search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்பந்து போட்டி"

    • தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடந்தது.
    • மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி தொடங்கி வைத்தார்.

    ராமநாதபுரம்

    தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி ராமநாதபுரத்தில் நடந்தது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி தொடங்கி வைத்தார். 14, 17, 19 வயது ஆண்கள் பிரிவில் பெரியபட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி, பனைக்குளம் பகுர்தீன் அரசு மேல்நிலைப்பள்ளி அணிகள், 14, 17 வயது பெண்கள் பிரிவில் வேளானூர் அரசு உயர்நிலைப்பள்ளி, 19 வயது பெண்கள் பிரிவில் ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளி அணிகள் முதலிடம் பிடித்தன.

    இந்த அணிகள் நாமக்கலில் டிசம்பர் 5 முதல் 10-ந்தேதி வரை நடைபெற உள்ள மாநில போட்டியில் கலந்து கொள்கின்றன. 19 வயது பிரிவு ஆடவர் பிரிவில் மாநில போட்டிக்கு தகுதி பெற்ற பனைக்குளம் பகுர் தீன் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களை ஜமாஅத் தலைவர்கள் ஜெய்னுல் அஸ்லாம் (மேற்கு), ஹம்சத் அலி (கிழக்கு) மற்றும் நிர்வாகிகள், தலைமை ஆசிரியர் ரவி, உதவி தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியம், உடற்கல்வி ஆசிரியர் சந்திரசேகரன் ஆகியோர் பாராட்டினர்.

    • சு.ரவி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • முதல் பரிசாக ரூ.30 ஆயிரம் அறிவிப்பு

    அரக்கோணம்:

    அரக்கோணம் தனியார் நிறுவனம் சார்பாக நடைபெற்ற கால்பந்து போட்டி தொடக்க விழா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

    இதில் சென்னை பெங்களூர் பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 20 அணிகள் கலந்து கொள்கின்றன. வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.30 ஆயிரம், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ. 20 ஆயிரம் ரொக்கம் பரிசாக வழங்க உள்ளது.

    கால்பந்து போட்டியை ரவி எம் எல் ஏ தொடங்கி வைத்தார். இதில் அம்மனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல் அரக்கோணம் அதிமுக நகர செயலாளர் பாண்டுரங்கன் மற்றும் பலர் உடன் இருந்தனர் .

    கால்பந்து விளையாட்டு போட்டி நிர்வாகிகள் ஜெயசீலன், எட்வின், ராஜேஷ் மற்றும் கில்பட், பாண்டியன் ஆகியோர் கால்பந்து போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வ.உ.சி. மைதானத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
    • மைதானத்தில் முதன்முதலாக எழுவர் ஆண்கள் அதிவிரைவு கால்பந்து போட்டி இன்று நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாளை வ.உ.சி. மைதானம் நவீன கேலரிகளுடன் புனரமைக்கப்பட்டது.

    கால்பந்து போட்டி

    அங்கு பணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில் கடந்த மாதம் 8-ந்தேதி நெல்லை வந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மைதானத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து இன்று இந்த மைதானத்தில் முதன்முதலாக எழுவர் ஆண்கள் அதிவிரைவு கால்பந்து போட்டி நடைபெற்றது.

    இதன் தொடக்க விழாவில் நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர்.

    16 அணிகள் பங்கேற்பு

    போட்டியை தொடங்கி வைத்துவிட்டு சிறிது நேரம் கலெக்டர் உள்பட 3 பேரும் மற்ற அதிகாரிகளுடன் சேர்ந்து ஒரு அணியாக இருந்து எதிர்தரப்பில் இருந்த மாணவர்களுடன் கால்பந்து விளையாடினர்.

    இதில் சிறப்பாக விளையாடிய கலெக்டர் விஷ்ணு முதல் கோலை அடித்தார். இந்த போட்டியில் 16 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இந்த போட்டி காலை 8 மணிக்கு தொடங்கியது. ஒவ்வொரு போட்டியும் 12 நிமிடம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 2 நிமிட இடைவெளியுடன் மீண்டும் 12 நிமிடங்கள் நடைபெற்றது.

    தொடர்ந்து இன்று மாலை முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால் பாளை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மைதானத்திற்கு வந்து மாணவர்களின் விளையாட்டு போட்டிகளை கண்டுகளித்தனர்.

    • அர்ஜென்டினாவில் உள்ளூர் கால்பந்து போட்டியின்போது மோதல் ஏற்பட்டது
    • ஏராளமான ரசிகர்கள் மைதானத்தின் மையப்பகுதிக்கு சென்றனர்.

    இந்தோனேஷியா நாட்டில் கடந்த வாரம் நடந்த கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் 139 பேர் இறந்தனர். இந்த சோக சம்பவம் மறைவதற்குள் அர்ஜென்டினாவில் நடந்த கால்பந்து போட்டியில் ரசிகர் ஒருவர் பலியாகிவிட்டார்.

    அர்ஜென்டினாவில் நேற்று இரவு  உள்ளூர் கால்பந்து போட்டி நடந்தது. இதை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்து இருந்தனர். மைதானம் முழுவதும் நிரம்பிய நிலையில், மேலும் ரசிகர்கள் வந்ததால் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களை போலீசார் ஒழுங்குபடுத்தினர். அப்போது போலீசாருக்கும். ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். இந்த சம்பவத்தில் ஒரு ரசிகர் இறந்தார். சிலர் காயம் அடைந்தனர். 

    போலீசாரின் கண்ணீர் புகை குண்டு தாக்குதலில் இருந்து தப்பிக்க ஏராளமான ரசிகர்கள் மைதானத்தின் மையப்பகுதிக்கு சென்றனர். உடனே போட்டி நிறுத்தப்பட்டது. வீரர்கள் தங்கள் அறைக்கு திரும்பினர். 

    • கால்பந்து போட்டியில் தோல்வி அணியின் ரசிகர்கள் மைதானத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
    • வன்முறையை அடுத்து கால்பந்து போட்டி தொடரின் லீக் ஆட்டங்கள் ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் மலாங் மாகாணத்தில் உள்ளூர் கால்பந்து போட்டி அங்குள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் அரேமா எப்.சி- பெர்செபயா சுரபயா அணிகள் மோதின. இதில் அரேமா அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.

    அந்த அணி சொந்த மண்ணில் தோற்றதால் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்து வன்முறையில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கானோர் தடுப்புகளை மீறி மைதானத்துக்குள் புகுந்தனர். அரேமா அணி வீரர்களை தாக்கினர். மைதானத்தில் இருந்த நாற்காலி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கினர்.

    மைதானத்துக்குள்ளேயும் வெளியேயும் இருந்த வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்களை சேதப்படுத்தினர். சில வாகனங்களுக்கு தீயும் வைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சி அளித்தது.

    இதையடுத்து ரசிகர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. வன்முறை, கூட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயம் அடைந்தனர். நீண்ட போராட்டத்துக்கு பின் வன்முறையை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    வன்முறையில் 129 பேர் பலியானார்கள். 180-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், மேலும் 51 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 174ஆக உயர்ந்துள்ளது.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரி நிகோ அபின்டா கூறும்போது, "கால்பந்து போட்டியில் தோல்வி அணியின் ரசிகர்கள் மைதானத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். 34 பேர் மைதானத்துக்குள்ளே இறந்தனர். மீதமுள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலர் இறந்தனர். மைதானத்தில் இருந்த போலீஸ் அதிகாரிகளை தாக்கிய ரசிகர்கள் கார்களையும் சேதப்படுத்தினர். மைதானத்தில் இருந்து ரசிகர்கள் வெளியேறியபோது வாகனங்களை அடித்து நொறுக்கினர் என்றார்.

    இச்சம்பவம் தொடர்பாக இந்தோனேசியா கால்பந்து சங்கம் வெளியிட்ட அறிக்கையில், "மைதானத்தில் அரேமா அணியின் ஆதரவாளர்கள் செயல்களுக்கு வருந்துகிறோம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடமும், அனைத்து தரப்பினரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.

    போட்டிக்கு பிறகு என்ன நடந்தது என்பது குறித்து விசாரணையை தொடங்க ஒரு குழு மலாங்குக்கு சென்றுள்ளது" என்று தெரிவித்துள்ளது.

    வன்முறையை அடுத்து கால்பந்து போட்டி தொடரின் லீக் ஆட்டங்கள் ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சீசனில் அரேமா அணி எஞ்சிய போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    • போபாலில் ஏழுவர் விளையாடும் சிறுவர்களுக்கான தேசிய அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது.
    • 12 மாநிலத்தை சேர்ந்த அணிகள் பங்கேற்றன.

    திருப்பூர் :

    மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஏழுவர் விளையாடும் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான தேசிய அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, மத்திய பிரதேசம், மணிப்பூர் உள்பட 12 மாநிலத்தை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இந்த போட்டி லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு அணிக்கும், மத்திய பிரதேச அணிக்கும் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் மத்திய பிரதேச அணி வென்றது. தமிழ்நாடு அணி 2-வது இடத்தை பிடித்தது.தமிழ்–நாடு, ஆந்–திரா பேரில் 8 சிறுவர்கள் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். தேசிய அளவில் சிறந்த கோல் கீப்பர் பட்டத்தை திருப்பூர் வீரர் முகுந்தன் ஆதித்யா வென்றார். மத்திய பிரதேசத்தில் இருந்து ரெயில் மூலம் நேற்று மாலை திருப்பூர் வந்த வீரர்களுக்கு பல்வேறு கட்சியினர், முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். அகில இந்திய ஏழுவர் கால்பந்து கழக மாநில செயலாளர் ஹரிகரசுதன், துணை செயலாளர் திவ்யபாரதி, வீரர்களின் பெற்றோர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • 15 அணியினர் கலந்து கொண்டனர்
    • மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை வட்ட அளவிலான ஆண்களுக்கான கால்பந்து போட்டியில் ஜோலார்பேட்டை அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி முதல் இடம் பிடித்து மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு.

    ஜோலார்பேட்டை அருகே பார்சம்பேட்டை பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தொன்போஸ்கோ பள்ளி வளாகத்தில் ஜோலார்பேட்டை வட்டார அளவிலான சூப்பர் சீனியர், சீனியர் மற்றும் ஜூனியர் ஆகிய மூன்று பிரிவுகளில் கால்பந்தாட்டம் போட்டி நடைபெற்றது.

    ஜோலார்பேட்டை, ஏலகிரி மலை, ஆலங்காயம், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதியில் பயிலும் அரசு பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் இருந்து 15 அணியினர் கலந்து கொண்டனர்.

    சூப்பர் சீனியர் பிரிவில் ஜோலார்பேட்டை அரசு தொன்போஸ்கோ மேல் நிலை பள்ளி முதலிடமும் திருப்பத்தூர் தொன்போஸ்கோ மேல் நிலை பள்ளி 2 இடமும் பிடித்தது.

    சீனியர் பிரிவில் திருப்பத்தூர் அரசு நிதியுதவி பெறும் தொன்போஸ்கோ மேல் நிலைபள்ளி முதலிடமும் ஜோலார்பேட்டை தொன்போஸ்கோ மேல்நிலைப்பள்ளி 2-வது இடமும் பிடித்தனர்.

    மேலும் ஜூனியர் பிரிவில் ஜோலார்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி அணியினர் முதலிடமும் ஏலகிரி மலை அரசு மேல்நிலைப்பள்ளி 2-ம் இடத்தைப் பிடித்தனர்.

    இதன் மூலம் முதலிடத்தை வெற்றி பெற்ற அணியினர் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றது.

    இதனால் பள்ளி தலைமையாசிரியர் ஐசக் பள்ளி தாளாளர் பிரான்சிஸ் சேவியர் உடற்கல்வி ஆசிரியர்கள் அலெக்ஸாண்டர், ஏசுராஜ் ஆகியோர் முதலிடத்தைப் பெற்று மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்ற பள்ளி மாணவ அணியினருக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்கள்.

    • இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டி நடந்தது.
    • போட்டிகளை கால்பந்து ரசிகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

    மானாமதுரை

    75-வது சுதந்திர தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டி 3 நாட்கள் நடந்தது. கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த 20 அணிகள் பங்கேற்றன.

    மழை காரணமாக கல்லூரி மைதானத்தை பயன்படுத்த இயலாத நிலையில் அனைத்து போட்டிகளும், இளையான்குடி ஸ்டார் முஸ்லீம் கால்பந்தாட்ட மைதானத்தில் நடத்தப்பட்டது. சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி போட்டியை பார்வையிட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    நிறைவு விழாவில் கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் (பொறுப்பு), பொருளாளர் அப்துல் அஹது தலைமை தாங்கினர். முதல்வர் அப்பாஸ் மந்திரி வரவேற்றார். ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லா கான் தலைமையுரையாற்றினார்.

    சிவகங்கை மாவட்டம், கண்டரமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கால்பந்தாட்ட வீரர் ராமன் விஜயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகோப்பை, சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசுகளை வழங்கினார்.

    இறுதி போட்டியில் கேரள மாநிலத்தின் கிருஷ்ணா கல்லூரி அணி முதலிடம் பெற்று 7 அடி உயர பரிசு கோப்பையையும், ரூ. 25 ஆயிரம் ரொக்கப்பரிசையும் வென்றது. கோவை ரத்தினம் கல்லூரி அணி 2-ம் இடத்தை பெற்று 6 அடி உயர பரிசு கோப்பையையும், ரூ.15 ஆயிரம் ரொக்கப்பரிசையும் வென்றது.

    கேரள மாநிலம் திருச்சூர் எம்.டி.கல்லூரி அணி 5 அடி உயர பரிசுகோப்பையுடன், ரூ. 10 ஆயிரம் ரொக்கப்பரிசு பெற்று 3-ம் இடம் பெற்றனர். 4-ம் இடத்தை இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி அணி கைப்பற்றி 4 அடி உயர பரிசு கோப்பையையும், ரூ. 5ஆயிரம் ரொக்கப்பரிசையும் பெற்றது.

    சிறந்த வீரருக்கான பரிசை கோவை ரத்தினம் கல்லூரி அணி வீரர் முஹம்மது ஷானானும், சிறந்த கோல்கீப்பர் பரிசை சாகிர் உசேன் கல்லூரி அணி வீரர் ஆல்வினும் பெற்றனர். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக், சிராஜுதீன், அப்துல் சலீம், சுயநிதி பாடப்பிரிவு இயக்குநர் ஷபினுல்லாஹ் கான், சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம்மது முஸ்தபா, ஸ்டார் முஸ்லீம் கால்பந்தாட்ட குழு தலைவர் முஹம்மது அலி, செயலாளர் அப்துல் ரஜாக் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    விளையாட்டு போட்டிகளை கல்லூரி உடற்கல்வி இயக்குநர் காளிதாசன், உடற்கல்வி ஆசிரியர்கள் காஜா நஜிமுதீன், வெற்றி, ஜென்சி, கோகுல் ஆகியோருடன் இணைந்து இளையான்குடி, ஸ்டார் முஸ்லீம் கால்பந்தாட்ட குழுவினர் செய்திருந்தனர். போட்டிகளை கால்பந்து ரசிகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

    • 'சி' பிரிவில் தமிழகம், ஒடிசா, டெல்லி அணிகள் இடம் பெற்றுள்ளன.
    • தினமும் இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறும்.

    தமிழக அஞ்சல் துறை சார்பில் 34-வது அகில இந்திய அஞ்சல் துறை கால்பந்து போட்டி இன்று முதல் 26-ந் தேதி வரை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. தமிழகம், நடப்பு சாம்பியன் கேரளா, அசாம், டெல்லி, இமாசல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, ஒடிசா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 10 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன.

    ௧௦ அணிகளும் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'சி' பிரிவில் தமிழக அணியுடன் ஒடிசா, டெல்லி அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள பிற அணிகளுடன் மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். தினமும் இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறும்.

    இன்று காலை 8 மணிக்கு நடக்கும் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்லையா கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். காலை 9.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் தமிழகம்-ஒடிசா அணிகள் மோதுகின்றன. 

    • பள்ளி அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டிகள் 3 நாட்களாக நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மேற்கு ேராட்டரி மற்றும் குயின்சிட்டி ரோட்டரிசங்கம், மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் பள்ளி அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டிகள் 3 நாட்களாக நடைபெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் முதல் இடம் பிடித்த புனிதமரியன்னை பள்ளி அணிக்கு ரூ.10ஆயிரம் மற்றும் பரிசுகோப்பை வழங்கப்பட்டது.

    2-வது இடம் பிடித்த லயோலா அணிக்கு ரூ.7 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. பெண்கள் பிரிவில் முதல் இடம் பிடித்த அங்குவிலாஸ் பள்ளி அணிக்கு ரூ.5ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. பரிசுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் வழங்கினார்.

    மாவட்ட கால்பந்து கழக தலைவர் ஜி.சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். செயலாளர் சண்முகம், ரோட்டரிசங்க நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், சர்மிளா, ராஜகோபாலான், மல்லிகா, விளையாட்டு அலுவலர் ரோஸ்பாத்திமா மேரி, நிர்வாகிகள் ஈசாக், தங்கத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பல்லடம், திருப்பூர், உடுமலை, பொள்ளாச்சி, ஊட்டி உள்ளிட்ட கால்பந்து அணிகள் கலந்து கொண்டன.
    • பரிசு கோப்பை, ரூ.15,000 ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் நண்பர்கள் கால்பந்து குழுவினர் நடத்திய பத்தாம் ஆண்டு ஐவர் கால்பந்து போட்டி பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் பல்லடம், திருப்பூர், உடுமலை, பொள்ளாச்சி, ஊட்டி உள்ளிட்ட கால்பந்து அணிகள் கலந்து கொண்டன.

    இதில் திருப்பூர் கால்பந்து அணி முதலிடம் பெற்றது. அவர்களுக்கு பரிசு கோப்பை, ரூ.15,000 ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த விளையாட்டு வீரராக திருப்பூர் கால்பந்து அணியை சேர்ந்த பன்னீர், சிறந்த கோல் கீப்பராக ஊட்டி அணியைச் சேர்ந்த சேகின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது. நகர திமுக செயலாளர் ராஜேந்திர குமார்,ராம் கண்ணையன், தங்கலட்சுமி நடராஜன், அறம் அறக்கட்டளை செந்தில்குமார், பரிசுகளை வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் நடராஜன், கால்பந்து குழு ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி,மற்றும் நிர்வாகிகள் உளப்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இறுதி போட்டியில் 2-1 என்ற கோல்கணக்கில் ராணுவ வீரர்களின் அணி வெற்றி பெற்றது.
    • கால்பந்து போட்டியை ஏராளமானவர்கள் திரண்டு கண்டுகளித்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் எடபள்ளி கிராமத்தில் உள்ள புகழ் பெற்ற மைதானத்தில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் நடைபெற்றன.

    பல்வேறு அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் இறுதி போட்டியில் அணிகொரை அணியும், ராணுவ வீரர்களின் எம்.ஆர்.சிஅணியும் மோதி.ன மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி போட்டியில் 2-1 என்ற கோல்கணக்கில் ராணுவ வீரர்களின் எம்.ஆர்.சி அணி வெற்றி பெற்றது வெற்றி பெற்ற வீரர்களுக்கு எடப்பள்ளி கால்பந்து கழக தலைவரும் சமுக சேவகருமான காளிதாஸ் தலைமையில் கிராம தலைவர்கள் முன்னிலையில் வெற்றி கோப்பைகள் வழங்கபட்டன.இந்த கால்பந்து போட்டியை ஏராளமானவர்கள் திரண்டு கண்டுகளித்தனர்

    ×