search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓ.பன்னீர் செல்வம்"

    • ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழக முகவரிக்கு தேர்தல் ஆணையம் கடிதம்.
    • அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு.

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் நாளை மறுநாள் (1-ந்தேதி) சென்னையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கலந்து கொள்ள தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

    இந்த கூட்டம் தொடர்பாக ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழக முகவரிக்கு தேர்தல் ஆணையம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.  எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன், இன்பதுரை ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

    இந்நிலையில் தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க போவதாக ஒ.பன்னீர் செல்வமும் அறிவித்துள்ளார். அவரது தரப்பில் கோவை செல்வராஜ் கூட்டத்தில் பங்கேற்பார் என்று தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லேசான கொரோனா தொற்று காரணமாக ஓ.பி.எஸ். மருத்துவமனையில் அனுமதி.
    • முழுமையாக நலம் பெற முதலமைச்சர் வாழ்த்து.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில நாட்களாக கட்சி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    இரவு-பகலாக ஓய்வில்லாமல் தொடர்ச்சியாக ஆதரவாளர்களை சந்தித்து பேசினார். இந்த நிலையில் அவருக்கு லேசான சளி, இருமல் ஏற்பட்டதால் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் பரிசோதனை செய்தார்.

    அதில் அவருக்கு கொரோனா தொற்று லேசாக இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவரை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் விரைந்து நலம் பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் விரைந்து முழுமையாக நலம் பெற விழைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • திரவுபதி முர்முவுக்கு அதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் முழு ஆதரவு என எடப்பாடி பழனிசாமி உறுதி
    • எடப்பாடி பழனிசாமி செல்லும் வரை அறையில் காத்திருந்தார் ஓ.பன்னீர்செல்வம்.

    குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று சென்னை வந்தார். நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அவரை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 


    இதில் அதிமுக சார்பில் பேசிய எடப்பாடி பழனிசாமி, பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி என தெரிவித்தார். அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் அனைவரும் திரவுபதி முர்முவுக்கு முழு ஆதரவு அளிப்பதாக கூறினார்.

    திராவிட மாடல், சமூகநீதி என பேசும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பழங்குடியின பெண்ணை ஆதரிக்கவில்லை என்றும், மக்களை அவர் ஏமாற்றி வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் ஒ.பன்னீர் செல்வமும் தங்களது ஆதரவாளர்களுடன் பங்கேற்றார். எனினும் விழா மேடையில் எடப்பாடி பழனிசாமி தமது ஆதரவாளர்களுடன் அமர்ந்திருந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வம் மேடைக்கு வராமல் அங்கிருந்த அறை ஒன்றில் காத்திருந்தார். 


    பின்னர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்த சென்ற பின்னர் மேடைக்கு வந்த ஓ.பன்னீர் செல்வம் தமது ஆதரவாளர்களுடன் திரவுபதி முர்முவை சந்தித்து  ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், அதிமுக சட்ட விதிகளின்படி தற்போது தாமே அதிமுக ஒருங்கிணைப்பாளர் என தெரிவித்தார்.

    • தலைமை தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை தாக்கல்.
    • அதிமுக ஒருங்கிணைப்பாளராக 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளதாக தகவல்.

    ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அதிமுகவில் ஓ.பன்னீர்சல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓ பன்னீர் செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக யாராவது மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பை கேட்காமல் உத்தரவு எதுவும் பிறப்பிக்கக்கூடாது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், தலைமை தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் அளித்துள்ள அறிக்கையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளதாகவும், இன்றுவரை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தாம் தான் என்றும், அதில் மாற்றம் இல்லை என்றும், கூறியுள்ளார்.

    தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டுவதற்கு தலைமை நிலைய செயலாளருக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். சட்ட விதிகளின் கடந்த பொதுக்குழு நடந்ததா இல்லையா மற்றும் கடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் குறிப்பிட்டுள்ளார்.

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் விசாரிக்க திருமாவளவன், ஜிகே வாசன், பாலகிருஷ்ணன் ஆகியோர் கோபாலபுரம் இல்லம் வந்து ஸ்டாலினை சந்தித்தனர். #Karunanidhi #DMK
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். வயோதிகம் காரணமாக அவர் நலிந்து உள்ளதாகவும், சிறுநீரக தொற்று காரணத்தால் காய்ச்சல் உள்ளதாகவும் காவேரி மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டு இருந்தது.

    இந்நிலையில், கருணாநிதியை சந்திக்க துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தனர். ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து அவர்கள் கேட்டறிந்தனர்.

    அவர்களை தொடர்ந்து, ஜிகே வாசன், திருமாவளவன், கே.பாலகிருஷ்னன் ஆகியோரும் கோபாலபுரம் வந்தனர். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, திருமாவளவன், கே.பாலகிருஷ்னன் ஆகிய இருவரும், ‘கருணாநிதிக்கு காய்ச்சல் மட்டுமே உள்ளது. அதனால், ஓய்வெடுக்கிறார். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்’ என கூறினர்.
    திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். #Karunanidhi #OPS #DMK #ADMK
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். வயோதிகம் காரணமாக அவர் உடல் நலம் நலிந்து உள்ளதாகவும், சிறுநீரக தொற்று காரணத்தால் காய்ச்சல் உள்ளதாகவும் காவேரி மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டு இருந்தது.

    மருத்துவக்குழுவினர் வீட்டிலேயே இருந்து அவர்களை கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

    இந்நிலையில், கருணாநிதியை சந்திக்க துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகியோர் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தனர்.

    அங்கு ஸ்டாலின் உடன் பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் சந்தித்து பேசினர்.

    கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்து விட்டு அவர்கள் 15 நிமிடத்தில் புறப்பட்டனர். சந்திப்புக்கு பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறுகையில், கருணாநிதியை சந்தித்து பேசினோம். விரைவில் அவர் குணமடைவார் என தெரிவித்தார்.

    ஓ.பன்னீர் செல்வமும் கருணாநிதி நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.


    ×