மாநில ஆக்கி போட்டியில் திருநகர் அணி சாம்பியன்

வாடிப்பட்டியில் நடந்த மாநில ஆக்கி போட்டியில் திருநகர் அணி சாம்பியன் பட்டம் வென்றனர். எல்.ராஜூ நினைவு சுழற்கோப்பைக்கான மாநில ஆக்கி போட்டி 3 நாட்கள் நடந்தது.
மாநில ஆக்கி போட்டியில் திருநகர் அணி சாம்பியன்
Published on

வாடிப்பட்டி

வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எவர் கிரேட் ஆக்கி கிளப் சார்பில் எல்.ராஜூ நினைவு சுழற்கோப்பைக்கான மாநில ஆக்கி போட்டி 3 நாட்கள் நடந்தது.

நிறைவு விழாவிற்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கி சுழற்கோப்பை மற்றும் ரொக்கப்பரிசுகளை வழங்கினார். பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் போஸ் பாப்பையன், மாநகராட்சி உதவி பொறியாளர் பாஸ்கரபாண்டியன் முன்னிலை வகித்தனர். கிளப் செயலாளர் சிதம்பரம் வரவேற்றார்.

இதில் திருநகர் இந்திரா காந்தி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் பெற்றது. 2-ம் பரிசை திருச்சி விளையாட்டு விடுதி அணியும், 3-ம் பரிசை நெல்லை விளையாட்டு விடுதி அணியும், 4-ம் பரிசை மதுரை விளையாட்டு விடுதி அணியும் பெற்றன. போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி, வருவாய் ஆய்வாளர் திருப்பதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உடற்கல்வி ஆசிரியர் ராஜா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை எவர்கிரேட் ஆக்கி கிளப் நிர்வாகிகள் வெள்ளைசாமி, சரவணன், சந்திரமோகன், ராமசாமி, காளிதாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.=

X

Maalai Malar
www.maalaimalar.com