பெண் குழந்தைகள் மன நிலையை தினமும் கவனியுங்கள்

பெற்றோர்களுக்கு அறிவுரை துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது
விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்த காட்சி.
விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்த காட்சி.
Published on

அணைக்கட்டு:

ஒடுகத்தூர் அடுத்த வேப்பங்குப்பம் ஊராட்சியில் பெண் குழந்தைகள் வன்புணர்வு தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் சமூக பாதுகாவலர் வசந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல் பற்றியும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் போது குட் டச், பேட் டச் பற்றி பெற்றோர்களுக்கு விளக்கமளித்தார்.

அதேபோல், பெற்றோர்களும் பெண் பிள்ளைகளிடம் அன்புடன் நடந்து கொண்டு நாள்தோறும் அவர்களின் மனநிலை பற்றி தெரிந்து கொள்ளவது மிகவும் அவசியம் என்றார்.

நிகழ்ச்சியில், மாணவர்கள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர், அனைவருக்கும் விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com