கடையநல்லூர் நகராட்சி கூட்டம்; அ.தி.மு.க. -பா.ஜனதா வெளிநடப்பு

குடிநீர் பிரச்சினைகள் போன்ற பணிகளுக்கு மட்டும் முன்னுரிமை அடிப்படையில் தீர்மானமாக கொண்டு வர வேண்டும் என அ.தி.மு.க. கவுன்சிலர் கூறினார்.அனைத்து தீர்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
நகராட்சி கூட்டம் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
நகராட்சி கூட்டம் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
Published on

கடையநல்லூர்:

கடையநல்லூர் நகராட்சியில் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை யில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் அ.தி.மு.க. கவுன்சிலர் சுபா ராஜேந்திர பிரசாத் மக்களுக்கு தேவையான அடிப்படை தேவையான கழிவுநீர் ஓடை தூர்வாருதல், தெருவிளக்கு அமைத்தல், சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்தல், குடிநீர் பிரச்சினைகள் போன்ற பணிகளுக்கு மட்டும் முன்னுரிமை அடிப்படையில் தீர்மானமாக கொண்டு வர வேண்டும் நகராட்சி பொறியியல் பிரிவு ஊழியர்களுக்கு தனிஅறை கட்டும் தீர்மானத்தை கைவிட வேண்டும் என கூறினார். அதனைத் தொடர்ந்து அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் பூங்கோதை கருப்பையாதாஸ் பேசுவதற்கு எழுந்தார். ஆனால் அவர் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அ.தி.மு.க., பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com