search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடற்கல்வி ஆசிரியர்கள்"

    • சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் முத்தையா பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
    • கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூரில் தென்காசி வருவாய் மாவட்ட அனைத்து வகை பள்ளிகளின் சார்பில் உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களின் ஆலோசனை கூட்டம் கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி யில் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அருளானந்தம் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் காந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தொடக்கக்கல்வி அலுவலர் நாராயணன் வரவேற்று பேசினார். மேலும் மாவட்ட அளவில் கடந்த ஆண்டு நடந்த விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் முத்தையா பரிசுகளை வழங்கி பாராட்டி னார். நிகழ்ச்சியில் ராமநாதன், துரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், உதவி உடற்கல்வி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் சேவியர் பிரிட்டோ, குமரேசன், அன்னக்கிளி உட்பட ஏராளமான உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கு பெற்றனர்.

    • அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இணையவழி பணி நிரவல் கலந்தாய்வு நாளை நடக்கிறது.
    • பணி நிரவல் கலந்தாய்வுக்கான அனைத்து முன்னேற்பாடு களையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் செய்யவேண்டும்.

    விருதுநகர்

    அரசு மேல்நி லைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி நிரவல் இணையவழி கலந்தாய்வு நாளை(11-ந்தேதி) நடக்கும் என்று பள்ளி கல்வித்துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையரகம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்ப தாவது:-

    தமிழகத்தில் 2022-23 கல்வி ஆண்டில் 1.8.2022 நிலவரப்படி ஆசிரியர், மாணவர் விகிதாச்சார அடிப்படையில் உடற்கல்வி இயக்குநர் நிலை 2பணியிடங்கள் நிர்ணயம் செய்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து கடிதம் மூலமாக அறிக்கை பெறப்பட்டது.

    தமிழகத்தில் உள்ள 3,123 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மொத்தம் 407உடற்கல்வி இயக்குநர் நிலை 1 பணியிடங்கள் அனுமதிக் கப்பட்டுள்ளன.

    அரசாணையின்படி பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் 400மாணவர்களுக்கு மட்டுமே உடற்கல்வி ஆசிரியர் நிலை -1 பதவியில் ஆசிரியர்கள் பணியமர்த்த ப்படுகின்றனர். இது தவிர 183பள்ளிகளில் உடற்கல்வி இயக்குனர் நிலை-1 பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை.

    ஆனால் 400-க்கும் குறைவாக உள்ள மாணவர்கள் உள்ள 163பள்ளி களில் உடற்கல்வி ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். எனவே விதிகளின்படி உபரியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் தேவையான பள்ளிகளுக்கு பணி நிரவல்அடிப்படையில் பணியிட மாறுதல் செய்யப் படுவர்.

    இதற்கான கலந்தாய்வு நாளை(செவ்வாய்க்கிழமை) இணைய வழியில் நடத்தப்படும். பணி நிரவல் கலந்தாய்வுக்கான அனைத்து முன்னேற்பாடு களையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் செய்யவேண்டும். எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காமல் கலந்தாய்வு நடத்த அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

    இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

    • முதன்மைக் கல்விஅலுவலர் வழிகாட்டுதலின்படி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்(பொறுப்பு) தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
    • குறுவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடத்தில் வெற்றி பெற்ற அணிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு,பல்லடம் ,தாராபுரம் ,உடுமலைப்பேட்டை ஆகிய குறுவட்டங்கள் உள்ளன. இந்தநிலையில் குறுவட்ட அளவிலான பள்ளிகளுக்கு மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 20-ந் தேதி வரை நடைபெற்றது.

    இந்தநிலையில் திருப்பூர் வருவாய் மாவட்ட அளவிலான குழுப்போட்டிகள், புதிய விளையாட்டுக்கள் மற்றும் தடகளப் போட்டிகள் 17.10.2022 அன்று முதல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் முதல் அணிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.குறுவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடத்தில் வெற்றி பெற்ற அணிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

    அதற்கான நிகழ்வு நிர்ணயக் கூட்டம் திருப்பூர், ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.இதில் 45 உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், கண்காணிப்புக் குழுஉறுப்பினர்கள்,மற்றும் குறுவட்டப் போட்டிகளின் இணை செயலாளர்கள் கலந்து கொண்டனர். முதன்மைக் கல்விஅலுவலர் வழிகாட்டுதலின்படி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்(பொறுப்பு) தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

    ×