என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teenage death"

    • நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு காச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ெரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார்.
    • சேலம் ரெயில்வே போலீஸ் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம்- மல்லூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு காச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ெரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். இது குறித்து ரெயிலின் லோகோ பைலட் கொடுத்த தகவலின்பேரில் சேலம் ரெயில்வே போலீஸ் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவரது பெயர் மற்றும் ஊர் விபரம் தெரியவில்லை. பலியான வாலிபர் வலது கையில், தாய் குழந்தை என பச்சைக்குத்தப்பட்டுள்ளது. சிவப்பு வெள்ளை புளூ கலரில் பனியன், மஞ்சள் கலர் பேண்ட் அணிந்திருந்தார். இவரை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் அது குறித்து போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • கும்பல்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (33). இவர் திருப்பூரில் கேபிள் லைன் பதிக்கும் தொழில் செய்து வந்தார்.
    • கனகராஜ் ஊருக்கு வந்ததில் இருந்து மது குடித்துவிட்டு போதையில் சுற்றியுள்ளார். இந்த நிலையில் திடீரென அவர் மாயமானார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் மல்லியகரை அருகே உள்ள கும்பல்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (33). இவர் திருப்பூரில் கேபிள் லைன் பதிக்கும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் ஆடி 18 கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். கனகராஜ் ஊருக்கு வந்ததில் இருந்து மது குடித்துவிட்டு போதையில் சுற்றியுள்ளார். இந்த நிலையில் திடீரென அவர் மாயமானார். இதையடுத்து அவரது மனைவி அபிராமி மற்றும் உறவினர்கள் கனகராஜை தேடினர். இதனிடையே கனகராஜின் வீட்டின் அருகில் கிணறு ஒன்று உள்ளது. இதில் 60 அடிக்கு தண்ணீர் உள்ளது. கனகராஜ் கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காமிராவை உள்ளே அனுப்பி பார்த்துள்ளனர். அப்போது கனகராஜ் கிணற்றில் பிணமாக கிடப்பது தெரிய வந்தது. இதுகுறித்து ஆத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கனகராஜ் உடலை மீட்டனர். இதுகுறித்து மல்லியகரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தினர். இதில் அவர் போதையில் தவறி விழுந்து இறந்துள்ளது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

    • ஹரி பிரசாத் (22). இவர் இன்று காலை 9 மணி அளவில் செவ்வாய்பேட்டை பஜார் வீதி தேர்நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • ஹரிபிரசாத் பிரேக் போட்டபோது, எதிர் திசையில் வந்து கொண்டிருந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    சேலம்:

    சேலம் செவ்வாய்பேட்டை மாதேஸ்வரன் தெரு பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை.இவரது மகன் ஹரி பிரசாத் (22). இவர் இன்று காலை 9 மணி அளவில் செவ்வாய்பேட்டை பஜார் வீதி தேர்நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    டிராக்டர் மோதியது

    எதிர் திசையில் ஒரு டிராக்டர் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒரு நபர் சாலையின் குறுக்கே வந்துள்ளார்.

    அவர் மீது மோதாமல் இருக்க ஹரிபிரசாத் பிரேக் போட்டபோது, எதிர் திசையில் வந்து கொண்டிருந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தடுமாறி விழுந்த ஹரிபிரசாத் தலையில் பலத்த காயம் அடைந்தார். இதைக் கண்ட அந்த பகுதி மக்கள் உடனடியாக ஹரி பிரசாத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே ஹரி பிரசாத் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கட்டிட வேலை முடிந்து பெயிண்டிங் வேலை நடந்து வருகிறது. இதில் ஹரிஹரன் அங்கு பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டுவந்தார்.
    • 2-வது மாடியில் பெயிண்டிங் பணிக்கு கண்ணாடியை துடைத்துக் கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    சேலம்:

    சேலம் மின்னாம் பள்ளியை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன் ஹரிஹரன் (24) பொன்னம்மா பேட்டையில் பழனிச்சாமி என்பவர் வீடு கட்டி வருகிறார்.

    கட்டிட வேலை முடிந்து பெயிண்டிங் வேலை நடந்து வருகிறது. இதில் ஹரிஹரன் அங்கு பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டுவந்தார். நேற்று மதியம் 2-வது மாடியில் பெயிண்டிங் பணிக்கு கண்ணாடியை துடைத்துக் கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கிசிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஹரிஹரன் பரிதாமாக இருந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள கருக்கம்பாளையத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் தீபன் சக்ரவர்த்தி என்கிற நந்தகுமார் (22). கூலித்தொழிலாளி.
    • காலையில் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த நந்தகுமார் வீட்டில் இருந்த சுவிட்சை போட்டுள்ளார். அப்போது மின் கசிவு காரணமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

    பரமத்திவேலூர்

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள கருக்கம்பாளையத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் தீபன் சக்ரவர்த்தி என்கிற நந்தகுமார் (22). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா (21). இவர்களுக்கு இளமதி என்ற 1½ வயது பெண் குழந்தை உள்ளது. நந்தகுமாரின் மனைவி சங்கீதா கடந்த 15-ந் தேதி பெருமாபாளையத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு திருவிழாவிற்கு சென்று விட்டார். நந்தகுமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். காலையில் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த நந்தகுமார் வீட்டில் இருந்த சுவிட்சை போட்டுள்ளார். அப்போது மின் கசிவு காரணமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட நந்தகுமார் உயிருக்கு போராடியுள்ளார்.

    அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று நந்தகுமாரை காப்பாற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கெனவே நந்தகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஜயகுமார் (வயது 24). இவர் நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் சாலையில் இருந்து கொண்டலாம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
    • அப்போது பைபாஸ் சாலையில் நிலைதடுமாறி சாலையோர தடுப்பு சுவரில் மோதி சந்திரன் படுகாயம் அடைந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள நீர்முள்ளி குட்டை பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் விஜயகுமார் (வயது 24). இவர் நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் சாலையில் இருந்து கொண்டலாம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    தடுப்பு சுவரில் மோதி பலி

    அப்போது பைபாஸ் சாலையில் நிலைதடுமாறி சாலையோர தடுப்பு சுவரில் மோதி சந்திரன் படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள், சந்திரனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சந்திரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    விசாரணை

    இதுகுறித்து புகாரின் பேரில் சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • திருமங்கலம் அருகே மீன்பிடிக்க சென்ற வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    • கீழஉரப்பனூர் கண்மாயில் மீன்பிடிப்பதற்காக சென்றார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள கீழஉரப்பனூர் இந்திரா காலனியை சேர்ந்த துரைப்பாண்டி மகன் மதன்குமார்(39). இவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மதன்குமார் தனியார் நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்தார்.

    இன்று விடுமுறை என்பதால் கீழஉரப்பனூர் கண்மாயில் மீன்பிடிப்பதற்காக அந்த பகுதியைச் சேர்ந்தவர்களுடன் சென்றார். திடீரென மதன்குமாருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு தண்ணீரில் விழுந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு கண்மாய் கரைக்கு கொண்டு வந்து பார்த்தபோது மயக்க நிலையில் இருந்தார். பின்னர்திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர்.

    ×