search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்மாய்"

    • விருதுநகர் அருகே கண்மாயில் தவறி விழுந்து மாற்றுத்திறனாளி பலியானார்.
    • துணி துவைக்க சென்ற பெண் ஒருவரும் பலியானார்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டி விவேகானந்தர் காலனிைய சேர்ந்தவர் பரமசிவம் (வயது 33). மாற்றுத்திறனாளியான இவர், சகோதரர் உத்தமனுடன் பாத்திரம் வியாபாரம் செய்து வந்தார்.

    சம்பவத்தன்று விருதுநகர் அருகே உள்ள இ.குமாரலிங்கபுரத்தில் உத்தமன், பரமசிவம் ஆகியோர் பாத்திரம் வியாபாரத்திற்கு சென்றனர். அப்போது அங்குள்ள கண்மாயில் மீன்பிடிக்க செல்வதாக பரமசிவம் கூறி விட்டு சென்றார்.

    ஆனால் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உத்தமன், கண்மாய் பகுதியில் சென்று பார்த்தபோது தண்ணீரில் பரமசிவம் பிணமாக மிதந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வச்சக்காரப்பட்டி போலீசார் சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மீன்பிடித்து கொண்டிருந்தபோது பரமசிவம் கண்மாயில் தவறி விழுந்து இறந்திருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படை யில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள எல்லிங்க நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி கவிதா (29). வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத் தன்று கவிதா அருகில் உள்ள நீர்நிலைக்கு துணி துவைக்க சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது கவிதா தண்ணீரில் பிணமாக மிதந்தார். வலிப்பு ஏற்பட்டதில் அவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மதுரையில் இன்று கண்மாயில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியானார்கள்.
    • மீன்பிடிக்க சென்றபோது இந்த சம்பவம் நடந்தது.

    மதுரை

    மதுரை கருப்பாயூரணியை அடுத்துள்ள சக்கிமங்கலம் சவுராஷ்டிரா காலனியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ஆதிசேசன் (வயது 14). 8ம் வகுப்பு படித்து வந்தார். இவரது வீட்டின் அருகே வசிப்பவர் கண்ணன். இவரது மகன் ஹேமன் (வயது 8). 3ம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறையை முன்னிட்டு வீட்டில் இருந்த 2 பேரும் இன்று மதியம் சக்கிமங்கலம் கண்மாய்க்கு மீன்பிடிக்க சென்றதாக தெரிகிறது.

    கண்மாயில் ஹேமன் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தவறி தண்ணீரில் விழுந்தார். நீச்சல் தெரியாததால் தத்தளித்தபடி உயிருக்கு போராடினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆதிசேசன், ஹோமனை காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்ததாக கூறப்படுகிறது.

    2 பேரும் ஆழமான பகுதிக்குள் சென்று சிக்கியதால் கரைக்கு திரும்ப முடியாமல் தத்தளித்தனர். சிறிது நேரத்தில் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சிலைமான் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 சிறுவர்களின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக சிறுவர்களின் உடலை பார்த்து பெற்றோர்களும், உறவினர்களும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிங்கம்புணரி அருகே 50 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாய் நிரம்பியது.
    • கிடா வெட்டி படையலிட்டு 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மட்டிக்கரைப்பட்டியில் மட்டிக்கண்மாய் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள ஏரிகளில் இது பிரமாண்ட ஏரி ஆகும்.

    இந்த கண்மாயில் இருந்து மட்டிக்கரைப்பட்டி, சிவபுரிபட்டி, சிங்கம்புணரி, மணப்பட்டி, குமரத்த குடிப்பட்டி, காளாப்பூர் ஆகிய 6 கிராமங்களில் சுமார் 2500 ஹெக்டேர் ஆயக்கட்டு பாசனம் நடைபெற்று வருகிறது.

    சில வாரங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் கரந்தமலை பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் சிங்கம்புணரி பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இந்த தண்ணீர் மட்டிக்கால்வாய் வழியாக திருப்பி விடப்பட்டு மட்டிக்கண்மாய் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் மட்டிக்கண்மாய் சில தினங்களுக்கு முன்பு நிரம்பி மறுகால் பாய்ந்தது.

    குறிப்பாக ஆவணி மாதத்தில் இந்த கண்மாய் 50 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக மறுகால் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

    இதனை கொண்டாடும் வகையில் ஆயக்கட்டு தலைவர் மதிசூடியன் தலைமையில் விவசாயிகள் ஒருங்கிணைந்து தலைமடை பகுதியில் படையலிட்டு அன்னதானம் வழங்கினர்.

    அதனை தொடர்ந்து கிடா வெட்டி படையலிட்டு 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • ராமநாதபுரம் கண்மாய் மதகு நதியில் செங்கல் சூளை தொழிலாளர்கள், வேட்டி-சேலையை போட்டி போட்டு மீன்களை பிடித்து செல்கின்றனர்.
    • இதில் ஷட்டர் பகுதியில் ஏராளமான மீன்கள் துள்ளி குதிக்கின்றன.

    ராமநாதபுரம்

    தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை நிரம்பியதால் அதன் உபரி நீருடன் மழை நீரும் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனுார் வழியாக கார்குடியில் உள்ள பெரியகண்மாய் தலைமதகு வாய்க்காலில் 1000 கன அடி தண்ணீர் வருகிறது. அதிகளவு நீர்வரத்தால் பெரிய கண்மாய் நிரம்பி காவனுார், புல்லங்குடி வாய்க்கால்களுக்கு தலைமதகு பகுதியில் இருந்து தண்ணீர் செல்கிறது. இதில் ஷட்டர் பகுதியில் ஏராளமான மீன்கள் துள்ளி குதிக்கின்றன.

    ராமநாதபுரம் அருகே கார்குடியில் பெரிய கண்மாய் தலைமதகு பகுதியில் வைகை ஆற்று நீரில் துள்ளி குதித்த மீன்களை அப்பகுதியை சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளர்கள், பொதுமக்கள் வலை போட்டும், வேட்டி, சேலையை பயன்படுத்தியும் போட்டி போட்டு மீன்களை பிடித்து செல்கின்றனர்.

    • உத்தங்குடி கண்மாயில் விஷம் கலந்து உள்ளதா? என அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
    • இதனைப் பார்த்த அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அதிகாரிகள் மற்றும் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    மதுரை

    மதுரையில் உள்ள உத்தங்குடி கண்மாயில் சிறுவன் ஒருவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு குளிக்க சென்றான். அப்போது அவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான். இது தொடர்பாக போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    இந்த நிலையில் உத்தங்குடி கண்மாயில் மீன்கள் திடீரென செத்து மிதக்க ஆரம்பித்தன. இதனைப் பார்த்த அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அதிகாரிகள் மற்றும் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதன் அடிப்படையில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் நல்லுசாமி, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் உஷாராணி, மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஞானம் ஆகி யோர் சம்பவ இடத்துக்குச் சென்று இறந்த கிடந்த மீன்கள் தொடர்பாக ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து ஊழியர்கள் கண்மாய் தண்ணீரை பரிசோதனைக்காக, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்துக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

    உத்தங்குடி கண்மாயில் செத்து கிடந்த மீன்கள், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இறந்து இருக்கலாம் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது. இருந்தபோதிலும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நீரின் பரிசோதனைக்குப் பிறகு தான், உத்தங்குடி கண்மாயில் விஷம் கலந்து உள்ளதா? அல்லது ஆக்சிஜன் குறைபாடு உள்ளதா? என்பது பற்றிய விவரங்கள் தெரியவரும். உத்தங்குடி கண்மாயில் விஷம் கலந்து இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அங்கு பொது மக்கள் குளிக்கவும், குடி தண்ணீர் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    • கீழக்கரை கண்மாயில் மணல் எடுத்துச்செல்ல 25 விவசாயிகள் விண்ணப்பம் அளித்தனர்.
    • அனுமதி கோரி சிறப்பு முகாமில் மொத்தம் 25 விவசாயிகள் விண்ணப்பம் அளித்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் கட்டுப்பாட்டில் உள்ள (நீர் நிலை) கண்மாய்களிலிருந்து விவசாயப் பணிக்கு வண்டல் களிமண், கிராவல் மண் எடுத்துச் செல்வதை எளிமையாக்கும் விதமாக வட்டாரம் தோறும் வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆகிய துறைகள் இணைந்து சிறப்பு முகாம்கள் நடத்திட மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து கீழக்கரை தாசில்தார் சரவணன் தலைமையில் தாலுகா அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது. கனிம வளத்துறை உதவி இயக்குநர் விஜயகுமார் முகாமை பார்வையிட்டார்.

    கீழக்கரை தாலுகாவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 8 கண்மாய்கள், ஊரக வளர்ச்சி துறை பராமரிப்பில் உள்ள 24 சிறிய கண்மாய்களில் விவசாயப் பணிக்கு மணல் எடுத்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அனுமதி கோரி சிறப்பு முகாமில் மொத்தம் 25 விவசாயிகள் விண்ணப்பம் அளித்தனர்.

    இது குறித்து தாசில்தார் சரவணன் கூறும்போது, இங்கு பெறப்பட்ட விண்ணப்பம் அனைத்தும் ராமநாதபுரம் கனிம வளத்துறை உதவி இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு நிலத்தை அளவீடு செய்து அதற்கேற்ப மணல் அள்ள அனுமதி வழங்கப்படும். முறையாக மணல் தோண்டப்படுகிறதா? என்பதை அலுவலர்கள் கண்காணிப்பார்கள் என்றார்.

    • நிலையூர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்ைக வைத்துள்ளனர்.
    • மேலும் கண்மாய் ஆக்கிரமித்து அதிக அளவில் புல் வளர்க்கின்றனர்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தாசில்தார் பார்த்திபன் தலைமை வகித்தார். பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மின்வாரியத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

    திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட விவசாயிகள், அதிகாரி களிடம் கூறியதாவது:-

    தற்போது மழை காலம் நெருங்கி வருவதால் கண்மாய்களின் வரத்து கால்வாயை சீர் செய்ய வேண்டும். இதேபோல நிலையூர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலங்களுக்கு வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.

    பெரிய ஆலங்குளம், ஒத்த ஆலங்குளம், சம்பக்கு ளம் பகுதியிலுள்ள கண்மாய்களில் அதிக அளவு வளர்ந்து உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும். விவசாய நிலங்களுக்கு செல்லும் வகையில் விவசாயிகளுக்கு பாலம் அமைத்து வழிவகை செய்ய வேண்டும்.

    திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் அதிக அளவு சாக்கடைகள் கலப்பதால் கண்மாய் நீர் அசுத்தமடைகிறது. எனவே சாக்கடை கலப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும். மேலும் கண்மாய் ஆக்கிரமித்து அதிக அளவில் புல் வளர்க்கின்றனர். எனவே அதனையும் தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதனை கேட்டு க்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க ப்படும் என தெரிவித்தனர்.

    இந்த கூட்டத்தில் நிலையூர் கண்மாய் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ரமேஷ், பெரிய ஆலங்குளம் கண்மாய் தலைவர் குமரேசன், தென்கால் கண்மாய் பாசன தலைவர் மகேந்திரன், திருப்பரங்குன்றம் கோயில் முதல் ஸ்தானிகம் சாமிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் அருகே போதிய மழை இல்லாததால் கண்மாய் வறண்டு காணப்படுகிறது.
    • மீன்கள் இல்லாததால் பறவைகள் வரத்து குறைந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் தேர்த்தங்கல், மேலச் செல்வனுார், சித்திரங்குடி, காஞ்சிரங்குடி ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன.

    இவ்விடங்களுக்கு ஆண்டு தோறும் ஏராளமான பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக வருகின்றன.

    ஒகுறிப்பாக கூழைக்கடா, செங்கால் நாரை, கரண்டிவாயன், மஞ்சள் மூக்கு நாரை அக்டோபரில் வந்து மார்ச் வரை தங்கி அதன்பின் இடம்பெயர்கின்றன.

    இந்த ஆண்டு ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை. தற்போது நீர்நிலைகளில் தண்ணீர் குறைந்து குட்டைபோல காட்சியளிக்கிறது.

    குறிப்பாக தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம் நீர்தேக்கத்தில் நீரை உறிஞ்சும் அமலச்செடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. குறைந்த அளவில் உள்ள நீரில் தடையை மீறி சிலர் துாண்டில் மூலம் மீன்களை பிடிக்கின்றனர். இதனால் பறவைகள் குறைந்த நிலையில் காணப்படுகிறது.

    வறண்ட நிலையில் உள்ள நீர்த்தேக்கத்தை மழைக்காலத்திற்கு முன்னதாக துார்வாரி ஆழப்படுத்தவும், அமலச்செடிகளை அகற்றவும், மீன்பிடிப்பதை தடுக்க வனத்துறையினர் சரணாலயத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பறவைகள் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருமங்கலம் அருகே மீன்பிடிக்க சென்ற வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    • கீழஉரப்பனூர் கண்மாயில் மீன்பிடிப்பதற்காக சென்றார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள கீழஉரப்பனூர் இந்திரா காலனியை சேர்ந்த துரைப்பாண்டி மகன் மதன்குமார்(39). இவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மதன்குமார் தனியார் நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்தார்.

    இன்று விடுமுறை என்பதால் கீழஉரப்பனூர் கண்மாயில் மீன்பிடிப்பதற்காக அந்த பகுதியைச் சேர்ந்தவர்களுடன் சென்றார். திடீரென மதன்குமாருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு தண்ணீரில் விழுந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு கண்மாய் கரைக்கு கொண்டு வந்து பார்த்தபோது மயக்க நிலையில் இருந்தார். பின்னர்திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர்.

    ×