search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Disabled person dies"

    • தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    பாணாவரம் அடுத்த நிரஞ்சன் தாங்கள் பகுதியைச் சேர்ந்தவர் குப்பன் (வயது 54 ). மாற்றுத்திறனாளி. இவரது மனைவி கண்ணகி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் குப்பன் பெங்களூரு செல்வதற்காக சோளிங்கர் ரெயில் நிலையத்திற்கு வந்தார். குப்பனால் ரெயில் நிலைய படி ஏறி நடைமேடைக்கு செல்ல முடியாத காரணத்தினால் முதல் நடைமேடையில் இருந்து 2-வது நடைமுறைக்கு செல்ல தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரெயில் குப்பன் மீது மோதியது. இதில் அடிபட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்து ரெயில்வே போலீசார் குப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சின்ன அம்மாபாளையத்தில் அங்கன்வாடி கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது.
    • தற்போது பொதுக் கழிப்பிடம் அருகில் உள்ள வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

    சேலம்:

    சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 19-வது கோட்டம், சூரமங்கலம் பகுதி சின்ன அம்மாபாளையத்தில் அங்கன்வாடி கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதையடுத்து, தற்போது பொதுக் கழிப்பிடம் அருகில் உள்ள வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதனால் குழந்தைகளுக்கு நோய்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    இதனால் பாழடைந்த பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அருள் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.

    அந்த கோரிக்கையை ஏற்று மேற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.14.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பூமி பூஜையை அருள் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அப்பகுதி மக்களிடம் எம்.எல்.ஏ குறைகேட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் சூரமங்கலம் பகுதி தலைவர் ஈஸ்வரன், பகுதி செயலாளர் சிவக்குமார், 23-வது டிவிசன் செயலாளர் கணேசன், சேகர், சேட்டு, அய்யப்பன், அருணாச்சலம், மாது, சக்தி, சந்தோஷ்குமார், சூர்யா, ரங்கநாதன், சுந்தர்ராஜன், கார்த்திக், சந்தோஷ்குமார், அங்கப்பன், ஜேசுதாஸ் மற்றும் அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

    • விருதுநகர் அருகே கண்மாயில் தவறி விழுந்து மாற்றுத்திறனாளி பலியானார்.
    • துணி துவைக்க சென்ற பெண் ஒருவரும் பலியானார்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டி விவேகானந்தர் காலனிைய சேர்ந்தவர் பரமசிவம் (வயது 33). மாற்றுத்திறனாளியான இவர், சகோதரர் உத்தமனுடன் பாத்திரம் வியாபாரம் செய்து வந்தார்.

    சம்பவத்தன்று விருதுநகர் அருகே உள்ள இ.குமாரலிங்கபுரத்தில் உத்தமன், பரமசிவம் ஆகியோர் பாத்திரம் வியாபாரத்திற்கு சென்றனர். அப்போது அங்குள்ள கண்மாயில் மீன்பிடிக்க செல்வதாக பரமசிவம் கூறி விட்டு சென்றார்.

    ஆனால் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உத்தமன், கண்மாய் பகுதியில் சென்று பார்த்தபோது தண்ணீரில் பரமசிவம் பிணமாக மிதந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வச்சக்காரப்பட்டி போலீசார் சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மீன்பிடித்து கொண்டிருந்தபோது பரமசிவம் கண்மாயில் தவறி விழுந்து இறந்திருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படை யில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள எல்லிங்க நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி கவிதா (29). வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத் தன்று கவிதா அருகில் உள்ள நீர்நிலைக்கு துணி துவைக்க சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது கவிதா தண்ணீரில் பிணமாக மிதந்தார். வலிப்பு ஏற்பட்டதில் அவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நேருக்கு நேர் மோதியதில் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த சோகத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் ( வயது 43 ), கண்பார்வை குறைபாடு உடையவர்.

    இவரது உறவினரான அதே கிராமத்தை சேர்ந்த பாலு என்பவருடன் பைக்கில் வந்தவாசிக்கு சென்றுவிட்டு, இரவில் ஊருக்கு திரும்பினர்.

    வந்தவாசி - சேத்துப்பட்டு சாலையில் தனியார் நூற்பாலை அருகே வந்த போது, இவர்களது பைக்கும், அந்த வழியாக வந்த மற்றொரு பைக்கும் திடீரென மோதிக் கொண்டன.

    இதில் படுகாயம் அடைந்த பெருமாள் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×