கபடி போட்டி

கபடி போட்டியில் அணைக்கரைபட்டி அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலிடத்தை பிடித்த அணிக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.
கபடி போட்டி
Published on

திருமங்கலம்

திருமங்கலம் அருகே உள்ள மேலஉரப்பனூரில் மதுரை மாவட்ட அளவிலான மயில்நினைவு கபடி போட்டி நடந்தது. இதில் 81 அணிகள் கலந்து கொண்டன.

முதலிடத்தை அணைக்கரைபட்டி ஏ.கே.நண்பர்கள் கிளப் அணி தட்டிசென்றது. அந்த அணிக்கு ரூ.10 ஆயிரமும், சுழல்கோப்பையையும் உரப்பனூர் ஊராட்சி மன்றத்தலைவர் யசோதை சாமிநாதன் வழங்கினார். 2-ம் இடத்தை கொக்குளம் தமிழரசன் அணி பிடித்தது.

அந்த அணிக்கு ரூ.8 ஆயிரம் வழங்கப்பட்டது. 3-ம் இடத்தை தனக்கன்குளம் அணியும், நான்காம் இடத்தை மேலஉரப்பனூர் அணியும் பிடித்தது.

போட்டியின் நடுவர்களாக அகிலஇந்திய கபடி நிர்வாககுழு உறுப்பினர்கள் குனராஜ், ராமமூர்த்தி, சக்தி, தமிழ்நாடு கபடி நிர்வாககுழு உறுப்பினர்கள் சதீஷ், அஜித், மருது ஆகியோர் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com