search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாம்பியன் பட்டம்"

    • காரைக்குடியில் டி 20 கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு கெமிக்கல்ஸ் கோவிலூர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
    • அந்த அணியின் ரகுபாலன் இறுதி போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் லத்தீப் மெமோரியல் கோப்பைக்கான 9-ம் ஆண்டு மாவட்ட அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி மைதானங்களில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நாக் அவுட் முறையில் போட்டிகள் நடைபெற்றன. பரபரப்பான இறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான தமிழ்நாடு கெமிக்கல்ஸ் கோவிலூர் அணியும் லத்தீப் மெமோரியல் காரைக்குடி அணியும் மோதின. இதில் தமிழ்நாடு கெமிக்கல்ஸ் கோவிலூர் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் கோப்பையை தட்டிச் சென்றது. அந்த அணியின் ரகுபாலன் இறுதி போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    தொடரின் சிறந்த பேட்ஸ்மேனாக டி.சி.பி.எல் அணியின் குணசீலன், பந்து வீச்சாளராக டி.சி.பி.எல் அணியின் ராமச்சந்திரன்ஆல்ரவுண்டராக லத்தீப் அணி வீரர் சுப்பிரமணியன், விக்கெட் கீப்பராக லத்தீப் அணி வீரர் மரகத கார்த்திக், சிறந்த இளம் வீரராக நைட்ஸ் அணி சபரிகிரிசன், சிறந்த பயிற்சியாளர் விருதை டி.சி.பி.எல் அணி வரதராஜனும் தட்டிச் சென்றனர். தமிழ்நாடு ரவுண்ட்ராபின் போட்டிக்கு தேர்வான வீராங்கனை பிரியதர்ஷினிக்கு விருது வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் முரளிராஜன், மாவட்ட கிரிக்கெட் சங்க செயலர் சதீஷ்குமார், தொழிலதிபர்கள் செந்தில்குமார், புரூட்ஷாப் பாலு ஆகியோர் கலந்துகொண்டு பரிசுகளை வழஙகினர். அரசு கலைக்கல்லூரி உடற்கல்வி இயக்குநர் அசோக்குமார் நன்றி கூறினார். போட்டிக்கான ஏற்பாடுகளை ரவிக்குமார், திருச்செல்வம், சங்கீர்த்தனன், பழனி மற்றும் விளையாட்டு வீரர்கள் செய்திருந்தனர்.

    • பெண்கள் ஆக்கி போட்டியில் அமெரிக்கன் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.
    • அனைத்து சுற்றுகளிலும் வெற்றி பெற்ற 4 கல்லூரி அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.

    மதுரை

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான பெண்கள் ஆக்கி போட்டி அமெரிக்கன் கல்லூரியில் நடந்தது.

    அனைத்து சுற்றுகளிலும் வெற்றி பெற்ற 4 கல்லூரி அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. முதலாவது அரையிறுதியில் அமெரிக்கன் கல்லூரி அணி, மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரி அணியை 8-0 என்ற கோல்கணக்கில் வென்றது. 2-வது அரையிறுதியில் லேடி டோக் கல்லூரி அணி, பாத்திமா கல்லூரி அணியை 1-0 என்ற கோல்கணக்கில் வென்றது.

    இறுதிப்போட்டியில் அமெரிக்கன் கல்லூரி, லேடி டோக் கல்லூரியை 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்று தொடர்ந்து 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றது.

    வெற்றி பெற்ற அமெரிக்கன் கல்லூரி மாணவிகளை முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், துணை முதல்வர் மார்டின் டேவிட், நிதிக்காப்பாளர் பியூலா ரூபி கமலம், உடற்கல்வி இயக்குநர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டினர்.

    • மாநில சிலம்பாட்ட போட்டியில் சரசுவதி நாராயணன் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.
    • ஆண்கள் தனிப்பிரிவு போட்டியில் சரசுவதி நாராயணன் கல்லூரியின் 2-ம் ஆண்டு தாவரவியல் துறை மாணவர் 2-ம் இடம் பெற்றார்.

    மதுரை

    மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ்நாடு சிலம்பம் பேடரேசன் சார்பில் நடந்த மாநில அளவிலான சிலம்பப் போட்டிகளில் மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் பெண்கள் சிலம்பம் அணியினர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

    ஆண்கள் தனிப்பிரிவு போட்டியில் சரசுவதி நாராயணன் கல்லூரியின் 2-ம் ஆண்டு தாவரவியல் துணை மாணவர் நவீன் பிரசாத், 2-ம் இடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் கண்ணன், துணை முதல்வர் மோதிலால், வணிகவியல் துறைத்தலைவர் ஜெயக்கொடி, உடற்கல்வித் துறை இயக்குநர் யுவராஜ் ஆகியோர் பாராட்டினர்.

    • வாடிப்பட்டியில் நடந்த மாநில ஆக்கி போட்டியில் திருநகர் அணி சாம்பியன் பட்டம் வென்றனர்.
    • எல்.ராஜூ நினைவு சுழற்கோப்பைக்கான மாநில ஆக்கி போட்டி 3 நாட்கள் நடந்தது.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எவர் கிரேட் ஆக்கி கிளப் சார்பில் எல்.ராஜூ நினைவு சுழற்கோப்பைக்கான மாநில ஆக்கி போட்டி 3 நாட்கள் நடந்தது.

    நிறைவு விழாவிற்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கி சுழற்கோப்பை மற்றும் ரொக்கப்பரிசுகளை வழங்கினார். பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் போஸ் பாப்பையன், மாநகராட்சி உதவி பொறியாளர் பாஸ்கரபாண்டியன் முன்னிலை வகித்தனர். கிளப் செயலாளர் சிதம்பரம் வரவேற்றார்.

    இதில் திருநகர் இந்திரா காந்தி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் பெற்றது. 2-ம் பரிசை திருச்சி விளையாட்டு விடுதி அணியும், 3-ம் பரிசை நெல்லை விளையாட்டு விடுதி அணியும், 4-ம் பரிசை மதுரை விளையாட்டு விடுதி அணியும் பெற்றன. போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி, வருவாய் ஆய்வாளர் திருப்பதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    உடற்கல்வி ஆசிரியர் ராஜா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை எவர்கிரேட் ஆக்கி கிளப் நிர்வாகிகள் வெள்ளைசாமி, சரவணன், சந்திரமோகன், ராமசாமி, காளிதாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.=

    • மாணவர்களுக்கான கால்பந்தாட்ட போட்டியில் பெரியபட்டினம் அரசு பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
    • இஸ்லாமியா பள்ளி 2-வது இடத்தை பிடித்தது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கல்வி மாவட்டம் கீழக்கரை குறு வட்டம் பகுதியைச் சேர்ந்த 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கி டையேயான கால்பந்தாட்ட போட்டிகள் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் தினைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமயாசிரியர் டேவிட் மோசஸ் தலைமையில் நடந்தது.

    கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி துணை முதல்வர் செந்தில்குமார் கால்பந்தாட்ட போட்டியை தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு இடையேயான போட்டிகளில் 12 பள்ளி அணிகள் பங்கேற்று விளையாடின.

    இதில் பெரியபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி முதலிடமும், கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 2-வது இடமும் பெற்றன.

    மாணவிகளுக்கு இடையேயான போட்டியில் 6 பள்ளி அணிகள் பங்கேற்றன. இதில் கீழக்கரை வேளானூர் அரசு உயர்நிலைப்பள்ளி அணி முதலிடமும், சாத்தான்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி 2-வது இடம் பெற்றன. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் அணிக்கு கல்லூரி முதல்வர் முஹம்மது ஷரிப் பரிசு கோப்பையும், சான்றிதழ்களும் வழங்கினார்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் சுரேஷ்குமார், தினைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் தீபா, எஸ்தர் மற்றும் வண்ணாங்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • கலெக்டர் பரிசு வழங்கினார்
    • 108-85 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    கோவை:

    அகில இந்திய அளவிலான 56-வது ஆண்கள் கூடைப்பந்து போட்டி கோவையில் நடந்தது. இதில் இந்திய கடற்படை, ரெஸ்ட் ஆப் தமிழ்நாடு உள்பட 8 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப்போட்டியில் இந்திய கடற்படை அணியும், ரெஸ்ட் ஆப் தமிழ்நாடு அணியும் மோதின. இதில் இந்திய கடற்படை அணி 108-85 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    பரிசளிப்பு விழாவில் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கடற்படை அணிக்கு சாம்பியன் கோப்பையும், ரூ.1 லட்சம் பரிசுத் தொகையையும் வழங்கினார். 2-ம் இடம் பெற்ற ரெஸ்ட் ஆப் தமிழ்நாடு அணிக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் கோப்பை, 

    • கபடி போட்டியில் அணைக்கரைபட்டி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
    • முதலிடத்தை பிடித்த அணிக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள மேலஉரப்பனூரில் மதுரை மாவட்ட அளவிலான மயில்நினைவு கபடி போட்டி நடந்தது. இதில் 81 அணிகள் கலந்து கொண்டன.

    முதலிடத்தை அணைக்கரைபட்டி ஏ.கே.நண்பர்கள் கிளப் அணி தட்டிசென்றது. அந்த அணிக்கு ரூ.10 ஆயிரமும், சுழல்கோப்பையையும் உரப்பனூர் ஊராட்சி மன்றத்தலைவர் யசோதை சாமிநாதன் வழங்கினார். 2-ம் இடத்தை கொக்குளம் தமிழரசன் அணி பிடித்தது.

    அந்த அணிக்கு ரூ.8 ஆயிரம் வழங்கப்பட்டது. 3-ம் இடத்தை தனக்கன்குளம் அணியும், நான்காம் இடத்தை மேலஉரப்பனூர் அணியும் பிடித்தது.

    போட்டியின் நடுவர்களாக அகிலஇந்திய கபடி நிர்வாககுழு உறுப்பினர்கள் குனராஜ், ராமமூர்த்தி, சக்தி, தமிழ்நாடு கபடி நிர்வாககுழு உறுப்பினர்கள் சதீஷ், அஜித், மருது ஆகியோர் இருந்தனர்.

    ×