கயத்தாறு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சதுரங்க போட்டி

சதுரங்க போட்டியை கயத்தாறு பேரூராட்சி மன்ற தலைவி சுப்புலட்சுமி ராஜதுரை தொடங்கி வைத்தார். பல்வேறு ஊர்களில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டனர்.
சதுரங்க போட்டி  நடைபெற்றபோது எடுத்த படம்.
சதுரங்க போட்டி நடைபெற்றபோது எடுத்த படம்.
Published on

கயத்தாறு:

தமிழக அரசு அறிவித்ததின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் சதுரங்க போட்டி நடைபெற்று வருகிறது. அதன்படி கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளியில் சதுரங்க போட்டி நடைபெற்றது. பள்ளி பொறுப்பு தலைமையாசிரியர் மரகதம் தலைமை தாங்கினார். போட்டியை கயத்தாறு பேரூராட்சி மன்ற தலைவி சுப்புலட்சுமி ராஜதுரை தொடங்கி வைத்தார்.

போட்டியில் மாணவ, மாணவிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதில் பல்வேறு ஊர்களில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு மாவட்ட உடற்பயிற்சி அலுவலர் பால்சாமி, கயத்தாறு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன், அரசு மேல்நிலைப்பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர்கள் சுப்புராஜ், சுரேஷ் மற்றும் ஆசிரியர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கோகிலா, தேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com