search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கயத்தாறு"

    • மருத்துவ அலுவலர்கள் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர்.
    • டெங்கு ஒழிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எந்திரம் மூலம் புகை மருந்து அடிக்கப்பட்டது.

    கயத்தாறு:

    கொரோனா மற்றும் டெங்கு ஒழிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கயத்தாறு பேரூராட்சி மற்றும் மருத்துவ அதிகாரிகள் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கயத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு கட்டபொம்மன் தெருவில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கயத்தாறு பேரூராட்சி மன்றம் ஏற்பாட்டில், மருத்துவ அலுவலர்கள் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர். மேலும் கொசு புழு ஒழிப்புக்காக எந்திரம் மூலம் புகை மருந்து அடிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் கயத்தாறு பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை, கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன் ஆகியோர் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர்.

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணை ஒருங்கிணைப்பாளர் ராஜதுரை, முன்னாள் பேரூர் செயலாளர் இஸ்மாயில், வழக்கறிஞர் மாரியப்பன், சுகாதார அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி சுகாதார, துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • அட்மா மாநில உறுதுணை விரிவாக்கத் திட்டத்தின் கீழ் கால்நடை வளர்போருக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
    • ஏற்பாடுகளை அட்மா மாநில திட்டத்தின் மேலாளர் சாலமோன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    கயத்தாறு:

    கயத்தாறு யூனியன் தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்தில் கயத்தாறு வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் தலைமையில், அட்மா மாநில உறுதுணை விரி வாக்கத் திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு வேளாண்மை துறை மூலம் தாது உப்புக்கள் இறை உணவுகள் வழங்குதல், அதனை பயன்படுத்தும் விதம் குறித்து கயத்தாறு கால்நடை மருத்துவர் மனோஜ்குமார் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்போருக்கு. செயல்முறை விளக்கம் அளித்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை அட்மா மாநில திட்டத்தின் மேலாளர் சாலமோன், நவராஜ், பொற்செல்வன் மற்றும் அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரத்தினம்பால், ஜெய லெட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

    • கயத்தாறில் கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசின் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா நடைபெற்றது.
    • அரசின் ஊட்டச்சத்து உணவு பெட்டகம் அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

    கயத்தாறு:

    கயத்தாறில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசின் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு 100 கர்ப்பிணிகளுக்கு சத்துணவு பெட்டகத்தை வழங்கினார்.

    நிகழ்ச்சிக்கு மகளிர் திட்ட அலுவலர் வீரபுத்திரன், கயத்தாறு தாசில்தார் சுப்புலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், டாக்டர் திலகவதி ஆகியோர் வரவேற்று பேசினர்.

    கயத்தாறு கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சின்னபாண்டியன், மேற்கு ஒன்றிய செயலாளர் கருப்பசாமி பாண்டியன், கயத்தாறு பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை, நகர செயலாளர் சுரேஷ்கண்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கருப்பசாமிபாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் ராஜதுரை, அங்கன்வாடி வட்டார அலுவலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது:-

    தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு பெட்டகங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் முதலில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு தூத்துக்குடி மாவட்ட மக்கள் சார்பில் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

    இந்த ஊட்டச்சத்து உணவு பெட்டகத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களின் மூலம் அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

    முதல்-அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க கர்ப்பிணி பெண்கள் எந்தவித சத்து குறைபாடுகள் இல்லாமல் பிறக்கும் குழந்தைகள் 100 சதவீதம் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் என்றும், ஊட்டச்சத்து குறை பாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசு சார்பில் உடனடியாக தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களை சிறப்பாக வளர்ச்சி அடைய தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.

    கர்ப்பிணி பெண்களுக்கு கருவுற்ற நாள் முதல் குழந்தை வளர்ச்சி அடையும் வரை 'கோல்டன்' நாட்களாகும். ஆகவே மகிழ்ச்சியாக இருந்து ஆரோக்கியமான குழந்தைகள் பெற்று வளர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சிக்கு மகளிர் திட்ட பிரிவு அலுவலர்கள், கயத்தாறு வட்டார வளர்ச்சி துறை அலுவலர்கள்உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • முருகன் நேற்று தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டு மாலையில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
    • முருகன் உடலை போலீசார் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கயத்தாறு:

    செய்துங்கநல்லூர் அருகே உள்ள கோவிலூத்து கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(வயது 38). கட்டிட தொழிலாளி.

    விபத்து

    இவர் நேற்று விருதுநகர் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டு மாலையில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

    கயத்தாறு அருகே நான்குவழிச்சாலையில் கரிசல்குளம் விலக்கு பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிளை அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இடித்துவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். தகவல் அறிந்த கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த முருகனுக்கு பிச்சம்மாள் என்ற மனைவியும், முனீஸ்வரி(12), பேச்சியம்மாள்(16) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

    • ரமேஷ் கங்கைகொண்டானில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
    • எதிரே வந்த லாரி ரமேசின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள மேல இலந்தைகுளத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 26). இவர் கங்கைகொண்டானில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    லாரி மோதி பலி

    சம்பவத்தன்று வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். ராஜாபுதுக்குடி நாற்கர சாலையில் வந்து கொண்டி ருந்தபோது எதிரே வந்த லாரி அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

    சம்பவ இடத்திற்கு சென்ற இன்ஸ்பெக்டர் விஜகுமார், சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி திலீப் ஆகியோர் ரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்தவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கைது

    தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் லாரி டிரைவரான தச்சநல்லூர் அருகே உள்ள ராமையன்பட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுந்தர் ( 26) என்ப வரை கைது செய்தனர்.

    • அசனார் நகரில் பம்ப் அறை கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.
    • பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

    கயத்தாறு:

    கயத்தாறு பேரூராட்சி பகுதியில் உள்ள கன்னியம்மன் கோவில் தெருவில் மின் மோட்டார் இணைப்புடன் கூடிய புதிய பம்ப் அறை கட்டி சின்டெக்ஸ் டேங்க் அமைக்கவும், அசனார் நகரில் பம்ப் அறை கட்டுவதற்கும், அரசங்குளம் வார்டில் சுடுகாடு பகுதியில் புதிய கொட்டகை அமைப்பதற்கும் பூமி பூஜை நடைபெற்றது.

    பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். இதில் கயத்தாறு கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சின்னப்பாண்டியன், வழக்கறிஞர் மாரியப்பன், பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் நயினார் பாண்டியன், வெயிலாட்சி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் ராஜதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மக்காச்சோள தோட்டங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • பயிர்களை பாதுகாப்பது குறித்த தொழில் நுட்ப ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள வானரமுட்டியில் தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் ஆகியோர் மக்காச்சோளம் பயிரிடப்பட்ட விவசாயிகளின் தோட்டங்களில் ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின் போது மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் வராமல் தடுப்பதற்கு, விதைப்பதற்கு முன் கோடை உழவு செய்தல், ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடுதல் ,தையோமீத்தாக்கம் 4 மில்லி மருந்தை ஒரு கிலோ விதையுடன் கலந்து விதை நேர்த்தி செய்தல், சரியான இடைவெளியில் விதைத்தல், வரப்பு பயிராக நாற்றுச் சோளம் பயிரிடுதல் மூலமாகவும் விதைத்தவுடன் இனக்கவர்ச்சிப் பொறி வைத்தல், 15 முதல் 20 நாட்கள் வயதுடைய பயிர்களுக்கு புழு பெண்டியாமைட் 5 மில்லி, 35 முதல் 40 நாட்கள் வயதுடைய பயிர்களுக்கு மெட்டாரைசியம், அனிசோப்பிலே 80கிராம், 40 முதல் 60 நாட்கள் வயதுடைய பயிர்களுக்கு மெக்டின்பென்சோயட் 4 கிராம்,60 நாட்களுக்கு மேல் வயது உடைய பயிர்களுக்கு நவலூரான் 10 மில்லி அல்லது ஸ்பிலோ டோராம் 5 மில்லி மருந்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து படைப்புழு தாக்குதலில் இருந்து மக்காச்சோள பயிர்களை பாதுகாப்பது உள்ளிட்ட தொழில் நுட்ப ஆலோசனைகளை விவசாயிகளுக்கு விளக்கி கூறினர்.

    • நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு நின்றிருந்த அழகுதுரையை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது.
    • ஆத்திரமடைந்த மாடசாமி, அவரது மகன் மற்றும் 5 பேருடன் அழகுதுரை வீட்டிற்கு சென்றனர்.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள மஞ்சநம்பிகிணற்றை சேர்ந்தவர் அழகுதுரை (வயது28). பூ வியாபாரி.

    கொலை

    நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு நின்றிருந்த இவரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது.

    இது தொடர்பாக கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து கழுகுமலை கரிசல்குளத்தை சேர்ந்த ஸ்டாலின், பட்டுராஜ், பாலமுருகன், பாலாபாண்டி மற்றும் மஞ்சநம்பிகிணற்றை சேர்ந்த கனகராஜ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கூறியதாவது:-

    வாக்குமூலம்

    அழகுதுரை சம்ப வத்தன்று தனது உறவினருடன் மஞ்ச நம்பிகிணற்று பகுதியில் உள்ள பாருக்கு மதுக்குடிக்க வந்தார். அப்போது அவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர்.

    இதைப்பார்த்த பார் உரிமையாளரான மாடசாமி அதனை கண்டித்தார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாடசாமி, அவரது மகன் பட்டுராஜா மற்றும் உறவினர்கள் 5 பேருடன் அழகுதுரை வீட்டிற்கு சென்றோம்.

    அப்போது அங்கிருந்த அழகுதுரையிடம் , எங்கள் பாரில் வந்து எப்படி நீங்கள் தகராறு செய்யலாம் என கேட்டோம். இதனால் அவருக்கும், எங்களுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நாங்கள் அரிவாளால் அழகுதுரையை வெட்டிக் கொன்றோம்.

    இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறியுள்ளனர்.

    தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையில் தொடர்புடைய பார் உரிமையாளர் மாடசாமி மற்றும் நாகராஜ் ஆகிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • வாழ்க்கையில் வெறுப்படைந்த சுரேஷ் கடையின் அருகே உள்ள கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • தற்கொலை தொடர்பாக கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள செட்டிக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது57). இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார்.

    இவருக்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் மதுப்பழக்கத்தால் உடல்நலக் குறைவும் ஏற்பட்டுள்ளது.

    இதனால் வாழ்க்கையில் வெறுப் படைந்த அவர் கடையின் அருகே உள்ள கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு சென்ற கயத்தாறு போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சதுரங்க போட்டியை கயத்தாறு பேரூராட்சி மன்ற தலைவி சுப்புலட்சுமி ராஜதுரை தொடங்கி வைத்தார்.
    • பல்வேறு ஊர்களில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டனர்.

    கயத்தாறு:

    தமிழக அரசு அறிவித்ததின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் சதுரங்க போட்டி நடைபெற்று வருகிறது. அதன்படி கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளியில் சதுரங்க போட்டி நடைபெற்றது. பள்ளி பொறுப்பு தலைமையாசிரியர் மரகதம் தலைமை தாங்கினார். போட்டியை கயத்தாறு பேரூராட்சி மன்ற தலைவி சுப்புலட்சுமி ராஜதுரை தொடங்கி வைத்தார்.

    போட்டியில் மாணவ, மாணவிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதில் பல்வேறு ஊர்களில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு மாவட்ட உடற்பயிற்சி அலுவலர் பால்சாமி, கயத்தாறு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன், அரசு மேல்நிலைப்பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர்கள் சுப்புராஜ், சுரேஷ் மற்றும் ஆசிரியர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கோகிலா, தேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பயிற்சியில் தமிழக முதல்-அமைச்சரின் மானாவாரியின் நில மேம்பாட்டு இயக்கம் என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
    • உதவி மேலாண்மை அலுவலர் பிரான்சிஸ், பொருட்களின் மதிப்பு கூட்டு விற்பனை செய்தல் குறித்தும் பல்வேறு வழிமுறைகளையும் எடுத்து கூறினார்.

    கயத்தாறு:

    கயத்தாறு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தின் சார்பில் தெற்கு வண்டானம் கிராமத்தில் விவசாயிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமை கயத்தாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் ஆணைப்படி அட்மா மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.

    இந்த பயிற்சியில் தமிழக முதல்-அமைச்சரின் மானாவாரியின் நில மேம்பாட்டு இயக்கம் என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சிக்கு தெற்கு வண்டானம் ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். அட்மா திட்ட வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் ஆறுமுக பாண்டியன் முன்னிலை வகித்தார்.

    இந்த பயிற்சியில் வாகைகுளம் ஸ்காட் வேளாண்மை அறிவியல் மையத்தை சேர்ந்த வேளாண் வல்லுநர் முருகன் கோடை உழவு மற்றும் அடி உரம் இடுதல், வேப்பம் புண்ணாக்கு, மண் பரிசோதனை அடிப்படையில் உரம் இடுதல் உட்பட பல்வேறு சாகுபடிகள் குறித்து விளக்கி கூறினார்.

    மேலும் இயற்கை பண்ணையம் தரிசு நில மர சாகுபடி குறித்து வேளாண் வணிகத்துறையை சேர்ந்த உதவி மேலாண்மை அலுவலர் பிரான்சிஸ், தமிழக அரசு செயல்பட்டு வரும் தமிழக சேமிப்புக் கிடங்கு உழவர் சந்தை விவசாயிகள், பொருட்களின் மதிப்பு கூட்டு விற்பனை செய்தல் குறித்தும் பல்வேறு வழிமுறைகளை எடுத்து கூறினார்.

    உதவி வேளாண்மை அலுவலர் முத்துமாரி கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றி விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.

    மானாவாரி பயிர்களுக்கான சாகுபடி தொழில்நுட்பம் குறித்து காணொளி காட்சி மூலம் விளக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் மணிகண்டன், துணை வேளாண்மை அலுவலர் முத்துக்குமார், காளிராஜ் மற்றும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சாலமன் நவராஜ்பொற்செல்வன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரத்தினம்பால், ஜெயலட்சுமி மற்றும் உழவர் நண்பர்கள் முத்துப்பாண்டியன், பொன்னுச்சாமி பாண்டியன் ஆகியோர் செய்தனர்.

    • கோவிலின் வெளியே வைக்கப்பட்டிருந்த 2 உண்டியல்கள் உடைக்கப்பட்டு கிடந்தது.
    • 500 கிராம் எடையுள்ள 22 வெள்ளி காப்பு, 20 பித்தளை கொப்பரை ஆகியவற்றையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றனர்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள அரசன்குளம் நான்குவழிச்சாலையில் காந்தாரி அம்மன் கோவில் உள்ளது.

    உண்டியல்கள் உடைப்பு

    இந்தக் கோவிலில் தினமும் பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். நேற்று வழக்கம் நிர்வாகிகள் கோவிலை பூட்டி சென்றனர்.

    இன்று காலை பக்தர்கள் தரிசனம் செய்ய கோவிலுக்கு சென்றனர். அப்போது கோவிலின் வெளியே வைக்கப்பட்டிருந்த 2 உண்டியல்கள் உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் கயத்தாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் காசிலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    அப்போது கோவிலின் வெளியே வைக்க்பபட்டிருந்த 2 உண்டியல்கள் மற்றும் கோவிலின் உள்ளே வைக்கப்பட்டிருந்த ஒரு உண்டியல்களை உடைத்து மர்மநபர்கள் பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது. மேலும் 500 கிராம் எடையுள்ள 22 வெள்ளி காப்பு, 20 பித்தளை கொப்பரை ஆகியவற்றையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றனர்.

    இதைத்தொடர்ந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அதில் 5 பேர் கொண்ட கும்பல் உண்டியல்களை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்தக்காட்சிகளை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடிவருகின்றனர்.       

    ×