அமெரிக்கன் கல்லூரி சாம்பியன்

பெண்கள் ஆக்கி போட்டியில் அமெரிக்கன் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது. அனைத்து சுற்றுகளிலும் வெற்றி பெற்ற 4 கல்லூரி அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.
அமெரிக்கன் கல்லூரி சாம்பியன்
Published on

மதுரை

மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான பெண்கள் ஆக்கி போட்டி அமெரிக்கன் கல்லூரியில் நடந்தது.

அனைத்து சுற்றுகளிலும் வெற்றி பெற்ற 4 கல்லூரி அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. முதலாவது அரையிறுதியில் அமெரிக்கன் கல்லூரி அணி, மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரி அணியை 8-0 என்ற கோல்கணக்கில் வென்றது. 2-வது அரையிறுதியில் லேடி டோக் கல்லூரி அணி, பாத்திமா கல்லூரி அணியை 1-0 என்ற கோல்கணக்கில் வென்றது.

இறுதிப்போட்டியில் அமெரிக்கன் கல்லூரி, லேடி டோக் கல்லூரியை 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்று தொடர்ந்து 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றது.

வெற்றி பெற்ற அமெரிக்கன் கல்லூரி மாணவிகளை முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், துணை முதல்வர் மார்டின் டேவிட், நிதிக்காப்பாளர் பியூலா ரூபி கமலம், உடற்கல்வி இயக்குநர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com