search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடையநல்லூர்"

    • சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் முத்தையா பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
    • கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூரில் தென்காசி வருவாய் மாவட்ட அனைத்து வகை பள்ளிகளின் சார்பில் உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களின் ஆலோசனை கூட்டம் கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி யில் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அருளானந்தம் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் காந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தொடக்கக்கல்வி அலுவலர் நாராயணன் வரவேற்று பேசினார். மேலும் மாவட்ட அளவில் கடந்த ஆண்டு நடந்த விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் முத்தையா பரிசுகளை வழங்கி பாராட்டி னார். நிகழ்ச்சியில் ராமநாதன், துரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், உதவி உடற்கல்வி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் சேவியர் பிரிட்டோ, குமரேசன், அன்னக்கிளி உட்பட ஏராளமான உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கு பெற்றனர்.

    • காயிதே மில்லத் திடலில் நடைபெற்ற தொழுகையில் திராளனோர் கலந்து கொண்டனர்.
    • ஆடு, மாடுகள் பலியிடப்பட்டு அதன் இறைச்சிகள் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூரில் பக்ரீத் பண்டிகையையொட்டி தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 9 இடங்களில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது

    காயிதே மில்லத் திடலில் நடைபெற்ற தொழுகையில் திராளனோர் கலந்து கொண்டனர். தொழுகையை முன்னிட்டு இன்று அதிகாலை 6 மணி முதலே இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர்-சிறுமிகளும் தொழுகைக்காக அங்கு வரத் தொடங்கினர். 6.30 மணியளவில் மாநில செயலாளர் செங்கை பைசல் தலைமை தாங்கி சிறப்பு தொழுகையை நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். தொழுகைக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுன் கிளைத் தலைவர் அப்துல் ஜப்பார் தலைமையிலான நிர்வாகிகள் மற்றும் தொண்டர் அணியினர் செய்து இருந்தனர்.

    இதேபோல் பெரியதெரு, புதுத்தெரு, மணிக்கூண்டு, பேட்டை கிளை சார்பில் மர்க்கஸுந் நூர் தவ்ஹீத் திடலில் தாஹா, ரஹ்மானியாபுரம் மர்யம் பள்ளி திடலில் அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி , மக்காநகர் தவ்ஹீத் திடலில் முகைதீன் அல்தாபி, தவ்ஹீத் நகர் முஜாஹித் பாத்திமா நகர் பள்ளி திடலில் அபூதல்ஹா இக்பால் நகர் ரய்யான் திடலில் ரய்யான்மைதீன் , மஹ்மூதாநகர் ரபீக் ராஜா மதினா நகர் பள்ளி திடல், அப்துல் அஜீஸ் என நகரில் 9 இடங்களில் தொழுகை நடை பெற்றது .

    முன்னதாக தொழுகை பாதுகாப்பு ஏற்பாடுகளை கடையநல்லூர் தாசில்தார் கங்கா மேற்பார்வையில் புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அசோக் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி ஆகியோர் செய்து இருந்தனர்.

    தொழுகைக்கு பின்னர் கடையநல்லூர் நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான ஆடு, மாடுகள் பலியிடப்பட்டு அதன் இறைச்சிகள் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பில் 3 இடங்களில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. மஸ்ஜித் முபாரக் பள்ளிவாசல் முன்பு பஜார் திடலில் மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் தலைவர் மவ்லவி ஸைபுல்லாஹ் ஹாஜா பைஜி தலைமையிலும், கலந்தர் மஸ்தான் தெருவில் உள்ள பாத்திமா நகர் மஸ்ஜித் தக்வா திடலில் பஷிர் அஹ்மத் உமரியும், பேட்டை மஸ்ஜித் அக்ஸா திடலில் முஹிப்புல்லாஹ் உமரி தொழுகை நடத்தியும் குத்பா பிரசங்கம் செய்தனர். இந்த தொழுகையில் மஸ்ஜித் முபாரக் கமிட்டி தலைவர் சேக் உதுமான் , செயலர் முஹம்மது காசீம் என்ற சின்ஸா, பொருளாளர் அப்துல் மஜீத், ஜபருல்லாஹ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    இதேபோல் தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தென்காசி, பொட்டல்புதூர், முதலியார்பட்டி, செங்கோட்டை, அச்சன்புதூர், வடகரை, வீராணம், சங்கரன்கோவில், புளியங்குடி, வாசு தேவநல்லூர், திரிகூடபுரம் உட்பட 30-க்கும் மேற்பட்ட பகுதிகளில் தொழுகை நடைபெற்றது.

    • குடிநீர் பிரச்சினைகள் போன்ற பணிகளுக்கு மட்டும் முன்னுரிமை அடிப்படையில் தீர்மானமாக கொண்டு வர வேண்டும் என அ.தி.மு.க. கவுன்சிலர் கூறினார்.
    • அனைத்து தீர்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சியில் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை யில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் அ.தி.மு.க. கவுன்சிலர் சுபா ராஜேந்திர பிரசாத் மக்களுக்கு தேவையான அடிப்படை தேவையான கழிவுநீர் ஓடை தூர்வாருதல், தெருவிளக்கு அமைத்தல், சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்தல், குடிநீர் பிரச்சினைகள் போன்ற பணிகளுக்கு மட்டும் முன்னுரிமை அடிப்படையில் தீர்மானமாக கொண்டு வர வேண்டும் நகராட்சி பொறியியல் பிரிவு ஊழியர்களுக்கு தனிஅறை கட்டும் தீர்மானத்தை கைவிட வேண்டும் என கூறினார். அதனைத் தொடர்ந்து அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் பூங்கோதை கருப்பையாதாஸ் பேசுவதற்கு எழுந்தார். ஆனால் அவர் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அ.தி.மு.க., பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    • கலைமான் நகரில் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகின்றனர்.
    • வேல்துரை ஒரு தனியார் தோட்டத்தில் இரவு காவலாளியாக வேலை செய்தார்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி 1-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட கருப்பாநதி அணைக்கட்டு அருகே உள்ள கலைமான் நகரில் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகின்றனர்.

    யானை தாக்கி காவலாளி பலி

    இவர்கள் மலைப்பகுதியில் வேலை செய்து வருகின்றனர். இதில் வேல்துரை (வயது 28) என்பவர் கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கல்லாற்று பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் இரவு காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 16-ந்தேதி அன்று இரவு காட்டு யானை தாக்கியத்தில் காவலாளியின் உடலில் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அச்சன்புதூர் செவகாட்டு பகுதியில் செய்யது முகமதுவின் தேங்காய் நார் தொழிற்சாலை உள்ளது.
    • நேற்று இரவு திடீரென தேங்காய் நார் தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்தது.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே அச்சன்புதூர் செவகாட்டு பகுதியில் அச்சன்புதூரை சேர்ந்த செய்யது முகமது என்பவருக்கு சொந்தமான தேங்காய் நார் தொழிற் சாலை உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர்.

    இப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் இருந்து தேங்காய் வாங்கி அதன் கூந்தல் நார்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நேற்று இரவு 10 மணி அளவில் திடீரென தேங்காய் நார் தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து உடனே சம்பவ இடத்திற்கு கடையநல்லூர், செங்கோட்டை, சுரண்டை ஆகிய பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் விவசாயிகள் அருகில் உள்ள தோட்டங்களில் இருந்து டேங்கர் லாரிகளில் தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைக்க உதவினர். தேங்காய் நார் தொழிற்சாலைகளில் உள்ள எந்திரங்கள், தேங்காய் நார் தும்பைகள் அனைத்தும் சேதமடைந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.75 லட்சம் ஆகும் என கூறப்படுகிறது. 

    • விழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • மாலையில் தங்கத்தேர் வீதி உலாவும் நடைபெற்றது.

    கடையநல்லூர்:

    பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், 108 கலசபூஜை, வேத பாராயணம், திருமுறை பாராயணம், அஸ்திர ஹோமம், மகாபூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து விமான அபிஷேகம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. வருஷாபிஷேகத்தை ரமேஷ் பட்டர் செய்தார். பிற்பகல் 2 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம், மாலையில் தங்கத்தேர் வீதி உலாவும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் அருணாசலம் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • வினோத் கடையநல்லூருக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
    • சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக ஆட்டோ இறங்கியது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் வினோத் (வயது28). ஆட்டோ டிரைவர். இவர் காசிதர்மத்தில் இருந்து கடையநல்லூருக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    ஆட்டோ கவிழ்ந்து விபத்து

    மேட்டுப்பள்ளி வாசல் அருகே வந்து கொண்டிருந்த போது சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக ஆட்டோ இறங்கியது. இதில் ஆட்டோவை ஓட்டி வந்த வினோத் சாலையில் தவறி விழுந்தார். அப்போது ஆட்டோ கவிழ்ந்து அவர் மீது விழுந்தது. இதில் வினோத் மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் போலீசார் அங்கு விரைந்து சென்று வினோத்தின் உடலை கைப்பற்றி கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசாரை கண்டதும் 5 பேரும் தப்பியோட முயற்சி செய்தனர்.
    • தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் ஊருக்கு மேற்கு பகுதியில் உள்ள செங்குளத்தில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த தகவலையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் கருப்பசாமி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அங்கு சீட்டு விளையாடி கொண்டிருந்த 5 பேர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயற்சி செய்தனர். அதில் 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    விசாரணையில் அவர்கள் கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த மாணிக்கம் (வயது 33), பெரியசாமி (40), சொக்கம்பட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி (48) ஆகியோர் என்பதும், அவர்கள் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ. 84 ஆயிரத்து 900-ஐ கைப்பற்றினர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • மேல கடையநல்லூர் மாரியம்மன்கோவில் தெருவில் ரவி வசித்து வருகிறார்.
    • சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தபோது ரவி திருடியது தெரியவந்தது.

    நெல்லை:

    திருவண்ணாமலை பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் ரவி(வயது 36). தற்போது இவர் மேல கடையநல்லூர் மாரியம்மன்கோவில் தெருவில் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் அய்யப்பன்(45) என்பவரது மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றுவிட்டார். வீட்டுமுன்பு நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் திருட்டுபோனதை அறிந்த அய்யப்பன் கடையநல்லூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி சி.சி.டி.வி. காமிரா க்களை ஆய்வு செய்தபோது ரவி திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    • ஓராண்டில் ரூ.12 கோடியே 93 லட்சத்து 34 ஆயிரத்திற்கு பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் பாரி ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சியில் தி.மு.க. சேர்மனாக மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் பதவி ஏற்று ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து கடந்த ஓராண்டில் மட்டும் அனைத்து வார்டுகளுக்கும் ரூ.12 கோடியே 93 லட்சத்து 34 ஆயிரத்திற்கு பல்வேறு வளர்ச்சி பணிகளும், மக்களின் அத்தியாவசிய அடிப்படை சுகாதாரம் மற்றும் குடிநீர் பணிகள், கல்வி நிதி மற்றும் குடிநீர் பொது நிதியிலிருந்து ரூ.6 கோடியே 57 லட்சம் மதிப்பிலான பணிகள் என மொத்தம் ரூ.19 கோடியே 50 லட்சத்து 34 ஆயிரத்திற்கு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நகராட்சியின் சாதனைகளான 100 ஆண்டு பேசும் ஓராண்டு சாதனை, திராவிட மாடல் நல்லாட்சி, இதற்கு கடையநல்லூரே சாட்சி! பாகுபாடில்லாத வளர்ச்சிப்பணி, இதுவே தமிழின தலைவர் கற்றுத்தந்த ஆட்சிப்பணி கடையநல்லூர் நகராட்சி என்று அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை கடையநல்லூரில் பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், தினசரி மார்க்கெட், அரசு மருத்துவமனை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் நகராட்சி சேர்மன் பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் பாரி ஜான், துணைத்தலைவர் ராசையா, சுகாதார அலுவலர் பிச்சையா பாஸ்கர், ஆய்வாளர்கள் சக்திவேல், சிவா, மேலாளர் சண்முகவேல், நகரமைப்பு அலுவலர் காஜாமைதீன், கவுன்சிலர்கள் முருகன், அக்பர்அலி, அப்துல் வஹாப், மாலதி, தனலட்சுமி, மாரி, முகைதீன் கனி, திவான் மைதீன், ராமகிருஷ்ணன், தங்கராஜ் உட்பட ஏராளமான கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

    • தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி மணிக்கூண்டு முன்பு நடந்தது.
    • கடையநல்லூர் நகர தி.மு.க. செயலாளர் அப்பாஸ் தலைமை தாங்கினார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் மணிக்கூண்டு முன்பு தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ஆவின் ஆறுமுகம் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு தி.மு.க. அரசின் சாதனைகள் குறித்து அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

    நிகழ்ச்சிக்கு கடையநல்லூர் நகர தி.மு.க. செயலாளர் அப்பாஸ் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மாவட்ட செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான செல்லத்துரை, கடையநல்லூர் நகர தேர்தல் பொறுப்பாளர்கள் இஞ்சி இஸ்மாயில், அப்துல் ஹக்கீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கடையநல்லூர் முன்னாள் நகர செயலாளர் முகமது அலி, நகர்மன்ற உறுப்பினர் முருகன், தி.மு.க. மாநில பேச்சாளர் இஸ்மாயில், உதயசூரியன் படிப்பக நிர்வாகிகள் மற்றும் வார்டு செயலாளர், பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடையநல்லூர் நகராட்சி பகுதியில் தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது.
    • நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சி பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.1.29 கோடி மதிப்பீட்டில் 15 எண்ணிக்கையிலான 1,2,5,7,10, மற்றும் 15,16, 19,22,32 ஆகிய வார்டுகளின் தெருக்களில் புதிதாக தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது.

    நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். இதில் 5-வது வார்டு நகராட்சி உறுப்பினர் பால சுப்பிரமணியன் என்ற கண்ணன், இளைநிலை பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×