search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Eye-catching"

    • திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணி முழுவீச்சில் முடிந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
    • 500க்கும் மேற்பட்டோர் அமரும் விதமாக கலையரங்கம் மருத்துவ கல்லுாரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணி முழுவீச்சில் முடிந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அனைத்து விதமான நிகழ்ச்சிகளும் நடத்த ஏதுவாக ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்டோர் அமரும் விதமாக கலையரங்கம் மருத்துவ கல்லுாரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது.இதன் முகப்பில் தமிழருக்கும் திருப்பூர் மாவட்டத்துக்கும் பெருமை சேர்க்கும் வகையிலான சிமென்டில் புடைப்பு சிற்பம் அமைக்கப்பட்டு, இது பார்வையாளர்களை கவரும் வகையில் வர்ணம் தீட்டப்பட்டுள்ளது.

    அதில் பண்டை தமிழரின் ஆடல், பாடல்களை குறிப்பிடும் வகையில் ஆண், பெண் இருவரும் ஜோடியாக இணைந்து திருவிழா ஒன்றில் நடனம் ஆடுவது, வண்ணங்களில் தோரணம் கட்டி, களைகட்டிய ஊர்த்திருவிழா, மத்தளம் இசைத்தபடி பெண் கலைஞர்கள், கிராம கோவில்களில் நடக்கும் அன்றைய நாட்டிய நடன நிகழ்ச்சி.திருப்பூர் மாவட்டத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் களம் காண தயாராக இருக்கும் காங்கயம் காளை, பின்னலாடையின் அடையாளமாக வெவ்வேறு நிறங்களில் பளிச்சிடும் நூல் ரகங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரி வந்து செல்பவர்கள் ஓவிய வடிவமைப்பை உற்று கவனித்து வியந்து செல்கின்றனர்.

    • திருமங்கலம் அருகே மீன்பிடிக்க சென்ற வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    • கீழஉரப்பனூர் கண்மாயில் மீன்பிடிப்பதற்காக சென்றார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள கீழஉரப்பனூர் இந்திரா காலனியை சேர்ந்த துரைப்பாண்டி மகன் மதன்குமார்(39). இவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மதன்குமார் தனியார் நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்தார்.

    இன்று விடுமுறை என்பதால் கீழஉரப்பனூர் கண்மாயில் மீன்பிடிப்பதற்காக அந்த பகுதியைச் சேர்ந்தவர்களுடன் சென்றார். திடீரென மதன்குமாருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு தண்ணீரில் விழுந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு கண்மாய் கரைக்கு கொண்டு வந்து பார்த்தபோது மயக்க நிலையில் இருந்தார். பின்னர்திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர்.

    ×