search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க போவதாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பும் அறிவிப்பு
    X

    ஓ.பன்னீர்செல்வம்

    தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க போவதாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பும் அறிவிப்பு

    • ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழக முகவரிக்கு தேர்தல் ஆணையம் கடிதம்.
    • அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு.

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் நாளை மறுநாள் (1-ந்தேதி) சென்னையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கலந்து கொள்ள தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

    இந்த கூட்டம் தொடர்பாக ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழக முகவரிக்கு தேர்தல் ஆணையம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன், இன்பதுரை ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

    இந்நிலையில் தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க போவதாக ஒ.பன்னீர் செல்வமும் அறிவித்துள்ளார். அவரது தரப்பில் கோவை செல்வராஜ் கூட்டத்தில் பங்கேற்பார் என்று தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×