search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாற்றுத்திறனாளி சாவு"

    • தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    பாணாவரம் அடுத்த நிரஞ்சன் தாங்கள் பகுதியைச் சேர்ந்தவர் குப்பன் (வயது 54 ). மாற்றுத்திறனாளி. இவரது மனைவி கண்ணகி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் குப்பன் பெங்களூரு செல்வதற்காக சோளிங்கர் ரெயில் நிலையத்திற்கு வந்தார். குப்பனால் ரெயில் நிலைய படி ஏறி நடைமேடைக்கு செல்ல முடியாத காரணத்தினால் முதல் நடைமேடையில் இருந்து 2-வது நடைமுறைக்கு செல்ல தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரெயில் குப்பன் மீது மோதியது. இதில் அடிபட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்து ரெயில்வே போலீசார் குப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் அருகே கண்மாயில் தவறி விழுந்து மாற்றுத்திறனாளி பலியானார்.
    • துணி துவைக்க சென்ற பெண் ஒருவரும் பலியானார்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டி விவேகானந்தர் காலனிைய சேர்ந்தவர் பரமசிவம் (வயது 33). மாற்றுத்திறனாளியான இவர், சகோதரர் உத்தமனுடன் பாத்திரம் வியாபாரம் செய்து வந்தார்.

    சம்பவத்தன்று விருதுநகர் அருகே உள்ள இ.குமாரலிங்கபுரத்தில் உத்தமன், பரமசிவம் ஆகியோர் பாத்திரம் வியாபாரத்திற்கு சென்றனர். அப்போது அங்குள்ள கண்மாயில் மீன்பிடிக்க செல்வதாக பரமசிவம் கூறி விட்டு சென்றார்.

    ஆனால் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உத்தமன், கண்மாய் பகுதியில் சென்று பார்த்தபோது தண்ணீரில் பரமசிவம் பிணமாக மிதந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வச்சக்காரப்பட்டி போலீசார் சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மீன்பிடித்து கொண்டிருந்தபோது பரமசிவம் கண்மாயில் தவறி விழுந்து இறந்திருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படை யில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள எல்லிங்க நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி கவிதா (29). வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத் தன்று கவிதா அருகில் உள்ள நீர்நிலைக்கு துணி துவைக்க சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது கவிதா தண்ணீரில் பிணமாக மிதந்தார். வலிப்பு ஏற்பட்டதில் அவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நேருக்கு நேர் மோதியதில் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த சோகத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் ( வயது 43 ), கண்பார்வை குறைபாடு உடையவர்.

    இவரது உறவினரான அதே கிராமத்தை சேர்ந்த பாலு என்பவருடன் பைக்கில் வந்தவாசிக்கு சென்றுவிட்டு, இரவில் ஊருக்கு திரும்பினர்.

    வந்தவாசி - சேத்துப்பட்டு சாலையில் தனியார் நூற்பாலை அருகே வந்த போது, இவர்களது பைக்கும், அந்த வழியாக வந்த மற்றொரு பைக்கும் திடீரென மோதிக் கொண்டன.

    இதில் படுகாயம் அடைந்த பெருமாள் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாழ்வா ரத்தில் போடப்பட்டு இருந்த இரும்பு தகரம் காற்றின் வேகத்துக்கு அடித்துச் செல்லப்பட்டு முருகன் தலை மீது வெட்டியது.
    • மயிலாடும்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கோம்மைபத் ்தொழுகிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 56). மாற்றுத்திறனாளி. இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் முன்புள்ள திண்ணையில் அமர்ந்து உறவினருடன் பேசிக் கொண்டு இருந்தார்.

    அப்போது காற்று பலமாக வீசியது. கணேசன் என்பவரது வீட்டு தாழ்வா ரத்தில் போடப்பட்டு இருந்த இரும்பு தகரம் காற்றின் வேகத்துக்கு அடித்துச் செல்லப்பட்டு முருகன் தலை மீது வெட்டியது.

    இதில் பலத்த காய மடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனி ன்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×