search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறுதி"

    • ராஜபாளையம்-சத்திரப்பட்டி ரோட்டில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால பணிகளை எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.
    • மின்வாரிய அதிகாரி உடனடியாக மாற்றுவதாக உறுதி கூறினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்-சத்திரப்பட்டி ரோட்டில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால பணியை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினார். மின் கம்பம் மாற்றியமைக்க தாமதமாவதாக கூறியதையடுத்து மின்சாரத்துறை உதவி பொறியாளரை நேரில் அழைத்து உடனடியாக மின் கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    அதற்கு மின்வாரிய அதிகாரி உடனடியாக மாற்றுவதாக உறுதி கூறினார். அதனைத் தொடர்ந்து பாலத்திற்கு வெள்ளை அடிக்கும் பணியை பார்வையிட்டார். ராஜபாளையம் ரெயில்வே மேம்பாலத்தில் இந்த மாதத்தில் சோதனை ஓட்டம் நடத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருமென சட்ட மன்றத்தில் நெடுஞ்சாலைத்துறை மானியக்கோரிக்கையில் அமைச்சர் அறிவித்துள்ளார்.

    எனவே பணிகளை இலக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்னதாக முடித்து கொடுக்க எம்.எல்.ஏ. ஆலோசனைகள் கூறினார். அதன்படி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில் தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, மின்சாரத்துறை பொறி யாளர், நெடுஞ்சாலை துறை உதவிப்பொறியாளர் ராமகிருஷ்ணன் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கலந்துகொண்டனர்.

    • மக்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று தலைவர் செஹானஸ் ஆபிதா உறுதியளிக்கப்பட்டது.
    • கீழக் கரை ஊருக்குள் வரக்கூடிய வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சியில் சாதாரண கூட்டம் நகர் மன்ற கூட்டரங்கில் நகர சபை தலைவர் செஹானஸ் ஆபிதா மற்றும் நகராட்சி ஆணையாளர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. நகரசபை துணைத்தலைவர் வக்கீல் ஹமீது சுல்தான் மற்றும் வார்டு உறுப்பி னர்கள் முன்னிலை வகித்த னர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள 1 கோடி தகுதி வாய்ந்த குடும்ப தலைவி களுக்கு மாதந்தோ றும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்திதற்கு 2023-24-ம் ஆண்டில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசின் திராவிட மாடல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததற்கு 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி யதற்கு நகர்மன்றத்தலைவர், துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதனைத் தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-

    14-வது வார்டு உறுப்பினர் முஹம்மது ஹாஜா சுகைபு:- புதிய பஸ் நிலையம் பின்புறமாக கழிப்பறைகள் சேதம் அடைந்துள்ளதால் மது பிரியர்கள் மற்றும் சமூக விரோதிகள் அதை தவறாக பயன்படுத்துவதால் உடனடியாக கழிப்பறையை சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

    18-வது வார்டு உறுப்பினர் ஷக்கீனா :- எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பேவர் பிளாக் கற்கள் போடப்பட்டு ஒரு இடத்திற்கு மட்டும் கற்கள் போடாததால் அந்தப்பகுதி மக்கள் என்னிடம் பலமுறை கேள்வி கேட்டு வருகின்றனர். நான் நகர் மன்றத்தில் பலமுறை கோரிக்கை வைத்தும் இன்று வரை சரி செய்யப்படாததால் அப்பகுதி மக்கள் என்னை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். ஆகையால் உடனடியாக கற்கள் போட்டு தர வேண்டும் என்றார்.

    20-வது வார்டு உறுப்பி னர் சேக் உசைன்:- கீழக் கரை ஊருக்குள் வரக்கூடிய வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். எங்கள் வார்டுக்கு உட்பட்ட பகுதி யில் முறையாக கால்வாயை சீர் செய்வதற்கு உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    24-வது வார்டு உறுப்பினர் சித்திக் :- எங்கள் வார்டுக்குட்பட்ட பகுதியில் குடிநீர் பிரச்சினைகள் அதிகம் காணப்படுவதால் முறையாக குடிநீர் வழங்க வேண்டும். வெளிப்பகுதியில் கால்வாய் நீரோட்டம் அதிகரித்து வருவதால் அதை சரி செய்வதற்கு எங்கள் பகுதியில் முறையாக குழாய்கள் அமைத்து தர வேண்டும் என்றார்.

    கவுன்சிலர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்து மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றி தரப்படும் என்று தலைவர் உறுதியளித்தார். இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கூட்டத்தில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா, நகராட்சி பொறியாளர் அருள், நகராட்சி அலுவ லர்கள் வார்டு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

    • பிரதமருக்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கடிதம்
    • மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்தவர் ஜெஸ்லின். இவரது மகன் ராஜேஷ்குமார் உள்பட 5 மீனவர்கள் சவுதி அரே பியா நாட்டின் கத்திப் என்ற பகுதியில் அரே பிய முதலாளிக்கு சொந் தமான விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    அப்போது ஈரான் கடல் கொள்ளையர்கள் சவுதி அரேபிய கடலுக் குள் வந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது சரமாரி யாக துப்பாக்கியால் சுட் டனர். இதில் ராஜாக்கமங் கலம் துறையைச் சேர்ந்த ராஜேஷ் குமார் தனது இடது கண் ணில் குண்டடிப்பட்டும், காது தொண்டை பகுதி யிலும் குண்டடிக்காயம் பட்டும் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். மேலும் படகில் இருந்த ஜிபிஎஸ், எக்கோ சவுண்டர், வயர் லெஸ் மற்றும் மீனவர் கள் பிடித்து வைத்தி ருந்த மீன்களையும், மீனவர் கள் பயன்படுத்திக் கொண்டி ருந்த செல்போன் அனைத் தையும் ஈரான் கடற்கொள் ளையர்கள் கொள்ளைய டித்து சென் றுள்ளனர். இது சம்பந்த மாக தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பிரதம ருக்கும், இந்திய வெளியு றவுத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், வெளிநாடுகளில் மீன்பிடி தொழிலில் ஈடு பட்டுள்ள இந்தியர்களுக்கு குறிப்பாக குமரி மாவட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர் களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் சவுதி அரேபிய கடலில் ஈரான் கடற்கொள்ளையர் சுட் டதில் ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்த ராஜேஷ் குமார் என்ற மீனவர் குண்டடிப்பட்டு படுகாயம் அடைந் துள்ளார். அவ ருக்கு அவர் பணி புரிந்த நிறுவனம் தகுந்த இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் வெளிநாடுகளில் சென்று மீன்பிடி தொழிலில் ஈடுப டுகின்ற மீனவர்கள் அச்ச மின்றி மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதற்கு உத்தரவா தம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுக ளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்கள் மீது தாக்குதல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்த சம்பவத் திற்கு முற்றுப்புள்ளி வைக் கும் விதத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாவட்டம் என்ற சூழலை உருவாக்குவேன் என பெரம்பலூர் புதிய எஸ்.பி. சியாமளாதேவி உறுதி அளித்துள்ளார்
    • பெரம்ப–லூர் மாவட்ட 24-வது போலீஸ் சூப்பிரண்டாக ச.ஷியாமளா தேவி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பரண்டாக பணியில் இருந்த மணி, சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து சென்னையில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு பிரிவு துணை கமிஷன–ராக பணியாற்றி வந்த ச.ஷியா–மளா தேவி பெரம்ப–லூர் மாவட்ட போலீஸ் சூப்பி–ரண்டாக நியமிக்கப்பட் டார். இதையடுத்து பெரம்ப–லூர் மாவட்ட 24-வது போலீஸ் சூப்பிரண்டாக ச.ஷியாமளா தேவி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பெரம்ப–லூர் மாவட்ட 6-வது பெண் போலீஸ் சூப்பிரண்டு என்பது குறிப் பிடத்தக்கது. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய–தாவது:- பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றச்சம்பங்களை தடுத்து, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மிக–வும் பாதுகாப்பான மாவட் டம் என்ற சூழலை உரு–வாக்குவேன். சாலை விபத் துகள், போக்குவரத்து நெரிசல் இல்லாத மாவட்ட–மாகவும் மாற்றுவேன். ரவுடிகள், சமூக விரோ–திகளை ஒடுக்கப்பட்டு பொதுமக்கள் அமைதியாக வாழும் வகையில் உறுதியான நடவடிக்கைகளை எடுப் பேன் என்றார். இதையடுத்து வாரந் தோறும் புதன்கிழ–மைக–ளில் மாவட்ட போலீஸ் சூப்பி–ரண்டு அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு மனு விசாரணை மற்றும் குறைதீர்க்கும் முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்த போலீஸ் சூப்பி–ரண்டு ச.ஷியாமளா தேவி பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்கள் பெற்ற–தோடு, அவர்களிடம் குறை–களையும் கேட்டறிந்தார். அதுமட்டுமின்றி புகார் மனுக்கள் அளிக்க வருகை தரும் பொதுமக்களிடம் கனிவாக பேசி பிரச்சி–னைகளை தீர்த்து வைக்கு–மாறும், அவர்களுக்கு குடிநீர், பிஸ்கட் போன்ற உணவுப்பொருட்களை வழங்குமாறும் போலீசா–ருக்கு அறிவுரைகள் வழங்கி–னார்.


    • குமரி விதை பரிசோதனை நிலைய அலுவலர் தகவல்
    • நாட்டின் வேளாண்மை உற்பத்திக்கு நெல் விதை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

    நாகர்கோவில்:

    குமரி விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    நாட்டின் வேளாண்மை உற்பத்திக்கு நெல் விதை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நல்ல விதை சில தரங்களை கொண்டது ஆகும். இனத்தூய்மை, புறத்தூய்மை, ஈரப்பதம், முளைப்புத்திறன் ஆகிய வையே தரமான விதை யாகும். இந்த விதை தரங்கள் அனைத்தும் உடைய விதையே அதிக மகசூலுக்கு காரணி யாக அமையும். விதை யின் தரத்தினை அறியவே விதைப் பரிசோதனை செய்யப்படுகிறது.

    அதிக அளவு முளைப்புத் திறனும் சரியான அளவு ஈரப்பதத்துடனும் காணப்படுவதே தரமான விதையாகும். இவ்வாறு பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் விற்பனைக்கு வழங்கப்படுவதே சான்று செய்யப்பட்ட விதைகளாகும். எனவே சான்று செய்யப்பட்ட விதைகளை வாங்குவதன் மூலம் விவசாயிகள் விதையின் தரத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

    மேலும் தங்களிடமுள்ள விதைகளை விதை பரிசோ தனை நிலையத்திற்கு அனுப்பி, ஈரப்பதம், முளைப்புத்திறன் ஆகிய வற்றை உறுதி செய்வதன் மூலமும் விவசாயிகள் விதையின் தரத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு தரம் உறுதி செய்யப்பட்ட விதைகளை விவசாயிகள் பயன்படுத்தி அதிக மகசூல் பெற்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • நகர்மன்ற தலைவர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.
    • நாம் அனைவரும் விருப்பு வெறுப்புகளை கடந்து முன்னேற்ற பாதையில் செல்ல உறுதி எடுப்போம்.

    திருத்துறைப்பூண்டி:

    இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம், திருத்துறைப்பூண்டி நகராட்சி இணைந்து தேசிய ஒற்றுமை தின பேரணி மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மக்கள் கல்வி நிறுவன இயக்குனர் பாலகணேஷ் தலைமை தாங்கினார். நகராட்சி பொறியாளர் பிரதான் பாபு, பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஒற்றுமை தினத்தில் நாம் அனைவரும் விருப்பு வெறுப்புகளை கடந்து முன்னேற்ற பாதையில் செல்ல உறுதி எடுப்போம் என்றார்.

    நிகழ்ச்சியில் நகராட்சி மேலாளர் சிற்றரசு, நகராட்சி அலுவலர்கள், மக்கள் கல்வி நிறுவன திட்ட அலுவலர் திருலோகசந்தர், அலுவலர் கனகதுர்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 3-வது வார்டு பகுதி யில் எஸ்.எஸ். நகர் மேற்கு பகுதி விரிவாக்கம் பெயர் பலகையை திறந்து வைத்தார்.
    • மேலும் அப்பகுதி மக்களின் மின் தேவையை பூர்த்தி செய்திட 110 கிலோ வாட் மின் மாற்றியையும் மேயர் மகேஷ் இயக்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர் செல்வ குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில், அக்.13-

    நாகர்கோவில் மாநக ராட்சிக்குட்பட்ட 35-வது வார்டு பகுதியில் மேயர் மகேஷ் தெரு, தெரு வாக நடந்து சென்றும், இரு சக்கர வாகனத்தில் சென்றும் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தெருக்களில் வளர்ந்துள்ள மரங்களை அகற்றிடவும் அதிகாரி களுக்கு உத்தரவிட்டார். மேலும் கழிவு நீர் ஓடை கள் உடனடியாக சுத்தம் செய்து சுகாதாரம் பாது காக்கப்படும் என பொது மக்களிடம் மேயர் மகேஷ் உறுதி அளித்தார்.

    ஆய்வின்போது மாநகர பொறியாளர் பாலசுப்பிர மணியன், நிர்வாக அதிகாரி ராம்மோகன், தி.மு.க. மாநகர செயலாளர் வக்கீல் ஆனந்த், துணை செயலாளர் வேல்முருகன் மண்டல தலைவர் ஜவகர், மாமன்ற உறுப்பினர் கலாராணி, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் எம்.ஜே ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    3-வது வார்டு பகுதி யில் எஸ்.எஸ். நகர் மேற்கு பகுதி விரிவாக்கம் பெயர் பலகையை திறந்து வைத்தார்.

    மேலும் அப்பகுதி மக்களின் மின் தேவையை பூர்த்தி செய்திட 110 கிலோ வாட் மின் மாற்றியையும் மேயர் மகேஷ் இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர் செல்வ குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பயணிகள் நிழற்குடை கட்டித்தர அதிகாரிகள் உறுதியளித்தனர்
    • இளைஞர்கள், பொதுமக்கள் போராட்டம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே துவால் பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு எதிரே பேருந்து நிழற்குடை சேதமடைந்து இருந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இதனை அகற்றிவிட்டு, அதே இடத்தில் பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

    இவர்களின் கோரிக்கையை ஏற்ற நிர்வாகம், அப்பகுதியில் அதே இடத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நிழற்குடை கட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்து, அந்த இடத்தை ஆக்ரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நிழற்குடை அமைக்கும் பணி தடைப்பட்டது.

    இதனை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இடிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் நிழற்குடை கட்ட கோரி, கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில்

    மறியலில் ஈடுபட்டனர்.பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் பயணியர் நிழல் குடை அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்த அடிப்படையில் மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்ட த்தால் அவ்வழியே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×