில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. முன்னதாக திசையன்விளை வி.எஸ்.ஆர். கல்விக்குழுமம் நடத்திய 4 மாவட்டங்களுக்கு இடையேயான கபாடி போட்டியில் பள்ளி மாணவர்கள் 0-14 மற்றும் யு-19 பிரிவில் விளையாடி வெற்றி கோப்பையை கைப்பற்றினர். மேலும் கோவில்பட்டியில் வித்யாபாரதி நடத்திய பல்வேறு விளையாட்டுப் போட்டிகளிலும் சிவசக்தி வித்யாலயா பள்ளி மாணவர்கள் பதக்கங்கள் பெற்றனர்.

    சுரண்டை எஸ்.ஆர். பள்ளியில் நடைபெற்ற பல்வேறு கலை-விளையாட்டு போட்டிகளிலும் மாணவர்கள் திறம்பட பங்கேற்று வெற்றி பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விழாவின்போது பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் மாணவர்களால் ஆசிரியைகளுக்கு நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டி களில் ஆசிரியைகள் உற்சாக மாக கலந்து கொண்டனர்.

    முடிவில் மாணவி ஆஸ்மி நன்றி கூறினார்.

    • மழலையர் பிரிவு மாணவ, மாணவிகள் கிருஷ்ணர், ராதை போன்று உடை அணிந்து பள்ளிக்கு வந்தனர்.
    • மாணவ- மாணவிகள் கிருஷ்ணர் பாட்டு பாடி நடனமாடி அசத்தினர்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மழலையர் பிரிவு மாணவர்கள் கிருஷ்ணர் போன்றும் மாணவிகள் ராதை போன்றும் உடை அணிந்து பள்ளிக்கு வந்தனர். கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணை போன்ற பொருட்களை பள்ளிக்குக் கொண்டு வந்தனர்.

    கிருஷ்ணர் மற்றும் ராதை போன்று வேடம் அணிந்து வந்த மாணவ- மாணவிகள் கிருஷ்ணர் பாட்டு பாடி நடனமாடி அசத்தினர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மழலையர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் அனுசியா செய்திருந்தார்.

    • மேலூர் கட்டச்சோலை பட்டியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.
    • கோவில் அருகே உள்ள விநாயகர்கோவில் மண்டபத்தில் சிறப்பு அன்ன தானம் நடைபெற்றது.

    மேலூர்

    மேலூர் தாலுகா வெள்ள லூர் சேகரம், கட்டச்சோலை பட்டியல் அமைந்திருக்கும் ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் சமேத பாமா ருக்மணி கோவிலின் 16-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. பக்தர்கள் மாலை அணிந்து 15 நாட்கள் விரதம் இருந்து வந்தனர்.

    கோபாலகிருஷ்ண கோவில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக சென்று பின்பு கோவில் வந்தடைந்தனர். பின்னர் கிருஷ்ணனுக்கு பாலா பிஷேக நடைபெற்றது. உரியடித்தல் தீப ஆராதனை நடைபெற்றது. பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வழி பட்டனர். கோவில் அருகே உள்ள விநாயகர்கோவில் மண்டபத்தில் சிறப்பு அன்ன தானம் நடைபெற்றது.

    இந்த அன்னதானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட னர். கோபாலகிருஷ்ணன் சுவாமி ஊர்வலம் இடைய வலசை, இடையர்கோவில் பட்டி, இந்திராநகர், வெள்ள லூர் நகரத்தார் வீதி, வெள்ள லூர் மந்தை கருப் பன சுவாமி கோவில், ஏழை காத்த அம்மன் கோவில், அரசு மருத்துவமனை, மன்ற மலை ஒத்தப்பட்டி வழியாக சுவாமி கோவில் வந்தடைந் தது. சிறுவர்களுக்கு விளை யாட்டு போட்டு நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை கட்டச் சோலைப்பட்டி கிராமத்தார்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்த னர்.

    • கிருஷ்ணருக்கு விருப்பமான வெண்ணெய், தயிர், பழங்கள், இனிப்பு பலகாரங்களைப் படைத்து, இறைவனை பக்தியுடன் வழிபட்டு மக்கள் மகிழ்வார்கள்.
    • ஸ்ரீ கிருஷ்ண பகவான் அவதரித்த இந்த இனிய நாளில், நாடெங்கும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி பெருக வேண்டும்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ''ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி'' வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    காக்கும் கடவுளாம் கண்ணபிரான் கிருஷ்ணராக அவதரித்த திருநாளை ''கிருஷ்ண ஜெயந்தி'' என்று மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் இந்த நன்னாளில், எனது இனிய ''கிருஷ்ண ஜெயந்தி'' நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த தினமான கிருஷ்ண ஜெயந்தியன்று, மக்கள் தங்கள் இல்லங்களில் அழகிய வண்ணக் கோலங்களிட்டு, வாயிற்களில் மாவிலை தோரணங்களைக் கட்டி, ஸ்ரீபாதம் எனப்படும் குழந்தைகளின் பிஞ்சு பாதச் சுவடுகளை மாவில் நனைத்து இல்லங்களில் வழிநெடுக பதித்து, கிருஷ்ணருக்கு விருப்பமான வெண்ணெய், தயிர், பழங்கள், இனிப்பு பலகாரங்களைப் படைத்து, இறைவனை பக்தியுடன் வழிபட்டு மக்கள் மகிழ்வார்கள்.

    ''குழப்பத்தையும், தடுமாற்றத்தையும் தவிர்த்து, தெளிந்த நீரைப்போல் மனதை நிலை நிறுத்தி, பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்தால், ஒருவர் எடுத்த காரியத்தில் வெற்றி பெற்று அனைத்து சுகங்களும், மன நிம்மதியும் கிடைக்கப் பெற்றவராய் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடலாம்'' என்ற கிருஷ்ண பகவானின் கீத உபதேசத்தை நாளும் மனதில் கொண்டு, ஸ்ரீ கிருஷ்ண பகவான் அவதரித்த இந்த இனிய நாளில், நாடெங்கும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி பெருக வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மேலும் ஆலிலைக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு.
    • ஆலிலையில்படுத்திருக்கும் கண்ணன் நமக்கு ஒரு பாடத்தையும் போதிக்கிறான்.

    கண்ணன் ஆலிலையில் படுத்திருப்பது ஏன்?

    தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம்.

    ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து தான் தட்சிணாமூர்த்தி ஞானம் தருகிறார்.

    பொன், பொருள், குடும்ப சுகம் மட்டுமின்றி மறைந்த முன்னோர்கள் மோட்சம் பெற பிதுர் தர்ப்பணத்துக்குரிய பிண்டம் போடும் சடங்கை ஆலமரத்துக்கு கீழே அமர்ந்து தான் செய்வார்கள்.

    எனவே தான் ஞானமும் கர்மத்திற்குரிய பலனையும் தருகின்ற ஆலமரத்தின் இலையில் கண்ணன் படுத்துக் கொண்டான்.

    மேலும் ஆலிலைக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு.

    இது வாடினாலும் கூட நொறுங்கிப் போவதில்லை.

    சருகானாலும் கூட மெத்தை மாதிரி இருக்கும்.

    இதுவும் கண்ணன் ஆலிலையை தேர்ந்தெடுக்க ஒரு காரணம் ஆகும்.

    ஓரளவு காய்ந்த ஆலிலையின் மேல் தண்ணீர் தெளித்தால், அது இழந்த பச்சையை பெறும் சக்தி வாய்ந்தது.

    கண்ணன் வாடாத வதங்காத ஆத்மா என்பதை இதன் மூலம் நிரூபிக்கிறான்.

    ஆலிலையில்படுத்திருக்கும் கண்ணன் நமக்கு ஒரு பாடத்தையும் போதிக்கிறான்.

    அடேபக்தனே! நீ எதற்கும் கவலைப்படாதே.

    என்னைப் போலவே நீ குழந்தை உள்ளத்துடன் இருந்தால், உலக வாழ்க்கை என்ற கொடுமையான அலையால் தாக்கப்படமாட்டாய்.

    குடும்பம் என்ற சம்சாரக்கடலில் விழுந்து, தத்தளித்து அனுபவிக்கும் இன்ப துன்பங்களை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டு என்னைப் போல் ஆனந்தமாய் இரு என்கிறான்.

    இது தான் கண்ணன் ஆலமர இலையில் மிதக்கும் தத்துவம் ஆகும்.

    • இந்த விழாவின் பின்னணியில் ஒரு தத்துவம் உள்ளது.
    • ஆனால் பரம்பொருள் காலடியை சென்று சேருவது என்பது அவ்வளவு எளிதான விஷயமா?

    கிருஷ்ண ஜெயந்தி-உறியடி விளக்கும் வாழ்க்கை தத்துவம்

    கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழாதான் மிக பிரச்சித்தமாக நடைபெறும்.

    ஒவ்வொரு ஊரின் மரபுக்கு ஏற்ப உறியடி திருவிழா பல வகைகளாக நடத்தப்படுகிறது.

    இந்த விழாவின் பின்னணியில் ஒரு தத்துவம் உள்ளது.

    பானை என்பது பரம்பொருள்.

    அது நமக்கு எட்ட முடியாத இடத்தில் இருக்கிறது.

    பரம்பொருளின் காலடியில் ஐக்கியமாகி முக்தி அடைய வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு ஆத்மாவின் எண்ணமாக இருக்கும்.

    ஆனால் பரம்பொருள் காலடியை சென்று சேருவது என்பது அவ்வளவு எளிதான விஷயமா?

    எத்தனை, எத்தனை அலைக்கழிப்புகளில் சிக்கி அல்லாட வேண்டியதிருக்கிறது.

    லௌகீக வாழ்க்கையில், ஆசா பாசங்களுக்கு இடம் கொடுத்து அல்லல்பட வேண்டியுள்ளது.

    இந்த தடைகளையெல்லாம் மீறி, கடந்து, தட்டுத் தடுமாறி பரம்பொருளை நெருங்க வேண்டியதுள்ளது.

    அப்போது நமது சிந்தனை, செயல் எல்லாம் பரம்பொருளிடம் சென்று சேர வேண்டும் என்ற ஒரே சிந்தனையாக, உறுதியான சிந்தனையாக இருக்க வேண்டும்.

    இந்த ஒரு முக சிந்தனையே அகங்காரம் எனும் உறியடி பானையை உடைக்க வைக்கும்.

    அகங்காரம்போய்விட்டால் இறையருளும், முக்தி எனும் பாக்கியமும் தேடி வரும்.

    உறியடி திருவிழாவில் இப்படி மாபெரும் தத்துவம் இருப்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

    கிருஷ்ணர் வழிபாட்டின் ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு தத்துவத்தை கொண்டுள்ளது.

    அவற்றை உணர்ந்து, புரிந்து கிருஷ்ணரை வழிபட்டால் பரம்பொருளின் அருள் பார்வை பெற்று ஆனந்தமாக வாழலாம்.

    • இப்படி வேடமிடும் குழந்தைகள் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.
    • குழந்தைகளுக்கு மூர்க்கக் குணம் வராது.

    கிருஷ்ண வழிபாட்டு பலன்கள்

    கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று சிறுவர், சிறுமிகளை மறக்காமல் கிருஷ்ணரை வழிபட செய்ய வேண்டும்.

    அவர்கள் கிருஷ்ணரின் கதைகளை சொல்லி வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

    கிருஷ்ணரை வழிபட, வழிபட மாணவர்களுக்கு பாடங்களை திட்டமிட்டு படிக்கும் புத்திசாலித்தனமும், ஆற்றலும் அதிகரிக்கும்.

    பெரும்பாலான ஊர்களில் கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று சிறுவர், சிறுமிகளை கண்ணன், ராதை போன்று வேடமிட்டு ஆராதனை செய்வார்கள்.

    இப்படி வேடமிடும் குழந்தைகள் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.

    கிருஷ்ணரை வழிபட்டால் அகந்தை அகலும்.

    குழந்தைகளுக்கு மூர்க்கக் குணம் வராது.

    கிருஷ்ணரை வழிபடும் இளைஞர்கள் தர்மசீலர்களாக வாழ்வார்கள்.

    பெண்கள் கிருஷ்ணரை மனம் உருக வழிபட்டால் திருமண தடைகள் விலகி கல்யாணம் கை கூடும்.

    விவசாயிகள் கண்ணனை கும்பிட்டால் வயல்களில் விளைச்சல் பெருகும்.

    மாடுகள் எண்ணிக்கை பெருகி கடன்கள் தீரும்.

    தொழில் அதிபர்கள் கிருஷ்ணனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தால் புகழ் உண்டாகும்.

    தன்னை நாடி வரும் அரசியல்வாதிகளின் நிர்வாக திறமையை கிருஷ்ணர் அதிகரிக்க செய்வார்.

    கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்த சீடை, அகல், லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, வெண்ணை, பால் கோவா போன்றவைகளை படைத்து வழிபட வேண்டும்.

    கிருஷ்ண நாமத்தை உச்சரித்தப்படி கோகுலாஷ்டமியை கொண்டாட வேண்டும்.

    யார் ஒருவர் கிருஷ்ணரை ஸ்தோத்திரங்களால் துதித்து வணங்குகிறார்களோ, அவர் நாமத்தையே உச்சரித்தப்படி இருக்கிறார்களோ, அவர்களுக்கு புண்ணிய உலகை சென்று அடையும் பாக்கியம் கிடைக்கும்.

    • இப்படி பாதம் வரைவதில் சைவ, வைணவ ஒற்றுமை இருப்பதாக சொல்கிறார்கள்.
    • கோவிந்தா என்ற சொல்லுக்கு “கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன்” என்று பொருளாகும்.

    சைவ வைணவத்தை இணைக்கும் கிருஷ்ணர் பாதம்

    கிருஷ்ணர் சிறுவனாக இருந்தபோது வெண்ணை திருடி தின்றார்.

    அப்போது வெண்ணை சிதறி அவர் கால்களில் விழுந்தது.

    அதோடு கிருஷ்ணர் நடந்ததால், கிருஷ்ணர் கால் தடம் பதிந்தது.

    அதை நினைவு படுத்தவே கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று மாவால் கிருஷ்ணரின் கால் சுவடு பதிக்கப்படுகிறது.

    மேலும் இது நம் வீட்டுக்கு கிருஷ்ணர் வருவதை குறிக்கிறது.

    இப்படி பாதம் வரைவதில் சைவ, வைணவ ஒற்றுமை இருப்பதாக சொல்கிறார்கள்.

    குழந்தைகளின் பாத வடிவ சுவடு பார்ப்பதற்கு 8 போன்று இருக்கும். அதற்கு மேல் 5 விரல் பதிவுகள் இருக்கும்.

    இதில் 8 என்பது "ஓம் நமோ நாராயணா" என்ற மந்திரத்தையும், 5 என்பது "நமசிவாய" என்ற மந்திரத்தையும் பிரதிபலிக்கிறது.

    இப்படி எல்லாருக்கும் அருளும் கிருஷ்ணரை வழிபடும்போது, "கோவிந்தா"என்று சொல்லி வழிபடுவது மிகுந்த பலன்களைத் தரும்.

    கோவிந்தா என்ற சொல்லுக்கு "கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன்" என்று பொருளாகும்.

    யார் ஒருவர் கிருஷ்ணரை கோவிந்தா, கோவிந்தா என்று சொல்லி வணங்குகிறார்களோ., அவர்களுக்கு பசுதானம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

    ×