என் மலர்
உள்ளூர் செய்திகள்

ட்ரஷர் ஐலண்ட் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா
- மழலையர் பிரிவு மாணவ, மாணவிகள் கிருஷ்ணர், ராதை போன்று உடை அணிந்து பள்ளிக்கு வந்தனர்.
- மாணவ- மாணவிகள் கிருஷ்ணர் பாட்டு பாடி நடனமாடி அசத்தினர்.
தென்காசி:
செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மழலையர் பிரிவு மாணவர்கள் கிருஷ்ணர் போன்றும் மாணவிகள் ராதை போன்றும் உடை அணிந்து பள்ளிக்கு வந்தனர். கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணை போன்ற பொருட்களை பள்ளிக்குக் கொண்டு வந்தனர்.
கிருஷ்ணர் மற்றும் ராதை போன்று வேடம் அணிந்து வந்த மாணவ- மாணவிகள் கிருஷ்ணர் பாட்டு பாடி நடனமாடி அசத்தினர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மழலையர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் அனுசியா செய்திருந்தார்.
Next Story






