search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலையூர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
    X

    விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

    நிலையூர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • நிலையூர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்ைக வைத்துள்ளனர்.
    • மேலும் கண்மாய் ஆக்கிரமித்து அதிக அளவில் புல் வளர்க்கின்றனர்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தாசில்தார் பார்த்திபன் தலைமை வகித்தார். பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மின்வாரியத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

    திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட விவசாயிகள், அதிகாரி களிடம் கூறியதாவது:-

    தற்போது மழை காலம் நெருங்கி வருவதால் கண்மாய்களின் வரத்து கால்வாயை சீர் செய்ய வேண்டும். இதேபோல நிலையூர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலங்களுக்கு வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.

    பெரிய ஆலங்குளம், ஒத்த ஆலங்குளம், சம்பக்கு ளம் பகுதியிலுள்ள கண்மாய்களில் அதிக அளவு வளர்ந்து உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும். விவசாய நிலங்களுக்கு செல்லும் வகையில் விவசாயிகளுக்கு பாலம் அமைத்து வழிவகை செய்ய வேண்டும்.

    திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் அதிக அளவு சாக்கடைகள் கலப்பதால் கண்மாய் நீர் அசுத்தமடைகிறது. எனவே சாக்கடை கலப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும். மேலும் கண்மாய் ஆக்கிரமித்து அதிக அளவில் புல் வளர்க்கின்றனர். எனவே அதனையும் தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதனை கேட்டு க்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க ப்படும் என தெரிவித்தனர்.

    இந்த கூட்டத்தில் நிலையூர் கண்மாய் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ரமேஷ், பெரிய ஆலங்குளம் கண்மாய் தலைவர் குமரேசன், தென்கால் கண்மாய் பாசன தலைவர் மகேந்திரன், திருப்பரங்குன்றம் கோயில் முதல் ஸ்தானிகம் சாமிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×