search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரிக்கெட் போட்டி"

    • டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
    • வெஸ்ட் இண்டீஸ் 175 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மெல்போர்னில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 258 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சீன் அப்போட் 69 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதனையடுத்து 259 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் ஆட்டமிழந்தனர். 43.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் 175 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

    இதன் மூலம், ஆஸ்திரேலியா 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக கீசி கார்ட்டி 40 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஜோஷ் ஹெசில்வுட் மற்றும் சீன் அப்போட் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

    • முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 246 ரன்களும், இந்தியா 436 ரன்களும் எடுத்தது.
    • 2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து 420 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக ஆடி 70 ரன்களை குவித்தார்.

    தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 436 ரன்களை குவித்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பரத் மற்றும் அக்சர் பட்டேல் பொறுப்பாக விளையாடினர்.

    அடுத்து 2வது இன்னிங்சை தொடர்ந்தது இங்கிலாந்து. ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் ஒல்லி போப் நிதானமாக ஆடி சதமடித்தார். 3-ம் நாள் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்களை குவித்துள்ளது. போப் 148 ரன்களுடனும், ரெஹான் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதன்மூலம் அந்த அணி 126 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது.

    இந்நிலையில், இன்று நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடக்கம் முதல் இங்கிலாந்து வீரர்கள் அதிரடியாக ஆடினர். இதனால் 400 ரன்களை கடந்தது. இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் ஒல்லி போப் 196 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 420 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா வெற்றிபெற 231 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட், அஸ்வின் 3 விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும், அக்சர் பட்டேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    தற்போது இந்திய அணி தனது ஆட்டத்தை விளையாடியது. இதில், இந்திய அணி 47 ஓவரில் 131 ரன்கள் எடுத்துள்ள நிலையில் 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனால், இந்திய அணி வெற்றி பெருமா என்பதில் சந்தேகம் எழுந்தது.

    இந்நிலையில், 2வது இன்னிங்ஸ் முடிவில் இந்தியா 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இதன்மூலம், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

    மேலும், 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. 

    12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சொந்த மண்ணில் தொடர்ந்து 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றியை தவறவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 420 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இந்தியா வெற்றிபெற 231 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக ஆடி 70 ரன்களை குவித்தார்.

    தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 436 ரன்களை குவித்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பரத் மற்றும் அக்சர் பட்டேல் பொறுப்பாக விளையாடினர்.

    அடுத்து 2வது இன்னிங்சை தொடர்ந்தது இங்கிலாந்து. ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் ஒல்லி போப் நிதானமாக ஆடி சதமடித்தார். 3-ம் நாள் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்களை குவித்துள்ளது. போப் 148 ரன்களுடனும், ரெஹான் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதன்மூலம் அந்த அணி 126 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது.

    இந்நிலையில், இன்று நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடக்கம் முதல் இங்கிலாந்து வீரர்கள் அதிரடியாக ஆடினர். இதனால் 400 ரன்களை கடந்தது. இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் ஒல்லி போப் 196 ரன்னில் அவுட்டானார். 

    இறுதியில், இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 420 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா வெற்றிபெற 231 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட், அஸ்வின் 3 விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும், அக்சர் பட்டேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    தற்போது இந்திய அணி தனது ஆட்டத்தை விளையாடி வருகிறது. இதில், இந்திய அணி 47 ஓவரில் 131 ரன்கள் எடுத்துள்ள நிலையில் 7 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. இதனால், இந்திய அணி வெற்றி பெருமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

    • கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தபின் எம்.எல்.ஏ. பூபிந்தர் சிங் சற்று கிரிக்கெட் விளையாடினார்.
    • பூபிந்தர் சிங்கை மீட்ட உதவியாளர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    ஒடிசா மாநிலம் கலாஹந்தி மாவட்டம் நர்லா தொகுதி பிஜு ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ. பூபிந்தர் சிங். இவர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எம்.எல்.ஏ. பூபிந்தர் சிங் கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார்.

    கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தபின் பூபிந்தர் சிங் சற்று கிரிக்கெட் விளையாடினார். பூபிந்தர் சிங் பேட்டிங் செய்தபோது எதிர்பாராத விதமாக தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த பூபிந்தர் சிங் மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார்.

    இதையடுத்து பூபிந்தர் சிங்கை மீட்ட உதவியாளர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    உள்ளூர் கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைக்க வந்த பூபிந்தர் சிங் எம்.எல்.ஏ. காயம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அறங்காவலர் குழு தலைவருமான பிரபா ராமகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார்
    • நாளை தொடங்கும் இந்த போட்டி வருகிற 14-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    நாகர்கோவில் :

    விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை யொட்டி கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நாளை 10-ந்தேதி தொடங்குகிறது.

    அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைக்கிறார். விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளரும் அறங்காவலர் குழு தலைவருமான பிரபா ராமகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். மாவட்ட துணை அமைப்பாளர் மாணிக்கராஜா வரவேற்று பேசுகிறார் .

    ஒன்றிய செயலாளர் பாபு,கன்னியாகுமரி பேரூராட்சிதலைவர் குமரி ஸ்டீபன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணைச் செயலாளர் நம்பி, துணைஅமைப்புச் செயலாளர் ஆஸ்டின் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். நாளை தொடங்கும் இந்த போட்டி வருகிற 14-ந் தேதி வரை நடைபெறுகிறது. கிரிக்கெட் போட்டியில் 47 அணிகள் பங்கேற்கிறது.

    போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.25,000 கேடயமும் இரண்டாவது பரிசாகரூ. 15000 கேடயமும் மூன்றாம் பரிசாகரூ. பத்தாயிரம் கேடயமும் நான்காவது பரிசாக ஐந்தாயிரம் கேட யமும் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பிரபா ராமகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    • ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் 64 அணிகள் இடம்பெற்றது.

    மார்த்தாண்டம் :

    புனித சவேரியார் ஆலயம் மற்றும் இளைய தீபம் இளையோர் இயக்கம் நடத்தும் மாபெரும் கிரிக்கெட் போட்டியானது பூட்டேற்றி கன்கார்டியா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வைத்து நடைபெற்றது.குமரி மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் 64 அணிகள் இடம்பெற்றது. இந்த கிரிக்கெட் போட்டியினை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    பூட்டேற்றி புனித அந்தோணியார் ஆலய பங்குத்தந்தை சிஜின் போட்டியினை தலைமையேற்று நடத்தினார்.பூட்டேற்றி மேல்நிலைப்பள்ளி தாளாளர் டென்னிஸ், கீழ்குளம் பேரூராட்சி கவுன்சிலர் அனிதா ராஜகிளன், கிள்ளியூர் காங்கிரஸ் வட்டாரத் தலைவர் ராஜசேகரன், கீழ்குளம் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜகிளன் மற்றும் இளையதீபம் இளையோர் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • போட்டியில் அனைத்து மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    • போட்டியில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    அனைத்திந்திய சட்ட உரிமைகள் மற்றும் மக்கள் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் தமிழ்நாடு வீல் சேர் கிரிக்கெட் அணி இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டி இன்று தஞ்சாவூர் ஐ.டி.ஐ மைதானத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் சாலமன் இன்பராஜ் வரவேற்புரை ஆற்றினார்.

    எஸ். எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி. கே. ஜி .நீலமேகம், மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    முடிவில் அந்தோணி நிறைவுறையாற்றினார்.

    தஞ்சாவூர் மாவட்ட தலைவர் மோகனசுந்தரம் நன்றியுரை ஆற்றினார்.

    இந்த போட்டியில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்வில் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு வி.கே.சி.சி. அணி வெற்றி பெற்று பரிசு கோப்பையையும், ரூ.1 லட்சம் ரொக்க பரிசையும் தட்டி சென்றது.
    • திருப்பூரில் முதல் முறையாக பிங்க் பந்தில் இப்போட்டி நடத்தப்பட்டது

    பெருமாநல்லூர்:

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள அய்யம்பாளையத்தில் மாவட்ட அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்தது. திருப்பூரில் முதல் முறையாக பிங்க் பந்தில் இப்போட்டி நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 24 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. குறிப்பாக ரஞ்சி தொடர், டி.என்.பி.எல். ஆகிய தொடர்களில் விளையாடிய வீரர்களும் இதில் கலந்து கொண்டு ஆடினர். தொடர்ந்து 14 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில், இறுதி போட்டிக்கு ஈரோடு வி.கே.சி.சி. அணியும், திருப்பூர் தேசிங்கு வாரியர் அணியும் தகுதி பெற்று, விளையாடியது. முடிவில் ஈரோடு வி.கே.சி.சி. அணி வெற்றி பெற்று பரிசு ேகாப்பையையும், ரூ.1 லட்சம் ரொக்க பரிசையும் தட்டி சென்றது. திருப்பூர் தேசிங்கு வாரியர் அணி 2-வது இடத்தை பிடித்தது. அந்த அணிக்கு ரூ.50 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. மேலும் 3-வது இடம் பிடித்த திருப்பூர் எம்.எஸ்.சி.சி. மற்றும் சென்னை வி.எல்.சி.சி. அணிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பெருமாநல்லூர் கேலக்ஸி கிரிக்கெட் அகாடமி தலைவர் ஜான் பிரபாகரன் செய்து இருந்தார்.

    • கிரிக்கெட் போட்டியில் கீழக்கரை செய்யது ஹமிதா கலை, அறிவியல் கல்லூரி வெற்றி பெற்றது.
    • அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற சுமார் 10 கல்லூரிகள் இப்போட்டியில் பங்கேற்றன.

    கீழக்கரை

    காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் பவள விழா ஆண்டினை முன்னிட்டு அழகப்பா பல் கலைக்கழக இணைப்பு கல்லூரி ஆசிரியர்களுக்கு இடையேயான பவள விழா ஆண்டு கிரிக்கெட் போட்டி வெகு சிறப்பாக நடைபெற் றது.

    அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற சுமார் 10 கல்லூரிகள் இப்போட்டியில் பங்கேற்றன.

    போட்டிகள் கடந்த இரண்டு நாட்களாக அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வித்துறை விளையாட்டு மைதானத்திலும் அழகப்பா பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்திலும் நடைபெற்றது. அரை இறுதிப் போட்டிகளில் விளையாட கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி, ராம நாதபுரம் சேதுபதி அரசினர் கலைக் கல்லூரி மற்றும் அழகப்பா பல்கலைக்கழகம் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றன.

    இறுதிப்போட்டியில் கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ராமநாதபுரம் சேதுபதி அரசினர் கலைக் கல்லூரியை எளிதில் வீழ்த்தி வெற்றி கோப்பையை தட்டி சென்றது. முதலிடம் பெற்ற கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் ரவி பரிசு கோப்பையை வழங்கி பாராட்டினார்.

    இப்பரிசளிப்பு விழாவில் கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனை வர் ராஜசேகர், அழகப்பா அரசு கலைக்கல்லூரி பொருளியல் துறை தலைவர் செல்வராஜ் உடற்கல்வி இயக்குனர் அசோக்குமார் அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் செந்தில்குமரன் உயிர் தகவ லியல் துறை பேராசி ரியர் ஜெயகாந்தன் மற்றும் சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க புரவலர் வரதராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

    இப்போட்டிகளின் சிறந்த ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகனுக்கான விருது கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசிரியர்கள் தவசலிங் கம் மற்றும் ஜெபராஜ் ஆகி யோருக்கு வழங்கப்பட்டது.

    காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் பவள விழா ஆண்டு கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசி ரியர்களுக்கு முகமது சதக் அறக்கட்டளையின் செயல் இயக்குனர் ஹாமிது இப்ராஹிம் மற்றும் இயக்குனர் ஹபீப் முகமது ஆகியோர் வாழ்த்துக்களையும் பாராட்டினையும் தெரிவித்தனர்.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • காட்டாத்துறை ஊராட்சி இளைஞர் காங்கி ரஸ் சார்பாகவும் முளகு மூட்டில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

    திருவட்டார் :

    அகில இந்தியா காங்கி ரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பாரத் ஜிடோ யாத்திரையின் ஓராண்டு நிறைவு ஆனதை யொட்டி பத்மநாபபுரம் தொகுதி இளைஞர் காங்கி ரஸ்சும், காட்டாத்துறை ஊராட்சி இளைஞர் காங்கி ரஸ் சார்பாகவும் முளகு மூட்டில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. தொகுதி தலைவர் சக்தி வேல், கண்ணனூர் இளை ஞர் காங்கிரஸ் தலைவர் கிறிஸ்டோபென் ஆசீர் ஆகியோர் தலைமை தாங்கினர். கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜோன், இளைஞர் காங்கிரஸ் விஜய், ரூபன், ஸ்டெபின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரெத்தினகுமார், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பினுலால்சிங், மாவட்ட பொருளாளர் ஐஜபி.லாரன்ஸ், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் செலின்மேரி, வட்டார தலைவர் வழக்கறிஞர் ஜெபா, வேர் கிளம்பி பேரூ ராட்சி தலைவர் சுஜிர்ஜெப சிங்குமார், மாவட்ட பொது ச்செயலாளர் ஜெகன்ராஜ், மாவட்ட செயலாளர் ஆற்றூர் குமார், மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வா கிகள் பலர் கலந்துகொண்ட னர்.

    • கிராம நிர்வாகி அலுவலர்களின் கிரிக்கெட் போட்டி நடந்தது.
    • முடிவில் வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் திருமங்கலம் வட்ட கிராமநிர்வாகஅலுவலர் அணிகள் தேர்வு செய்து அந்த அணிகளுக்கு கிரிகெட்போட்டி வாடிப்பட்டி தாய் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடந்தது.

    வாடிப்பட்டி தாசில்தார் மூர்த்தி தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஜெயபாஸ்கர் முன்னிலை வகித்தார். சங்க மாவட்ட செயலாளர் ராஜாமணி வரவேற்றார். மாநில தலைவர் ராஜன் சேதுபதி போட்டியை தொடக்கி வைத்தார். இதில் திருமங்கலம் அணி வெற்றி பெற்றது. சிறந்த விளையாட்டு வீரராக திருமங்கலம் சர்வேயர் மணி தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்றவர்களுக்கு திருமங்கலம் தாசில்தார் பார்த்திபன் பரிசுகள் வழங்கினார். முடிவில் வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்தது
    • வெற்றி பெற்ற அணிக்கு அமைச்சர் பரிசு வழங்கினார்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆற்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

    இதில் வெற்றி பெற்ற அணிக்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பரிசு வழங்கினார்.

    இதில் தி.மு.க மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் வினோத் காந்தி, ஆற்காடு எம்.எல்.ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட பொருளாளர் ஏ.கே.சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×