search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டியில்  சாலை பாதுகாப்பு விதிகள் அடங்கிய  துண்டு பிரசுரங்கள் விநியோகம்
    X

    சாலைப் பாதுகாப்பு வார விழாவின்போது வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஓட்டப்பட்டது.

    கோவில்பட்டியில் சாலை பாதுகாப்பு விதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகம்

    • வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
    • சாலை விதிகளை பொருட்படுத்தாமல் செல்வதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் பேசினார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் இணைந்து, கோவில்பட்டி பாரத ஸ்டேட் வங்கி முன்பு சாலைப் பாதுகாப்பு வார விழா நடந்தது. இதில் கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன், பஸ், ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களில் சென்றோருக்கு, சாலை பாதுகாப்பு விதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    மேலும், வாகனங்களுக்கு முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கரை ஓட்டினார். பின்னர் வாகன ஓட்டிகள் அனைவரும் சாலை பாதுகாப்பு விதிகளை மதிக்க வேண்டும். சாலை பாதுகாப்பு விதிகளை பொருட்படுத்தாமல் செல்வதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்து விளக்கிப் பேசினார். விழாவில் மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ் விஸ்வநாத் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவன தலைவர் தேன்ராஜா, நிர்வாக குழு உறுப்பினர்கள் ராம சுப்ரமணியன், முத்து மாரியப்பன், மேற்பார்வை யாளர் மாடசாமி, கோவில்பட்டி ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் மற்றும் பயிற்சியாளர்கள், வாகன விற்பனை நிலைய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×