search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருணாநிதி நூற்றாண்டு விழா"

    • சென்னையில் 10 இடங்களில் நாளை மருத்துவ முகாம் நடக்கிறது.
    • சென்னையில் 10 இடங்களில் நாளை மருத்துவ முகாம் நடக்கிறது.

    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் நாளை 100 இடங்களில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

    இந்த மருத்துவ முகாம்களில் பொதுமருத்துவம், பல் மருத்துவம், பொது ஆலோசனை, உடலில் கொழுப்பு சத்து கண்டறிதல் முழு ரத்த பரிசோதனை, மார்பக பரிசோதனை, காச நோய் பரிசோதனை, இ.சி.ஜி., எக்கோ, காது, மூக்கு, தொண்டை பரிசோதனை, சித்த மருத்துவம், தோல் நோய், குழந்தைப்பேறு, மன நல ஆலோசனை, கண் பார்வை குறைபாடு, தொழுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். தேவையானவர்களுக்கு மருந்துகளும் வழங்கப்படும்.

    சென்னையில் 10 இடங்களில் நாளை இந்த முகாம் நடக்கிறது. முகாம் நடைபெறும் இடங்கள் வருமாறு:-

    1. சென்னை நடுநிலைப் பள்ளி, கத்திவாக்கம்,

    2. மான்போர்டு பள்ளி, சிங்கார வேலன் நகர், 4-வது தெரு, புத்தாகரம், கொளத்தூர்.

    3. சென்னை மேல்நிலைப்பள்ளி, புதிய வண்ணாரபேட்டை.

    4. சி.எஸ்.இ. பெண்கள் உயர்நிலைப் பள்ளி, ஷேக் மேஸ்திரி தெரு, ராயபுரம்.

    5. ஸ்ரீ வெங்கடேஷ்வரா மெட்ரிக்குலேஷன் பள்ளி, செல்லியம்மன் நகர், அத்திப்பட்டு, அம்பத்தூர்.

    6. சென்னை நடுநிலைப் பள்ளி, சிவன்கோவில் தெரு, வில்லிவாக்கம்.

    7. சென்னை மேல்நிலைப் பள்ளி, புலியூர், ஆற்காடு சாலை, கோடம்பாக்கம்.

    8. அரசு பள்ளி, சன்னதி தெரு, மதுரவாயல்.

    9. ஏ.ஜெ.எஸ். நிதி மேல்நிலைப் பள்ளி, பொன்னியம்மன் கோவில் தெரு, ஆலந்தூர்.

    10. பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, பள்ளிக்கரணை.

    • பொதுமக்கள் பயன்பெறலாம்
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 100 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய 2 இடங்களிலும் 24-ந்தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

    இந்த மருத்துவ முகாமில் இரத்த அழுத்த பரிசோதனை. சிறுநீர் பரிசோதனை, எக்கோ மற்றும் இசிஜி,பெண்களுக்கான மார்பக புற்று நோய் மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக மேற்க்கொள்ளப்படுகிறது.

    மேலும் பொது மருத்துவம். பொது அறுவை சிகிச்சை. மகளிர் மருத்துவம், கண், காது மூக்கு, தொண்டை, பல் மருத்துவம்,எலும்பியல் மற்றும் மனநல மருத்துவம்,காசநோய் பரிசோதனை மற்றும் தொழுநோய் உள்பட அனைத்திற்கும் சிறப்பு மருத்துவர்களால் பன்னோக்கு மருத்துவ சிகிச்சையும், இதனுடன் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.

    எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாளு கலெக்டர் வளர்மதி கேட்டு கொண்டுள்ளார்.

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடக்கிறது.
    • இந்த மருத்துவ முகாமில், அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    விருதுநகர்

    தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 100 இலவச பன்நோக்கு சிறப்பு முகாம்களை நடத்திட தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

    அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி அமலா உயர்நிலைப்பள்ளி மற்றும் அருப்புக்கோட்டை ஏ.பி.டி.எஸ்.எம்.பி.எஸ். மெட்ரிக் பள்ளி ஆகிய இடங்களில் வருகிற 24-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும்.

    இந்த சிறப்பு மருத்துவ முகாமில் பன்னோக்கு மருத்துவ ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் வழங்கப்படும். இதில் ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை, இசிஜி, எக்கோ, பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, தொழு நோய் கண்டறியும் பரிசோதனை, காசநோய் பரிசோதனை, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைக ளும், ஆலோச னைகளும் வழங்கப்படும்.

    மேலும் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை, பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மனநல மருத்துவம் உள்ளிட்ட சிறப்பு சிகிச்சைக் கான ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்படும்.இந்த மருத்துவ முகாமில், அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இந்த தகவலை விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
    • நிகழ்ச்சியில் பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் பங்கேற்றுள்ளார்.

    மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.

    தேர் போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள கோட்டம் 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமாக உள்ளது.

    இதற்காக ரூ.12 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. கருணாநிதியின் பொது வாழ்வை சித்தரிக்கும் அருங்காட்சியகம், நூலகம், திருமண மண்டபங்கள் ஆகியவையும் இதில் அமைக்கப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழாவை சிறப்பாக நடத்துவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்களுக்கு முன்பே திருவாரூர் வந்து விட்டார். நேற்று விழா ஏற்பாடுகளை கவனித்தார். இன்று காலையிலும் கலைஞர் கோட்டம் நிகழ்ச்சியை காண வந்திருந்தார்.

    காலை 10 மணிக்கு திறப்பு விழா நிகழ்ச்சி மங்கள இசையுடன் கோலாகலமாக தொடங்கியது. முதலில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. இதில் கபிலன், பா.விஜய், ஆண்டாள் பிரியதர்ஷினி, தஞ்சை இனியன் ஆகியோர் கவிதை வாசித்து சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.

    இதன் பிறகு சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் வந்து பார்த்து ரசித்தார். அவருடன் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தலைமைக் கழக நிர்வாகிகள், வாரியத் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் அமர்ந்து பார்வையிட்டனர்.

    காலை நிகழ்ச்சிகள் முடிந்ததும் உணவு இடைவேளைக்கு பிறகு கலைஞர் கோட்டம் திறப்பு விழா நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது.

    கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் பங்கேற்றுள்ளார்.

    நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் திருவாரூர் வந்துள்ளனர். விழா நடைபெறும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பும் அதிக அளவில் போடப்பட்டு உள்ளது.

    • அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.
    • ஆன்மீகவாதிகள் கலைஞரின் புகழ் குறித்து வாழ்த்தி பேசுகிறார்கள்.

    சென்னை:

    சென்னை தெற்கு மாவட்டம் விருகம்பாக்கம் தொகுதி கலைஞர் நகர் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு பொன்னழகு திருமண மண்டபத்தில் நடக்கிறது. பகுதி செயலாளர் கே.கண்ணன் தலைமை தாங்குகிறார். பிரபாகர் ராஜா எம்.எல்.ஏ., மாநகராட்சி கணக்கு குழு தலைவர் க.தனசேகரன், ராசா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.

    இதில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சிவஞான பாலய சுவாமிகள், கோவை சாந்தலிங்க மருதாசல அடிகளார், ராமானந்த குமரகுருபர அடிகளார், கவிஞர் இளைய கம்பன் ஆகிய ஆன்மீகவாதிகள் கலைஞரின் புகழ் குறித்து வாழ்த்தி பேசுகிறார்கள்.

    நிகழ்ச்சியில் தமிழச்சி தங்க பாண்டியன், துணைமேயர் மகேஷ்குமார், காசி முத்துமாணிக்கம், அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ., துரைராஜ், முருகேசன், தங்கராஜ் வாசுகி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    • நல்லூர் பகுதி 47-வது வார்டில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது
    • வட்ட செயலாளர்கள் வெங்கட்ராஜ், ஆறுமுகம், மனோகரன், பத்ரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்டம் தெற்கு மாநகருக்கு உட்பட்ட நல்லூர் பகுதி 47-வது வார்டில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைமுன்னிட்டு தெருமுனைக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், மேயர் தினேஷ்குமார், 3-வது மண்டல தலைவர் கோவிந்தசாமி, பகுதி செயலாளர் மேங்கோ பழனிச்சாமி ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.

    கட்சியின் தலைமை கழக பேச்சாளர்கள் கந்தலி கண்ணன், மனோகர் பாபு ஆகியோர் கருணாநிதியின் சாதனைகள் குறித்து பேசினார்கள். இதில் வட்ட செயலாளர்கள் வெங்கட்ராஜ், ஆறுமு–கம், மனோகரன், பத்ரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • சேலத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஈரடுக்கு பஸ் நிலையத்தை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.
    • ஒரே நேரத்தில் 80 பஸ்கள் நிறுத்தும் அளவிற்கு பஸ் நிலையம் சீரமைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை சேலம் வந்தார்.

    தனி விமானம் மூலம் சேலம் வந்த அவரை ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் ஆகியோர் வரவேற்றனர்.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் 5 ரோடு அருகே உள்ள ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். பின்னர் இரவு அஸ்தம்பட்டியில் உள்ள விருந்தினர் மாளிகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தங்கினார்.

    சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழுஉருவ வெண்கல சிலை நிறுவப்பட்டு உள்ளது. இந்த சிலையை இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இதனை தொடர்ந்து நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு பழைய பஸ் நிலையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். மேலும் அவர் மறுசீரமைப்பு செய்யப்பட்ட நேரு கலையரங்கம், போஸ் மைதானம், வ.உ.சி. மார்க்கெட், பெரியார் பேரங்காடி ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.

    இதை தொடர்ந்து சேலம் அருகே உள்ள கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு 50 ஆயிரத்து 202 பயனாளிகளுக்கு ரூ.170.32 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

    விழாவில் மேட்டூர் மற்றும் எடப்பாடி நகராட்சிகளில் புதிய பஸ் நிலையங்கள் அமைக்கும் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேட்டூரில் ரூ.6.7 கோடி செலவிலும், எடப்பாடியில் ரூ. 5 கோடி மதிப்பிலும் புதிய பஸ் நிலையங்கள் கட்டப்படுகின்றன.

    போடிநாயக்கன்பட்டி ஏரி, மூக்கனேரி, அல்லிக்குட்டை ஏரி புனரமைத்து அழகுப்படுத்தும் பணிகள், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு சாலைப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    மேலும் உத்தமசோழபுரம்-திருமணிமுத்தாற்றின் குறுக்கே மற்றும் தென்னங்குடிபாளையம்-வசிஷ்ட ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலங்கள் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். மொத்தம் ரூ.235.82 கோடி யில் 331 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    விழாவில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.653 கோடியில் இளம்பிள்ளை கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, பனமரத்துப்பட்டி, மல்லூர், இடங்கண சாலை ஆகிய 5 பேரூராட்சிகள் மற்றும் சேலம், வீரபாண்டி, பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 778 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தில் முதற்கட்டமாக 301 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் மற்றும் ரூ.102 கோடியில் கட்டப்பட்டுள்ள சேலம் அரசு சட்டக்கல்லூரிக்கான மாணவ, மாணவியர் விடுதிகளுடன் கூடிய நிரந்தர கட்டிடம் உள்பட சேலம் மாவட்டத்தில் ரூ.1,367.47 கோடியில் முடிவுற்ற 390 பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை சேலம் வந்தார்.
    • சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு 16 அடி உயரத்தில் முழுஉருவ வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் அண்ணா பூங்காவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு முழு உருவச்சிலை (வெண்கலம்) அமைக்கப்படும் என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சேலம் மாநகராட்சி சிறப்பு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அண்ணா பூங்கா வளாகத்தில் மண்டபம் கட்டுமான பணி மற்றும் கருணாநிதி சிலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது.

    சுமார் 1,713 சதுரடி பரப்பில் மண்டபம் அமைக்கப்பட்டு, அங்கு 20 அடி உயரத்தில் பிரமாண்டமாக கருணாநிதியின் முழுஉருவ வெண்கல சிலை நிறுவப்பட்டது.

    இதையடுத்து இன்று காலை அவரது சிலை திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.

    தி.மு.க. தொண்டர்கள் புடைசூழ தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணா நிதியின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார். அப்போது கட்சியினர் மகிழ்ச்சி பொங்க, ஆரவாரத்துடன் கலைஞர் புகழ் வாழ்க என கோஷங்கள் எழுப்பினர். பிரமாண்ட கருணாநிதி சிலையை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

    கருணாநிதியையும், சேலத்தையும் பிரித்து பார்க்க முடியாது. திரையுலகில் உச்சம் தொடவும், அரசியல் அஸ்திவாரத்திற்கும் கருணாநிதி வாழ்வில் சேலம் முக்கிய பங்காற்றி உள்ளது. கருணாநிதிக்கு திருவாரூரை தாய் வீடு என்றால், சேலத்தை அவரது புகுந்த வீடு என்று குறிப்பிடும் அளவுக்கு சேலத்துடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. திருவாரூரில் வசித்தபோது நாடகத்துறையில் இருந்த அவர் திரைப்படத்துறைக்கு வந்தது சேலத்தில்தான்.

    சேலம் மாடர்ன் தியேட்டர்சில் இணைந்து அவர் மந்திரி குமாரி படத்துக்கு கதை வசனம் எழுதினார். அதன் தொடர்ச்சியாக பல்வேறு படங்களுக்கு அவர் கதை வசனம் எழுத தொடக்கமாக அமைந்தது சேலம். அந்த காலத்தில் தனது தாயார் அஞ்சுகம் அம்மாளுடன் சேலம் கோட்டை பகுதியில் ஹமீத் சாகிப் தெருவில் கருணாநிதி ரூ.50 வாடகைக்கு குடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதன் மூலம் சேலத்துக்கும் கருணாநிதிக்கும் உள்ல நெருங்கிய தொடர்பை அறியலாம். அவருக்கு சேலத்தில் பிரமாண்டமான சிலை அமைந்திருப்பது சேலத்துக்கு கிடைத்த பெருமை என்று தி.மு.க. தொண்டர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

    • தூய்மை பணியாளர்கள் கருணாநிதி உருவ வடிவில் அணிவகுத்து நின்றனர்.
    • டிரோன் மூலம் எடுக்கப்பட்ட காட்சியில் தத்ரூபமாக அமைந்திருந்த கருணாநிதியின் படம்.

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று காலை திரண்ட 2752 தூய்மை பணியாளர்கள் கருணாநிதி உருவ வடிவில் அணிவகுத்து நின்றனர்.

    டிரோன் மூலம் எடுக்கப்பட்ட காட்சியில் தத்ரூபமாக அமைந்திருந்த கருணாநிதியின் படம்.

    • கருணாநிதி நினைவகம் உதய சூரியன் வடிவில் கட்டப்பட்டு வருகிறது.
    • முகப்பில் பேனா வடிவிலான தூண் வைக்கப்படுகிறது.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதிக்கு நினைவகம் கட்டப்படும் என்று சட்டசபையில் அறிவித்தார்.

    கருணாநிதி ஆற்றிய அரும்பணிகளை போற்றும் விதமாக அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை பொதுமக்களும்-வருங்கால தலைமுறையும் அறியக்கூடிய வகையில் நவீன விளக்கப்படங்களுடன் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் கருணாநிதிக்கு நினைவகம் அமைக்கப்படும் என்றார்.

    இந்த நினைவகம் உதய சூரியன் வடிவில் கட்டப்பட்டு வருகிறது. முகப்பில் பேனா வடிவிலான தூணும் வைக்கப்படுகிறது.

    இந்த கட்டுமான பணிகள் கடந்த 1½ ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதை இன்னும் 2 மாதத்திற்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதையொட்டி கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் வடசென்னை பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் கருணாநிதி நினைவகம் ஆகஸ்டு 7-ந் தேதி திறக்கப்படும் என்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது:-

    கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சென்னை கிண்டியில் அமைக்கப்படும் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நினைவு நூலகம், திருவாரூரில் கலைஞர் கோட்டம் ஆகியவற்றை திறந்து வைக்க இருக்கிறோம்.

    ஆகஸ்டு 7-ந் தேதி சென்னை கடற்கரையில் கலைஞர் நினைவகம் திறப்பு விழா காண இருக்கிறது.

    தமிழ்நாட்டின் திரும்பும் திசை எல்லாம் நிறுவனங்களையும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் பெயரால் நினைவுச் சின்னங்களையும் உருவாக்கிய கலைஞர் பெயரிலான சின்னங்கள் மாதம்தோறும் திறக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
    • கருணாநிதி இன்னும் 5 ஆண்டுகள் உயிருடன் இருந்திருந்தால் விழ நாயகராக அமர்ந்திருப்பார் என்றார் மு.க.ஸ்டாலின்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் சென்னை பெரம்பூர் பின்னி மில் மைதானத்தில் இன்று மாலை தொடங்கியது.

    இந்தக் கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    கருணாநிதி இன்னும் 5 ஆண்டுகள் உயிருடன் இருந்திருந்தால் விழா நாயகராக அமர்ந்திருப்பார்.

    கருணாநிதி கண்காணிக்கிறார் என்ற எண்ணத்திலேயே செயல்பட்டுக் கொண்டிருந்க்கிறேன்.

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை அடுத்த ஆண்டு ஜூன் 3 வரை கொண்டாட உள்ளோம்.

    எந்தத் திட்டத்தை தொடங்கினாலும் கருணாநிதி என்னுடன் இருக்கிறார்.

    நிகழ்கால செயல்பாடுகளின் எதிர்காலத்தை தீர்மானித்தவர் கருணாநிதி

    திராவிடம் என்ற சொல்லைப் பார்த்து இன்று சில ர் பயப்படுகின்றனர்.

    எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கக் கூடாது என்பவர்களே திராவிடத்தை எதிர்க்கின்றனர்.

    திராவிட மாடல் ஆட்சிக்கு அடித்தளம் இட்டவர் கருணாநிதி என தெரிவித்தார்.

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
    • சென்னை கிண்டியில் மரக்கன்றை நட்டு, இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    சென்னை:

    கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் சென்னை பெரம்பூர் பின்னி மில் மைதானத்தில் இன்று மாலை தொடங்கி பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    சென்னை கிண்டியில் மரக்கன்றை நட்டு, இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெறும் விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    ×