search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்பந்து போட்டி"

    • 9-ந் தேதி வரை 6 நாட்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.
    • நாக் அவுட் மற்றும் லீக் முறையில் போட்டி நடக்கிறது.

    சென்னை:

    லயோலா கல்லூரி சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் மர்பி நினைவு கோப்பைக்கான தென் இந்திய கல்லூரிகள் இடையேயான கால்பந்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான 23-வது கல்லூரிகள் கால்பந்து போட்டி நாளை (திங்கட்கிழமை) தொடங்கி 9-ந் தேதி வரை 6 நாட்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.

    இதில் நடப்பு சாம்பியன் லயோலா, எம்.சி.சி, செயிண்ட் ஜோசப் ( திருச்சி), அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி , ஜாமியா நத்விய்யா கல்லூரி ( கேரளா) உள்பட 20 அணிகள் பங்கேற்கின்றன. நாக் அவுட் மற்றும் லீக் முறையில் போட்டி நடக்கிறது.

    சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். 2-வது , 3-வது, 4-வது இடங்களுக்கு முறையே ரூ.7 ஆயிரம், ரூ. 5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். இது தவிர சிறந்த வீரர்களுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்படும்.

    மேற்கண்ட தகவலை லயோலா கல்லூரி முதல்வர் ஏ. லூயிஸ் ஆரோக்யராஜ், விைளயாட்டு குழு தலைவர் எம்.எஸ்.ஜோசப் அந்தோணி, உடற் கல்வி இயக்குனர் எஸ். விஜயகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.

    • சுழல் வெள்ளி கோப்பைக்கான மாநில அளவிலான எழுவர் கால்பந்து போட்டி காரைக்குடி என்.ஜி.ஓ. காலனியில் நடத்தப்பட்டது.
    • காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.

    காரைக்குடி

    காரைக்குடி சவுத் பாய்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் தெற்கு தெரு இளைஞர்களால் முதலாம் ஆண்டு சுழல் வெள்ளி கோப்பைக்கான மாநில அளவிலான எழுவர் கால்பந்து போட்டி காரைக்குடி என்.ஜி.ஓ. காலனியில் நடத்தப்பட்டது.தமிழ்நாடு முழுவதும் இருந்து 30 அணிகள் கலந்து கொண்டன. போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெற்றன. பரபரப்பாக நடைபெற்ற இறுதி போட்டி யில் கே.ஆர்.பிரதர்ஸ் தெற்கு தெரு அணியும், என்.எஸ்.கே. கண்டனூர் பாலையூர் அணியும் மோதின.

    ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமன் ஆகி டைபி ரேக்கர் வழங்கப்பட்டு அதி லும் சமனாகி வெற்றியாளர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசான ரூ.50,001 மற்றும் வெள்ளி கோப்பையை என்.எஸ்.கே. கண்டனூர் பாலையூர் அணியினர் பெற்றனர்.

    இரண்டாம் பரிசு ரூ.40001 ஐ கே.ஆர்.பிரதர்ஸ் தெற்கு தெரு காரைக்குடி அணியினர் பெற்றனர். 3-வது மற்றும் 4-வது பரிசுகளை முறையே யுனைடட் கால்பந்து கிளப் காட்டு தலைவாசல் மற்றும் செய்யாறு அணிகளும் பெற்றன.

    பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். இதில் அனைத்து கட்சி பிர முகர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டு வீரர்களை வாழ்த்தினர். போட்டிக்கான ஏற்பாடுகளை கே.ஆர்.பிரதர்ஸ் அணி தலைமை நிர்வாகி குமரன், உறுப்பி னர்கள் சிறப்பாக செய்தி ருந்தனர்.

    • அ.தி.மு.க. சார்பில் ஐவர் கால்பந்து போட்டி நடந்தது.
    • அ.தி.மு.க. செய லாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தலைமை தாங்கி போட்டி களை தொடங்கி வைத்தார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை மேற்கு ஒன் றிய அ.தி.மு.க. சார்பில் சங்கராபுரம் ஊராட்சியில் முதலாம் ஆண்டு மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது. துவக்க விழாவில் சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. செய லாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தலைமை தாங்கி போட்டி களை தொடங்கி வைத்தார்.

    இரண்டு நாட்கள் பகல் மற்றும் மின்னொளியில் நடைபெற்ற இப்போட்டியில் ஐம்பது அணிகள் கலந்து கொண்டன. நாக் அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் காரைக்குடி கே.ஆர்.பிரதர்ஸ் தெற்கு தெரு அணியும், எஸ்.ஆர்.சதீஷ் நினைவு கீழத்தெரு அணியும் மோதின. பரப ரப்பான இப்போட்டி யில் சதீஷ் நினைவு கீழத்தெரு அணி டைபிரேக்கரில் வென்று முதலிடத்தை பெற் றது.

    தெற்குதெரு அணி இரண்டாமிடத்தையும், அப் பாஸ் மெமோரியல் காட்டுத் தலைவாசல் மூன்றாமிடத் தையும், முத்துப்பட்டினம் அணி நான்காமிடத்தையும் வென்றன. வெற்றிபெற்ற அணிகளுக்கு ரொக்கம் மற்றும் பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவிற்கு சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், சாக் கோட்டை சேர்மன் சரண்யா செந்தில்நாதன் கலந்து கொண்டு பரிசுகளை வழங் கினர்.

    இதில் ஒன்றிய கவுன்சி லர்கள் சுப்பிரமணியன், தேவிமீனாள் மகேந்திரன், காரைக்குடி நகர செயலாளர் மெய்யப்பன், அம்மா பேரவை ஊரவயல் ராமு, ஒன்றிய துணை செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சி.கே.நாகராஜ், சங்கராபுரம் ஊராட்சி உறுப்பினர் ரஞ்சித்குமார், கிளை செயலாளர்கள் நம்பிராஜன், கைலாசநாதன், வீரப்பன், மனோகரன், மாரியப்பன், கபிலன், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தகவல் தொழில்நுட்ப அணி திவாகர் நன்றி கூறினார்.

    • ஜாகீர்உசேன் கல்லூரியில் கல்லூரிகள் அளவிலான கால்பந்து போட்டி நடந்தது.
    • கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம்மது முஸ்தபா தொடங்கி வைத்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் கால்பந்து போட்டி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. 12 கல்லூரி அணிகள் பங்கு பெற்ற போட்டியை இளையான்குடியின் முன்னாள் கால்பந்து வீரர் நைனா முகமது, கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான், கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம் மது முஸ்தபா தொடங்கி வைத்தனர்.

    அரையிறுதி போட்டியில் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் அணி, இந்நாள் மாணவர்கள் அணி, ராமநாதபுரம், செய்யது அம்மாள் கல்லூரி அணி மற்றும் காரைக்குடி வித்யாகிரி கல்லூரி அணி ஆகிய அணிகள் கலந்து கொண்டன.

    இதில் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி முன்னாள் மாண வர் அணி முதல் பரிசும், காரைக்குடி வித்யகிரி கல்லூரி அணி 2-ம் பரிசும், இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி இந்நாள் மாணவர்கள் அணி 3-ம் பரிசும், ராமநாதபுரம், செய்யது அம்மாள் கல்லூரி அணி 4-ம் பரிசும் பெற்றனர்.

    பரிசளிப்பு விழாவில் கல்லூரி உடற்கல்வி இயக்கு னர் காளிதாசன் வரவேற் றார். சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் ஷபினுல்லாஹ் கான் வாழ்த்தி பேசினார். முன்னாள் மாணவர் கால்பந்து வீரர் கமருதீன், சேது பொறியியல் கல்லூரி யின் உடற்கல்வி இயக்குனர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    சிறப்பு விருந்தினர்கள் மற்றும் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் அப்துல் சலீம், கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் மற்றும் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம்மது முஸ்தபா ஆகியோரும் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசு கோப்பை களை வழங்கினர்.

    தமிழ்த்துறை உதவி பேராசிரியர் அப்துல் ரஹீம் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை காஜா நஜிமுதீன் செய்திருந்தார்.

    • தென் ஆப்பிரிக்காவை 2-1 என்ற கணக்கிலும், இத்தாலியை 5-0 என்ற கணக்கிலும் வீழ்த்தி இருந்தது.
    • மெல்போர்னில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பிரேசில்- ஜமைக்கா அணிகள் மோதின.

    மெல்போர்ன்:

    உலக கோப்பை மகளிர் கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.

    ஹேமில்டனில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் 'ஜி' பிரிவில் உள்ள சுவீடன்-அர்ஜென்டினா அணிகள் மோதின.

    இதில் சுவீடன் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது. அந்த அணி 'ஹாட்ரிக்' வெற்றியை பெற்றது.

    தென் ஆப்பிரிக்காவை 2-1 என்ற கணக்கிலும், இத்தாலியை 5-0 என்ற கணக்கிலும் வீழ்த்தி இருந்தது.

    இதே பிரிவில் வெலிங்டனில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-இத்தாலி அணிகள் மோதின. இதில் தென் ஆப்பிரிக்கா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    'ஜி' பிரிவில் சுவீடன் 3 வெற்றியுடன் 9 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், தென் ஆப்பிரிக்கா 1 வெற்றி, 1 டிரா, 1 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தையும் பிடித்து நாக் அவுட்டான 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன. இத்தாலி 1 வெற்றி, 2 தோல்வியுடன் 3 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தையும், அர்ஜென்டினா ஒரு டிரா, 2 தோல்வியுடன் 1 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தையும் பிடித்தன. இத்தாலி, அர்ஜென்டினா அணிகள் வெளியேற்றப்பட்டன.

    சிட்னியில் நடந்த 'எப்' பிரிவு ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ்-பனாமா அணிகள் மோதின. பிரான்ஸ் அணி கோல் மழை பொழிந்தது. அந்த அணி 6-3 என்ற கோல் கணக்கில் பனாமாவை வீழ்த்தியது.

    இதே பிரிவில் மெல்போர்னில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பிரேசில்- ஜமைக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. ஜமைக்காவை வீழ்த்த முடியாததால் பிரேசில் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.

    இந்த பிரிவில் பிரான்ஸ் 7 புள்ளியுடன் முதல் இடத்தையும், ஜமைக்கா 5 புள்ளியுடன் 2-வது இடத்தையும் பிடித்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன. பிரேசில் 4 புள்ளியுடன் 3-வது இடத்தையும், பனாமா புள்ளி எதுவும் பெறாமல் 4-வது இடத் தையும் பிடித்து வெளியேறின.

    இன்றுடன் 'லீக்' ஆட்டங்கள் முடிவடைகிறது. 'எச்' பிரிவில் நடைபெறும் ஆட் டங்களில் மொராக்கோ-கொலாம்பியா, ஜெர்மனி-தென்கொரியா அணிகள் மோதுகின்றன.

    இதுவரை சுவிட்சர்லாந்து, நார்வே, ஆஸ்திரேலியா, நைஜீரியா, ஜப்பான், ஸ்பெயின், இங்கிலாந்து, டென்மார்க், நெதர்லாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜமைக்கா, சுவீடன், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இன்றைய போட்டி முடிவில் 2 அணிகள் தகுதி பெறும்.

    2-வது சுற்று போட்டிகள் 5-ந்தேதி தொடங்குகிறது.

    • பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • கடந்த 2019ம் ஆண்டு பிரான்ஸில் நடந்த உலகக்கோப்பை போட்டியின் டிக்கெட் விற்பனையை விட அதிகம்.

    9-வது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரும் ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்டு 20ம் தேதி வரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறுகிறது. 32 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

    பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏற்கனவே தொடங்கிய நிலையில், இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது.

    இது, கடந்த 2019ம் ஆண்டு பிரான்ஸில் நடந்த உலகக்கோப்பை பெண்கள் கால்பந்து போட்டியின் மொத்த டிக்கெட் விற்பனையைவிட இது அதிகமாகும்.

    • தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த ரசிகர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • ரசிகர் இறந்ததையடுத்து கால்பந்து கிளப் சார்பில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

    அர்ஜென்டினாவில் நேற்று ரிவர் பிளேட், டெப்சேனா ஒய் ஜஸ்டிகா அணிகளுக்கிடையிலான கால்பந்து போட்டி பியூனஸ் அயர்சில் உள்ள ஸ்டேடியத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

    அப்போது மைதானத்தின் கேலரியில் அமர்ந்திருந்த 53 வயது மதிக்கத்தக்க ரசிகர் ஒருவர், கீழே விழுந்துவிட்டார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கு மருத்துவக் குழுவினர் விரைந்தனர். ஆனால் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த ரசிகர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் காரணமாக, முதலில் மருத்துவ எமர்ஜென்சி என கூறி போட்டி 14 நிமிடங்களுக்கு போட்டி நிறுத்தப்பட்டது. பின்னர் போட்டி தொடங்கியது. அதன்பின்னர் ரசிகர் இறந்தது தொடர்பாக நடுவர் அறிவித்ததும், போட்டி மேலும் 27 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது.

    மேலும் ஒருநாள் முழுவதும்  துக்கம் அனுசரிக்கப்பட்டதுடன், மைதானம் 24 மணி நேரம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.

    • காரைக்குடி அருகே சிறுவர் கால்பந்து போட்டியை ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார் .
    • பரிசளிப்பு விழாவில் கோட்டையூர் பேரூராட்சி தலைவர் கே.எஸ்.கார்த்திக் சோலை கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் வேலங்குடி புளூஸ் கால்பந்து கழகம் சார்பில் 13 மற்றும் 15 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடந்தது. இதில் தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, சென்னை உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து அணிகள் கலந்து கொண்டன. 13 வயதுக்குட்பட்டோர் பிரிவில் காரைக்குடி ஆரோகிக் அகாடமி முதலிடத்தையும், ஒரத்தநாடு ஒய்.பி.ஆர். அகாடமி 2-ம் இடத்தையும், கோட்டையூர் முத்தையா அழகப்பா பள்ளி3-ம் இடத்தையும் வென்றன. 15 வயதுக்குட்பட்டோர் பிரிவில் காரைக்குடி காட்டுத்தலைவாசல் அப்பாஸ் மெமோரியல் அணி முதலிடத்தையும், சென்னை அணி 2-ம் இடத்தையும், ஒய்.பி.ஆர். அணி 3-ம் இடத்தையும் வென்றன.

    போட்டிகளை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், மாங்குடி எம்.எல்.ஏ., சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளரும், சிவகங்கை மாவட்ட கால்பந்து கழக தலைவருமான கே.ஆர்.ஆனந்த் மற்றும் பலர் தொடங்கி வைத்தனர். பரிசளிப்பு விழாவில் கோட்டையூர் பேரூராட்சி தலைவர் கே.எஸ்.கார்த்திக் சோலை கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

    • ஆட்டத்தில் மெஸ்சி 26-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
    • மெஸ்சி 841 போட்டிகளில் 702 கோல்களை அடித்துள்ளார்.

    பாரீஸ்:

    உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் லியோனல் மெஸ்சி. அர்ஜெண்டினா கேப்டனான அவர் தற்போது பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் செய்ன்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி) கிளப்புக்காக விளையாடி வருகிறார்.

    பிரான்சு கால்பந்து 'லீக்' போட்டியில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் பி.எஸ்.ஜி-நைஸ் அணிகள் மோதின. இதில் பி.எஸ்.ஜி. 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தில் மெஸ்சி 26-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

    இதன்மூலம் ஐரோப்பிய கிளப் கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்தவர் என்ற சாதனையை மெஸ்சி பிடித்தார். அவர் ரொனால்டோவை முந்தி புதிய சாதனை புரிந்தார்.

    மெஸ்சி 841 போட்டிகளில் 702 கோல்களை அடித்துள்ளார். கிறிஸ்டியானா ரொனால்டோ 949 போட்டிகளில் 701 கோல்கள் அடித்துள்ளார். ரொனால்டோவை விட குறைவான போட்டிகளில் விளையாடி மெஸ்சி அதிக கோல்களை அடித்துள்ளார்.

    • திருப்பூர் அணி 1-0 என்கிற கோல்கள் கணக்கில் புதுக்கோட்டை அணியையும் வென்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
    • தேசிய மூத்தோர் கால்பந்து ஒருங்கிணைப்பாளர்கள் பெண்டா நாகராஜ், நஞ்சன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    அரவேணு,

    கோத்தகிரி காந்தி மைதானத்தில் ராவ்பகதூர் ஆரிகவுடர் நினைவுக் கோப்பைக்கான மாநில அளவிலான மூத்தோர் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் கேரளா, சென்னை, புதுக்கோட்டை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், வியாசர்பாடி மற்றும் நீலகிரி ஆகிய 8 அணிகள் பங்கேற்று விளையாடியது.

    இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டிகளில் கேரள அணி சென்னை அணியை 5-0 என்ற கோல்கள் கணக்கிலும், திண்டுக்கல் அணி, கோவை அணியை 1-0 என்கிற கோல்கள் கணக்கிலும், நீலகிரி அணி 4-0 என்ற கோல்கள் கணக்கில் சென்னை வியாசர்பாடி அணியையும், திருப்பூர் அணி 1-0 என்கிற கோல்கள் கணக்கில் புதுக்கோட்டை அணியையும் வென்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

    நாளை காலை நடைபெறவுள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் கேரளா மற்றும் திண்டுக்கல் அணிகளும், 2வது அரையிறுதிப் போட்டி யில் நீலகிரி மற்றும் திருப்பூர் அணிகளும் விளையாடுகின்றன. இதில் வெற்றிபெறும் அணிகளுக்கிடையேயான இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நாளை மாலை நடைபெறுகிறது.

    இந்த போட்டிகளை தேசிய கால்பந்து நடுவர் பால கிருஷ்ணன் தலைமையில் தேசிய மூத்தோர் கால்பந்து ஒருங்கிணைப்பாளர்கள் பெண்டா நாகராஜ், நஞ்சன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • ஒடிசா அணி 11 ஆட்டத்தில் 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு டிராவுடன் 19 புள்ளிகள் பெற்று 6வது இடத்தில் உள்ளது.
    • மும்பை அணி 11 ஆட்டத்தில் 8 வெற்றி, 3 டிராவுடன் 27 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

    இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடந்து வருகிறது. இதில் நாளை நடக்கும் லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி- ஒடிசா எப்.சி. அணிகள் மோதுகின்றன.

    இப்போட்டி புவனேஸ்வரில் நாளை இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. மும்பை அணி 11 ஆட்டத்தில் 8 வெற்றி, 3 டிராவுடன் 27 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

    அந்த அணி 9வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும். ஒடிசா அணி 11 ஆட்டத்தில் 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு டிராவுடன் 19 புள்ளிகள் பெற்று 6வது இடத்தில் உள்ளது. அந்த அணி உள்ளூரில் விளையாடுவதால் வெற்றிக்கு போராடும்.

    • ராயபுரம் ராபின்சன் மைதானத்தில் பெரிய திரையில் கால்பந்து போட்டியை பார்க்க ஏற்பாடு.
    • தீக்காயம் அடைந்த 2 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.

    ராயபுரம்:

    கத்தாரில் நேற்று நடைபெற்ற உலககோப்பை கால்பந்து இறுதி போட்டியை ரசிகர்கள் பெரிய திரையில் காணும் வகையில் சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள ராபின்சன் விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து கால்பந்து இறுதி போட்டியை ரசிக்க நேற்று இரவு சென்னையின் பல்வேறு பகுதியில் இருந்து ரசிகர்கள் அந்த மைதானத்திற்கு வந்திருந்தனர். இதனால் மைதானம் முழுவதும் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு இருந்தனர்.

    அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சி முதல் கோல் அடித்த போது உற்சாகம் அடைந்த ரசிகர்கள் சிலர் பட்டாசு வெடித்தனர். அப்போது ராக்கெட் பட்டாசு ஒன்று கூட்டத்திற்குள் புகுந்து பறந்து சென்று வெடித்தது.

    இதனால் அந்த கூட்டத்தில் இருந்த கேரளாவை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் ராகேஷ் மற்றும் ரகுனேஷ் உடலில் தீப்பற்றியது. இதனால் கூட்டத்திலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு காணப்பட்டது. உடனடியாக அங்கிருந்த சிலர் தீயில் கருகிய மாணவர்கள் 2 பேரையும் மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதில் மாணவர் ரகுனேசுக்கு முகம், தாடை, தோள் பட்டை, கையிலும், ராகேசுக்கு முதுகிலும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து பெரிய திரையில் கால்பந்து போட்டி ஒளிபரப்பப்பட்டது. ரசிகர்கள் உற்சாகத்துடன் அதை பார்த்து ரசித்து சென்றனர்.

    ×