மாநில சிலம்பாட்ட போட்டி

மாநில சிலம்பாட்ட போட்டியில் சரசுவதி நாராயணன் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது. ஆண்கள் தனிப்பிரிவு போட்டியில் சரசுவதி நாராயணன் கல்லூரியின் 2-ம் ஆண்டு தாவரவியல் துறை மாணவர் 2-ம் இடம் பெற்றார்.
மாநில சிலம்பாட்ட போட்டி
Published on

மதுரை

மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ்நாடு சிலம்பம் பேடரேசன் சார்பில் நடந்த மாநில அளவிலான சிலம்பப் போட்டிகளில் மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் பெண்கள் சிலம்பம் அணியினர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

ஆண்கள் தனிப்பிரிவு போட்டியில் சரசுவதி நாராயணன் கல்லூரியின் 2-ம் ஆண்டு தாவரவியல் துணை மாணவர் நவீன் பிரசாத், 2-ம் இடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் கண்ணன், துணை முதல்வர் மோதிலால், வணிகவியல் துறைத்தலைவர் ஜெயக்கொடி, உடற்கல்வித் துறை இயக்குநர் யுவராஜ் ஆகியோர் பாராட்டினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com