search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aggressive"

    • மேலவாசல் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
    • திடீர் நகர் காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மதுரை

    மதுரை மேலவாசல் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

    அதற்காக மாநகராட்சி அதிகாரிகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக அந்தப்பகுதியில் ஆக்கிர மித்து இருந்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் அந்த ஆக்கிரமிப்பு களை அவர்கள் தாமாக முன்வந்து அகற்றவில்லை. மேலும் இந்தப்பகுதியில் கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படு கிறது.

    சில நேரங்களில் பெரியார் பஸ் நிலைய வளாகத்திற்குள்ளும், பெரியார் பஸ் நிலையம் வரும் முக்கிய சாலைகளிலும் கால்நடைகள் சுற்றித் திரிவதால் விபத்துகள் ஏற்படுகிறது.எனவே இதுகுறித்து மாநகராட்சியில் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் இன்று காலை மேலவாசல் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் மாநக ராட்சி உதவி ஆணையர் மனோகரன் தலைமையில் உதவி பொறியாளர் பழனி, திட்ட அலுவலர் கனி, சுகாதார ஆய்வாளர் செல்வகுமார், சுகாதார அலுவலர் வீரன் உள்பட மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    தெருக்களில் வீடுகளின் முன்பிருந்த ஆக்கிரமிப்பு களையும் அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். மேலும் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளையும் மாநக ராட்சி அதிகாரிகள் பிடித்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திடீர் நகர் காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • பாலாற்று படுகையில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
    • வெள்ள நீர் புகுந்துவிடும் என கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியை சுற்றி அமைந்துள்ள திருங்காக் கோட்டை, முட்டாக்கட்டி, பிரான்மலை, எஸ்.வி. மங்க லம், காளாப்பூர், கண்ண மங்கலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 தினங்க ளாக மாலை நேரத்தில் கனமழை பெய்தது. இதனால் இரவு நேரத்தில் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் ஓடியது. மேலும் சிங்கம்புணரி ஒன்றிய பகுதிகளில் உள்ள நீர் நிலைகளுக்கு செல்லும் வாய்க்கால்கள் சரிவர பராமரிக்கப்படாததால் மழை நீர் சேமிக்க இயலாமல் வீணாகியது.மேலும் சிங்கம்புணரி வழியாக ஓடும் பாலாற்றில் கடுமையான சீமக்கருவை முள் ஆக்கிரமித்துள்ளதால் பாலாற்று படுகை அருகில் உள்ள அணைக்கரைப்பட்டி, ஓசாரிப்பட்டி, பட்ட கோவில் குளம், காளாப்பூர் உள்ளிட்ட பல கிராமங்களுக்குள் காட்டாற்று வெள்ளநீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது.

    அக்டோபர் நவம்பர் மாதத்தில் தொடங்க உள்ள பருவமழை காரணமாக காட்டாற்று வெள்ளமாக வரும். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் பாலாற்று படுகையில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    கடலூர் ரோட்டில் உள்ள முல்லா ஏரியை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டிடங்கள் 2-வது நாளாக இன்று அகற்றம் செய்யப்பட்டன.

    கடலூர்:

    சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விருத்தாசலத்தில் உள்ள நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி விருத்தாசலம் தாசில்தார் தனபதி தலைமையில் நடைபெற்றது.

    கடலூர் ரோட்டில் உள்ள முல்லா ஏரியை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டிடங்கள் 2-வது நாளாக இன்று அகற்றம் செய்யப்பட்டன. விருத்தாசலம் தாசில்தார் தலைமையிலான வருவாய்த்துறையினர் 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அப்புறப்படுத்தினர்.

    அப்போது எந்தவித பிரச்சினை சம்பவம் எதும் நிகழாமல் இருக்க விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் ஜெயின் தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஆக்கிரப்பு அகற்றும் பணி நடைபெற்றதால் கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் சாலை மாற்றி அனுப்பி வைக்கப்பட்டது.

    • நிலையூர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்ைக வைத்துள்ளனர்.
    • மேலும் கண்மாய் ஆக்கிரமித்து அதிக அளவில் புல் வளர்க்கின்றனர்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தாசில்தார் பார்த்திபன் தலைமை வகித்தார். பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மின்வாரியத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

    திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட விவசாயிகள், அதிகாரி களிடம் கூறியதாவது:-

    தற்போது மழை காலம் நெருங்கி வருவதால் கண்மாய்களின் வரத்து கால்வாயை சீர் செய்ய வேண்டும். இதேபோல நிலையூர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலங்களுக்கு வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.

    பெரிய ஆலங்குளம், ஒத்த ஆலங்குளம், சம்பக்கு ளம் பகுதியிலுள்ள கண்மாய்களில் அதிக அளவு வளர்ந்து உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும். விவசாய நிலங்களுக்கு செல்லும் வகையில் விவசாயிகளுக்கு பாலம் அமைத்து வழிவகை செய்ய வேண்டும்.

    திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் அதிக அளவு சாக்கடைகள் கலப்பதால் கண்மாய் நீர் அசுத்தமடைகிறது. எனவே சாக்கடை கலப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும். மேலும் கண்மாய் ஆக்கிரமித்து அதிக அளவில் புல் வளர்க்கின்றனர். எனவே அதனையும் தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதனை கேட்டு க்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க ப்படும் என தெரிவித்தனர்.

    இந்த கூட்டத்தில் நிலையூர் கண்மாய் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ரமேஷ், பெரிய ஆலங்குளம் கண்மாய் தலைவர் குமரேசன், தென்கால் கண்மாய் பாசன தலைவர் மகேந்திரன், திருப்பரங்குன்றம் கோயில் முதல் ஸ்தானிகம் சாமிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    வாரச்சந்தை பஸ் நிலையம் வரை ஆக்கிர மிக்கப்பட்டுள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதைத் தவிர்க்க வாரச்சந்தையை இடம் மாற்ற வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சாயல்குடி, செப். 15-

    சாயல்குடியில் வாரச்சந்தை ஒவ்வொரு சனிக் கிழமையும் நடைபெற்று வருகிறது. சாயல்குடி பஸ் நிலையத்திற்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் இடையே சந்தை நடை பெற்று வருகிறது.

    வளர்ந்து வரும் நகரமான சாயல்குடியில் வாரச் சந்தையில் அதிகமான வாடிக்கையாளர்கள் கூடுவதாலும், மிக அதிகமாக வெளியூர் வியாபாரிகள் கடை அமைப்பதாலும் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் கருதி சாயல்குடி பேரூராட்சி நிர்வாகத்தினர் குடிநீர் வடிகால் வாரியத்திற்கும் சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் இடையே வாரச் சந்தைக்காக இடம் ஒதுக்கி தீர்மானம் இயற்றினர். எனினும் இத்தீர்மானம் ஏட்டளவிலேயே உள்ளது.

    அங்கு பேரூராட்சி நிர்வாகத்தினரால் அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டும் வாரச்சந்தையை மாற்ற வியாபாரிகள் மறுத்து சாயல்குடி பேருந்து நிலையம் அருகிலேயே வாரச் சந்தையை இயக்கி வருகின்றனர்.

    இங்கு போதுமான இடவசதி இல்லாததால் பஸ்கள் நிற்கும் இடம் வரை கடைகளை பரப்பி வைக்கின்றனர்.

    பஸ்கள் முன்பின் இயக்கும் பொழுது விபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும் அருகாமையிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் சாலையையும் ஆக்கிரமித்து வாரச்சந்தை கடையை விரித்து வியாபாரம் செய்கின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு சாயல்குடியில் வாரச்சந்தை அமைவிடத்தை மாற்றிய மைத்து விபத்து அபாயத்தை தவிர்க்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.

    ×