search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வ.உ.சி.மைதானம்"

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வ.உ.சி. மைதானத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
    • மைதானத்தில் முதன்முதலாக எழுவர் ஆண்கள் அதிவிரைவு கால்பந்து போட்டி இன்று நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாளை வ.உ.சி. மைதானம் நவீன கேலரிகளுடன் புனரமைக்கப்பட்டது.

    கால்பந்து போட்டி

    அங்கு பணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில் கடந்த மாதம் 8-ந்தேதி நெல்லை வந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மைதானத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து இன்று இந்த மைதானத்தில் முதன்முதலாக எழுவர் ஆண்கள் அதிவிரைவு கால்பந்து போட்டி நடைபெற்றது.

    இதன் தொடக்க விழாவில் நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர்.

    16 அணிகள் பங்கேற்பு

    போட்டியை தொடங்கி வைத்துவிட்டு சிறிது நேரம் கலெக்டர் உள்பட 3 பேரும் மற்ற அதிகாரிகளுடன் சேர்ந்து ஒரு அணியாக இருந்து எதிர்தரப்பில் இருந்த மாணவர்களுடன் கால்பந்து விளையாடினர்.

    இதில் சிறப்பாக விளையாடிய கலெக்டர் விஷ்ணு முதல் கோலை அடித்தார். இந்த போட்டியில் 16 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இந்த போட்டி காலை 8 மணிக்கு தொடங்கியது. ஒவ்வொரு போட்டியும் 12 நிமிடம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 2 நிமிட இடைவெளியுடன் மீண்டும் 12 நிமிடங்கள் நடைபெற்றது.

    தொடர்ந்து இன்று மாலை முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால் பாளை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மைதானத்திற்கு வந்து மாணவர்களின் விளையாட்டு போட்டிகளை கண்டுகளித்தனர்.

    ×