என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரமேஷ்
கயத்தாறு அருகே லாரி மோதி வாலிபர் பலி - நெல்லை டிரைவர் கைது
- ரமேஷ் கங்கைகொண்டானில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
- எதிரே வந்த லாரி ரமேசின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள மேல இலந்தைகுளத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 26). இவர் கங்கைகொண்டானில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
லாரி மோதி பலி
சம்பவத்தன்று வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். ராஜாபுதுக்குடி நாற்கர சாலையில் வந்து கொண்டி ருந்தபோது எதிரே வந்த லாரி அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற இன்ஸ்பெக்டர் விஜகுமார், சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி திலீப் ஆகியோர் ரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்தவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
கைது
தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் லாரி டிரைவரான தச்சநல்லூர் அருகே உள்ள ராமையன்பட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுந்தர் ( 26) என்ப வரை கைது செய்தனர்.






