என் மலர்
நீங்கள் தேடியது "sports competiton"
- இறுதி போட்டியில் 2-1 என்ற கோல்கணக்கில் ராணுவ வீரர்களின் அணி வெற்றி பெற்றது.
- கால்பந்து போட்டியை ஏராளமானவர்கள் திரண்டு கண்டுகளித்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் எடபள்ளி கிராமத்தில் உள்ள புகழ் பெற்ற மைதானத்தில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் நடைபெற்றன.
பல்வேறு அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் இறுதி போட்டியில் அணிகொரை அணியும், ராணுவ வீரர்களின் எம்.ஆர்.சிஅணியும் மோதி.ன மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி போட்டியில் 2-1 என்ற கோல்கணக்கில் ராணுவ வீரர்களின் எம்.ஆர்.சி அணி வெற்றி பெற்றது வெற்றி பெற்ற வீரர்களுக்கு எடப்பள்ளி கால்பந்து கழக தலைவரும் சமுக சேவகருமான காளிதாஸ் தலைமையில் கிராம தலைவர்கள் முன்னிலையில் வெற்றி கோப்பைகள் வழங்கபட்டன.இந்த கால்பந்து போட்டியை ஏராளமானவர்கள் திரண்டு கண்டுகளித்தனர்






