என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாநகராட்சி சார்பில் மேலவாசல் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது.
மேலவாசல் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
- மேலவாசல் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
- திடீர் நகர் காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மதுரை
மதுரை மேலவாசல் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.
அதற்காக மாநகராட்சி அதிகாரிகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக அந்தப்பகுதியில் ஆக்கிர மித்து இருந்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் அந்த ஆக்கிரமிப்பு களை அவர்கள் தாமாக முன்வந்து அகற்றவில்லை. மேலும் இந்தப்பகுதியில் கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படு கிறது.
சில நேரங்களில் பெரியார் பஸ் நிலைய வளாகத்திற்குள்ளும், பெரியார் பஸ் நிலையம் வரும் முக்கிய சாலைகளிலும் கால்நடைகள் சுற்றித் திரிவதால் விபத்துகள் ஏற்படுகிறது.எனவே இதுகுறித்து மாநகராட்சியில் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இன்று காலை மேலவாசல் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் மாநக ராட்சி உதவி ஆணையர் மனோகரன் தலைமையில் உதவி பொறியாளர் பழனி, திட்ட அலுவலர் கனி, சுகாதார ஆய்வாளர் செல்வகுமார், சுகாதார அலுவலர் வீரன் உள்பட மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.
தெருக்களில் வீடுகளின் முன்பிருந்த ஆக்கிரமிப்பு களையும் அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். மேலும் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளையும் மாநக ராட்சி அதிகாரிகள் பிடித்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திடீர் நகர் காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






