search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரிக்கெட் போட்டி"

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்தது
    • வெற்றி பெற்ற அணிக்கு அமைச்சர் பரிசு வழங்கினார்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆற்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

    இதில் வெற்றி பெற்ற அணிக்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பரிசு வழங்கினார்.

    இதில் தி.மு.க மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் வினோத் காந்தி, ஆற்காடு எம்.எல்.ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட பொருளாளர் ஏ.கே.சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. வழங்கினார்
    • 24 அணிகள் கலந்துகொண்ட மாபெரும் கிரிக்கெட் போட்டி கடந்த 3 மாதங்களாக நடந்தது

    ஆரல்வாய்மொழி :

    தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 24 அணிகள் கலந்துகொண்ட மாபெரும் கிரிக்கெட் போட்டி கடந்த 3 மாதங்களாக நடந்தது. இந்நிலையில் நேற்று இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன் தலைமை தாங்கினார். விழாவில் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவரும், நகர அ.தி.மு.க. செயலாளருமான முத்துக்குமார், தோவாளை ஊர் தலைவர்களாக கேசவமுருகன், வேலாயுதம், பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி, தோவாளை ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகி பகவதியப்பன், ஆசிரியர் சேகர் மற்றும் பொதுமக்கள் ஊர் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க தொகையும், கோப்பையும் வழங்கப்பட்டது. சக்தி மகளிர் டிரஸ்ட், பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் இணைந்து போட்டியை நடத்தின.

    • மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார்.
    • தருமபுரி அப்துல் கலாம் கிரிக்கெட் கிளப் அணிக்கு ரூ.1,00,000 ரொக்க பணம் மற்றும் கோப்பையை வழங்கினார்.

    தருமபுரி,

    தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி மாவட்டத்தில் 5 இடங்களில் நடைபெற்றது.

    இதற்கான இறுதிப் போட்டி கடத்தூர் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி விளையாட்டு மைதா–னத்தில் நடைபெற்றது.

    இந்த போட்டிகளில் தருமபுரி அணி முதலி–டத்தையும், மாரண்டஹள்ளி அணி 2-ம் இடத்தையும், பென்னாகரம் அணி 3-ம் இடத்தையும், ஆலமரத்துப் பட்டி அணி 4-ம் இடத்தை யும் பிடித்தது.

    போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கும் விழா நடை–பெற்றது. விழாவுக்கு மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார்.

    விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் பாம்பே சக்தி, பாலாஜி, சசிக்குமார், சதிஸ், செந்தமிழ், தினேஷ் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் நிவேதா ஜெஷிகா ஆகியோர் முதலிடம் பெற்ற தருமபுரி அப்துல் கலாம் கிரிக்கெட் கிளப் அணிக்கு ரூ.1,00,000 ரொக்க பணம் மற்றும் கோப்பையை வழங்கினார்கள்.

    இதேபோன்று ரூ.2,20,000 மதிப்புள்ள ரொக்க தொகை 2-ம், 3-ம் பரிசு மற்றும் ஆறுதல் பரிசுகள் 7 அணி–களுக்கு வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கடத்தூர் ஒன்றிய, நகர தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது.
    • கிரிக்கெட் தளம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி இளைஞர்களும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வெங்கா நல்லூரில் இந்திரன் கிரிக்கெட் கிளப் சார்பில் விருதுநகர் மாவட்ட அளவிலான 4-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடை பெற்றது. 10 ஓவர் கொண்ட போட்டி நாக் அவுட் முறையில் போட்டி நடந்தது.

    இதில் 45 கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்ட னர். முதல் பரிசை ராஜபாளையம் ஆக்டிவ் சோலைசேரி அணி 83 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்று பரிசுக்கான தொகை ரூ.9,011, வெற்றி கோப்பை யும் தட்டி சென்றது.

    2-ம் பரிசை தெற்கு வெங்காநல்லூர் இந்திரன் அணி 64 புள்ளிகள் பெற்று ரூ.6,011 வெற்றி கோப்பையை யும் வென்றது. முதல் மற்றும் 2-ம் பரிசுகள் எம்.பி. தேசிங்கு ராஜா பண்ணை நினைவாக வழங்கப்பட்டது. பரிசுகளை ரவிராஜா, பேராசிரியர் கந்தசாமி வழங்கி பாராட்டி பேசினர்.

    3-ம் பரிசை தென்மலை 11 ஸ்டார் அணியும், 4-ம் பரிசை மீனாட்சிபுரம் 11 ஸ்டார் அணியும், 5-ம் பரிசை ராஜபாளையம் எங்ஸ்டார் அணியும் பெற்ற னர்.

    ராஜபாளையம் வட் டார அளவில் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதற்கு கிரிக்கெட் தளம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி இளைஞர்களும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காவேரிப்பாக்கம் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்தது
    • எம்.எல்.ஏ ஈஸ்வரப்பன் தொடங்கி வைத்தார்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பேரூர் திமுக சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு காவேரிப்பாக்கம் வார்டு கவுன்சிலரும் பேரூர் செயலாளருமான பாஸ் என்கிற நரசிம்மன் தலைமை வகித்தார். பேரூர் துணை செயலாளர்கள் தயாளன், தட்சணாமூர்த்தி, ஒன்றிய பிரதிநிதி பழனிச்சாமி, பொருளாளர் தியாகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பளாராக ஆற்காடு எம்.எல்.ஏ ஈஸ்வரப்பன் கலந்துகொண்டு கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் சுந்தரமூர்த்தி, மாவட்டத் துணைச் செயலாளர் துரைமஸ்தான், பேரூர் மாணவரணி தலைவர் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • காரைக்குடியில் டி 20 கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு கெமிக்கல்ஸ் கோவிலூர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
    • அந்த அணியின் ரகுபாலன் இறுதி போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் லத்தீப் மெமோரியல் கோப்பைக்கான 9-ம் ஆண்டு மாவட்ட அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி மைதானங்களில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நாக் அவுட் முறையில் போட்டிகள் நடைபெற்றன. பரபரப்பான இறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான தமிழ்நாடு கெமிக்கல்ஸ் கோவிலூர் அணியும் லத்தீப் மெமோரியல் காரைக்குடி அணியும் மோதின. இதில் தமிழ்நாடு கெமிக்கல்ஸ் கோவிலூர் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் கோப்பையை தட்டிச் சென்றது. அந்த அணியின் ரகுபாலன் இறுதி போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    தொடரின் சிறந்த பேட்ஸ்மேனாக டி.சி.பி.எல் அணியின் குணசீலன், பந்து வீச்சாளராக டி.சி.பி.எல் அணியின் ராமச்சந்திரன்ஆல்ரவுண்டராக லத்தீப் அணி வீரர் சுப்பிரமணியன், விக்கெட் கீப்பராக லத்தீப் அணி வீரர் மரகத கார்த்திக், சிறந்த இளம் வீரராக நைட்ஸ் அணி சபரிகிரிசன், சிறந்த பயிற்சியாளர் விருதை டி.சி.பி.எல் அணி வரதராஜனும் தட்டிச் சென்றனர். தமிழ்நாடு ரவுண்ட்ராபின் போட்டிக்கு தேர்வான வீராங்கனை பிரியதர்ஷினிக்கு விருது வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் முரளிராஜன், மாவட்ட கிரிக்கெட் சங்க செயலர் சதீஷ்குமார், தொழிலதிபர்கள் செந்தில்குமார், புரூட்ஷாப் பாலு ஆகியோர் கலந்துகொண்டு பரிசுகளை வழஙகினர். அரசு கலைக்கல்லூரி உடற்கல்வி இயக்குநர் அசோக்குமார் நன்றி கூறினார். போட்டிக்கான ஏற்பாடுகளை ரவிக்குமார், திருச்செல்வம், சங்கீர்த்தனன், பழனி மற்றும் விளையாட்டு வீரர்கள் செய்திருந்தனர்.

    • மதுரையில் கலைஞர் நூற்றாண்டு விழா கிரிக்கெட் போட்டி நடந்தது
    • வெற்றி பெற்ற அணிக்கு கவுன்சிலர் காளிதாஸ் சுழற் கோப்பை வழங்கினார்.

    மதுரை

    மதுரை பாண்டி கோவில் அருகே சுற்றுச்சாலையில் உள்ள கலைஞர் திடலில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விழாவை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மதுரை மாவட்டத்தில் உள்ள 32 அணிகள் மோதின. இதில் முதல் பரிசினை மதுரை காமராஜர்புரம் ரேயான்சிசி அணி வெற்றி பெற்றது.

    இந்த அணிக்கு கவுன்சிலர் காளிதாஸ் சுழல் கோப்பை மற்றும் ரொக்க பரிசினை வழங்கினார். இதனையடுத்து 2-வது பரிசாக மதுரை ஒத்தக்கடை ஸ்போர்ட்ஸ் வேர்டு அணியும், 3-வது பரிசினை ஏ.பி.டி. பாய்ஸ் அணியும், 4-வது பரிசினை மதுரை அரசரடி யு.சி.வார்யர்ஸ் அணி வென்றது. முன்னதாக போட்டியை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இதில் பாலா, உதயா, கார்த்திக், முத்துமணி, வழக்கறிஞர் மகேந்திரன், நாகேந்திரன், முகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
    • நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை ஓச்சேரியை அடுத்த பெரும்புலிப்பாக்கம் பகுதியில் காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாலாஜி தலைமை தாங்கினார்.

    மாவட்ட துணை செயலாளர் துரை மஸ்தான், மாவட்ட பிரதிநிதி ஜாகீர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார்.

    இதில் காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி, காவேரிப்பாக்கம் பேரூர் செயலாளர் பாஸ்(எ) நரசிம்மன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    • கிஷோர்கிருத்திகா ப்ளூ மெட்டல்ஸ், விராலிப்பட்டி வி.ஐ.பி. கிரிக்கெட் கிளப் இணைந்து மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை நடத்தினர்
    • விழாவில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகே உள்ள விராலிப்பட்டியில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை யொட்டி கிஷோர்கிருத்திகா ப்ளூ மெட்டல்ஸ், விராலிப்பட்டி வி.ஐ.பி. கிரிக்கெட் கிளப் இணைந்து மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை நடத்தினர். கிரிக்கெட் போட்டியை வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.விராலிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் விஜயகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இப்போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 36 அணிகள் பங்கேற்றன.முதல் 5 இடங்களை பிடித்தவர்க ளுக்கு பரிசு தொகையும் கோப்பையும் வழங்கப்ப ட்டது. இறுதிப் போட்டியில் போடி உப்புகோட்டை அணியும்,விராலிப்பட்டி அணியும் மோதின. இதில் போடி உப்புக்கோட்டை வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செந்தில்குமார் எம்.எல்.ஏ. முதலிடம் பிடித்த போடி உப்புக்கோட்டை அணிக்கு பரிசுத் தொகை ரூ.15 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையை வழங்கினார். மேலும் 2-ம் இடம் பிடித்த விராலிப்பட்டி அணிக்கு பரிசுத்தொகை ரூ.12500 மற்றும் சுழற் கோப்பையையும் வழங்கினார். சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு ஆட்டநாயகன் விருதுகள் வழங்கப்பட்டது. விழாவில் தி.மு.க. நிர்வாகிகள் சிவக்குமார், நரசிம்மன், சந்திரசேகர், ராமமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    போட்டி ஏற்பாடுகளை கிஷோர்கி ருத்திகா ப்ளூ மெட்டல்ஸ் மற்றும் வி.ஐ.பி. கிரிக்கெட் கிளப் செய்திருந்தனர்.

    • ஒவ்வொரு ஆண்டும் ஆறுமுகம் சுழற்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.
    • விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூன் 15.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஆறுமுகம் சுழற்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. நடப்பாண்டுக்கான தகுதிச்சுற்று போட்டி ஜூன் இரண்டாவது வாரம் துவங்குகிறது.

    மாவட்டத்தில் உள்ள கிரிக்கெட் அணிகள் இப்போட்டியில் பங்கேற்க முடியும். ஆர்வமுள்ளவர்கள் திருப்பூர் முருகம்பாளையத்தில் செயல்படும் மாவட்ட கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் தங்கள் அணியை பதிவு செய்யலாம். போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூன் 15. மேலும் விவரங்களுக்கு 9344207615 என்ற எண்ணில் அழைக்கலாம். இத்தகவலை மாவட்ட கிரிக்கெட் சங்க மேலாளர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். 

    • இந்த போட்டி 5 நாட்கள் நடைபெற்றது. இதில் 60-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
    • முதல் பரிசாக ரூ.20 ஆயிரத்தை கடத்தூர் பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும், இரண்டாம் பரிசான ரூ. 15 ஆயிரத்தை ரெயின்போ கிரிக்கெட் கிளப் அணியும் பெற்றனர்.

    பாப்பிரெட்டிபட்டி, 

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கடத்தூர் ஆர்சிசி கிரிக்கெட் கிளப் சார்பாக முதலாம் ஆண்டு ரகுநாத் நினைவுக்கோப்பைக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி கடத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நடைபெற்றது.

    இந்த போட்டி 5 நாட்கள் நடைபெற்றது. இதில் 60-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. போட்டிகளில் முதல் பரிசாக ரூ.20 ஆயிரத்தை கடத்தூர் பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும், இரண்டாம் பரிசான ரூ. 15 ஆயிரத்தை ரெயின்போ கிரிக்கெட் கிளப் அணியும், மூன்றாம் பரிசான ரூ.10 ஆயிரத்தை நல்லகுட்டல அள்ளி அணியும், நான்காம் பரிசான ரூ.8 ஆயிரத்தை ரெய்னா கிரிக்கெட் கிளப் அணியும் பெற்றன.

    பரிசளிப்பு விழாவின்போது வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பைகளை மதி இன்டேன் கேஸ் உரிமையாளர் மதியன்பன், பேரூராட்சி தலைவர் மணி ஆசிரியர் மயில் முருகன், கவுன்சிலர் பச்சையப்பன், ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர்கள் செந்தில்குமார், க.மணிமாறன் கியோர் வழங்கினார்கள்.

    • தி.மு.க. இளைஞரணி சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.
    • பல்லடம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 40 அணிகள் கலந்து கொண்டன.

    பல்லடம்:

    பல்லடம் அருகே தி.மு.க. இளைஞரணி சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி சார்பில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டது .இந்த போட்டியில் பல்லடம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 40 அணிகள் கலந்து கொண்டன. அதில் இறுதி போட்டியில் கரைப்புதூர் சி.ஆர்.அணி வெற்றி பெற்றது. இதன் பரிசளிப்பு விழாவில்,கிழக்கு ஒன்றிய கழக இளைஞரணி அமைப்பாளரும் பல்லடம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவருமான பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.வெற்றி பெற்ற அணிகளுக்கு கருணாநிதி பிறந்த நாள் நினைவு கோப்பையை திருப்பூர் வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் இல.பத்மநாபன் வழங்கினார். சான்றிதழ்கள் மற்றும் பரிசு தொகையை பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் சோமசுந்தரம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க நிர்வாகிகள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×