search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கயத்தாறில்  100 கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு பெட்டகம்- அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
    X

    கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை அமைச்சர் கீதாஜீவன் வழங்கிய காட்சி.

    கயத்தாறில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு பெட்டகம்- அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

    • கயத்தாறில் கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசின் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா நடைபெற்றது.
    • அரசின் ஊட்டச்சத்து உணவு பெட்டகம் அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

    கயத்தாறு:

    கயத்தாறில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசின் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு 100 கர்ப்பிணிகளுக்கு சத்துணவு பெட்டகத்தை வழங்கினார்.

    நிகழ்ச்சிக்கு மகளிர் திட்ட அலுவலர் வீரபுத்திரன், கயத்தாறு தாசில்தார் சுப்புலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், டாக்டர் திலகவதி ஆகியோர் வரவேற்று பேசினர்.

    கயத்தாறு கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சின்னபாண்டியன், மேற்கு ஒன்றிய செயலாளர் கருப்பசாமி பாண்டியன், கயத்தாறு பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை, நகர செயலாளர் சுரேஷ்கண்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கருப்பசாமிபாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் ராஜதுரை, அங்கன்வாடி வட்டார அலுவலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது:-

    தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு பெட்டகங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் முதலில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு தூத்துக்குடி மாவட்ட மக்கள் சார்பில் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

    இந்த ஊட்டச்சத்து உணவு பெட்டகத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களின் மூலம் அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

    முதல்-அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க கர்ப்பிணி பெண்கள் எந்தவித சத்து குறைபாடுகள் இல்லாமல் பிறக்கும் குழந்தைகள் 100 சதவீதம் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் என்றும், ஊட்டச்சத்து குறை பாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசு சார்பில் உடனடியாக தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களை சிறப்பாக வளர்ச்சி அடைய தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.

    கர்ப்பிணி பெண்களுக்கு கருவுற்ற நாள் முதல் குழந்தை வளர்ச்சி அடையும் வரை 'கோல்டன்' நாட்களாகும். ஆகவே மகிழ்ச்சியாக இருந்து ஆரோக்கியமான குழந்தைகள் பெற்று வளர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சிக்கு மகளிர் திட்ட பிரிவு அலுவலர்கள், கயத்தாறு வட்டார வளர்ச்சி துறை அலுவலர்கள்உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×