என் மலர்
நீங்கள் தேடியது "தெரு முனைக்கூட்டம்"
- நல்லூர் பகுதி 47-வது வார்டில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது
- வட்ட செயலாளர்கள் வெங்கட்ராஜ், ஆறுமுகம், மனோகரன், பத்ரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்டம் தெற்கு மாநகருக்கு உட்பட்ட நல்லூர் பகுதி 47-வது வார்டில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைமுன்னிட்டு தெருமுனைக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், மேயர் தினேஷ்குமார், 3-வது மண்டல தலைவர் கோவிந்தசாமி, பகுதி செயலாளர் மேங்கோ பழனிச்சாமி ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.
கட்சியின் தலைமை கழக பேச்சாளர்கள் கந்தலி கண்ணன், மனோகர் பாபு ஆகியோர் கருணாநிதியின் சாதனைகள் குறித்து பேசினார்கள். இதில் வட்ட செயலாளர்கள் வெங்கட்ராஜ், ஆறுமு–கம், மனோகரன், பத்ரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.






