search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துண்டு பிரசுரங்கள்"

    • ராஜா எம்.எல்.ஏ. பொதுமக்களுக்கு மகளிர் உரிமை திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கினார்.
    • தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் நிகழ்ச்சி நடந்தது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் நிகழ்ச்சியை முன்னிட்டு திராவிட மாடல் அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி சங்கரன்கோவிலில் நடந்தது. மாவட்ட அவை தலைவர் பத்மநாதன் தலைமை தாங்கினார். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மகளிர் உரிமை திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வீரா, வீர மணிகண்டன், கோமதிநாயகம், ஆறுமுகம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட அவை தலைவர் பத்மநாதன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் யூ.எஸ்.டி. சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர்கள் மனோகரன், ராஜதுரை, ஒன்றிய செயலாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு மகளிர் உரிமை திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஓராண்டில் ரூ.12 கோடியே 93 லட்சத்து 34 ஆயிரத்திற்கு பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் பாரி ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சியில் தி.மு.க. சேர்மனாக மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் பதவி ஏற்று ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து கடந்த ஓராண்டில் மட்டும் அனைத்து வார்டுகளுக்கும் ரூ.12 கோடியே 93 லட்சத்து 34 ஆயிரத்திற்கு பல்வேறு வளர்ச்சி பணிகளும், மக்களின் அத்தியாவசிய அடிப்படை சுகாதாரம் மற்றும் குடிநீர் பணிகள், கல்வி நிதி மற்றும் குடிநீர் பொது நிதியிலிருந்து ரூ.6 கோடியே 57 லட்சம் மதிப்பிலான பணிகள் என மொத்தம் ரூ.19 கோடியே 50 லட்சத்து 34 ஆயிரத்திற்கு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நகராட்சியின் சாதனைகளான 100 ஆண்டு பேசும் ஓராண்டு சாதனை, திராவிட மாடல் நல்லாட்சி, இதற்கு கடையநல்லூரே சாட்சி! பாகுபாடில்லாத வளர்ச்சிப்பணி, இதுவே தமிழின தலைவர் கற்றுத்தந்த ஆட்சிப்பணி கடையநல்லூர் நகராட்சி என்று அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை கடையநல்லூரில் பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், தினசரி மார்க்கெட், அரசு மருத்துவமனை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் நகராட்சி சேர்மன் பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் பாரி ஜான், துணைத்தலைவர் ராசையா, சுகாதார அலுவலர் பிச்சையா பாஸ்கர், ஆய்வாளர்கள் சக்திவேல், சிவா, மேலாளர் சண்முகவேல், நகரமைப்பு அலுவலர் காஜாமைதீன், கவுன்சிலர்கள் முருகன், அக்பர்அலி, அப்துல் வஹாப், மாலதி, தனலட்சுமி, மாரி, முகைதீன் கனி, திவான் மைதீன், ராமகிருஷ்ணன், தங்கராஜ் உட்பட ஏராளமான கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

    • வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
    • சாலை விதிகளை பொருட்படுத்தாமல் செல்வதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் பேசினார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் இணைந்து, கோவில்பட்டி பாரத ஸ்டேட் வங்கி முன்பு சாலைப் பாதுகாப்பு வார விழா நடந்தது. இதில் கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன், பஸ், ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களில் சென்றோருக்கு, சாலை பாதுகாப்பு விதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    மேலும், வாகனங்களுக்கு முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கரை ஓட்டினார். பின்னர் வாகன ஓட்டிகள் அனைவரும் சாலை பாதுகாப்பு விதிகளை மதிக்க வேண்டும். சாலை பாதுகாப்பு விதிகளை பொருட்படுத்தாமல் செல்வதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்து விளக்கிப் பேசினார். விழாவில் மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ் விஸ்வநாத் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவன தலைவர் தேன்ராஜா, நிர்வாக குழு உறுப்பினர்கள் ராம சுப்ரமணியன், முத்து மாரியப்பன், மேற்பார்வை யாளர் மாடசாமி, கோவில்பட்டி ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் மற்றும் பயிற்சியாளர்கள், வாகன விற்பனை நிலைய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • பெற்றோர்களுக்கு அறிவுரை
    • துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த வேப்பங்குப்பம் ஊராட்சியில் பெண் குழந்தைகள் வன்புணர்வு தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் சமூக பாதுகாவலர் வசந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல் பற்றியும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் போது குட் டச், பேட் டச் பற்றி பெற்றோர்களுக்கு விளக்கமளித்தார்.

    அதேபோல், பெற்றோர்களும் பெண் பிள்ளைகளிடம் அன்புடன் நடந்து கொண்டு நாள்தோறும் அவர்களின் மனநிலை பற்றி தெரிந்து கொள்ளவது மிகவும் அவசியம் என்றார்.

    நிகழ்ச்சியில், மாணவர்கள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர், அனைவருக்கும் விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    • சமுதாய விழிப்புணர்வு பேரணி நாகை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நாகூர் தர்கா அலங்கார வாசல் வரை நடைபெற்றது.
    • பேரணியில் மது, சிகரெட், கஞ்சாவினால் ஏற்படும் தீமைகள் பற்றி துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டு விழிப்புணர்வு கோஷமிட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சார்பாக போதை பொருட்களுக்கு எதிரான சமுதாய விழிப்புணர்வு பேரணி நாகை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நாகூர் தர்கா அலங்கார வாசல் வரை நடைபெற்றது.

    கலெக்டர் அருண் தம்புராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பேரணியை தொடங்கி வைத்தனர்.

    பேரணியில் மாணவர்களுடன் ஷாநவாஸ் எம்.எல்.ஏ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் நவுஷாத், நாகூர் தர்கா மேனேஜி டிரஸ்டி காமில் சாஹிப், தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டி உறுப்பினர் கலீபா சாஹிப், நாகூர் முஸ்லீம் ஜமாத் தலைவர் சாஹா மாலிம், நாகை நகர்மன்ற உறுப்பினர் நத்தர், கௌத்தியா மேல்நிலை பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் சாதிக் சாஹிப் கலந்து கொண்டனர்.

    பேரணியில் மது, சிகரெட், கஞ்சாவினால் ஏற்படும் தீமைகள் பற்றி துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டு விழிப்புணர்வு கோஷமிட்டனர்.

    நாகூர் மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை பென்னட் மேரி நன்றி கூறினார்.

    • பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு பிளாஸ்டிக்பை பயன்படுத்துவதை தவிர்த்து துணிப்பையை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஞ்சப்பை மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
    • உரம் உரமாக்குதல் குறித்து உரம் தயாரிக்கும் மையத்திற்கு அழைத்து சென்று விளக்கம் அளிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே திட்டச்சேரி பேரூராட்சி சார்பில் ஒட்டுமொத்த தூய்மை பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திக்கா தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் முன்னிலை வகித்தார். இதில் பொதுமக்களுக்கு ஸ்வச்சதா செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    அதை தொடர்ந்து புதுமனைத்தெருவில் ஒட்டுமொத்த தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதை தவிர்த்து துணிப்பையை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஞ்சப்பை மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகளுக்கு திடக்கழிவை உரமாக்குதல் குறித்து உரம் தயாரிக்கும் மையத்திற்கு அழைத்து சென்று விளக்கம் அளிக்கப்பட்டது.பின்னர் திட்டச்சேரி அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒட்டுமொத்த தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர், மன்ற உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    ×