search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும்
    X

    கீழக்கரை நகரசபை சாதாரண கூட்டம் தலைவர் செஹானஸ் ஆபிதா தலைமையில் நடந்தது.

    மக்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும்

    • மக்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று தலைவர் செஹானஸ் ஆபிதா உறுதியளிக்கப்பட்டது.
    • கீழக் கரை ஊருக்குள் வரக்கூடிய வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சியில் சாதாரண கூட்டம் நகர் மன்ற கூட்டரங்கில் நகர சபை தலைவர் செஹானஸ் ஆபிதா மற்றும் நகராட்சி ஆணையாளர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. நகரசபை துணைத்தலைவர் வக்கீல் ஹமீது சுல்தான் மற்றும் வார்டு உறுப்பி னர்கள் முன்னிலை வகித்த னர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள 1 கோடி தகுதி வாய்ந்த குடும்ப தலைவி களுக்கு மாதந்தோ றும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்திதற்கு 2023-24-ம் ஆண்டில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசின் திராவிட மாடல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததற்கு 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி யதற்கு நகர்மன்றத்தலைவர், துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதனைத் தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-

    14-வது வார்டு உறுப்பினர் முஹம்மது ஹாஜா சுகைபு:- புதிய பஸ் நிலையம் பின்புறமாக கழிப்பறைகள் சேதம் அடைந்துள்ளதால் மது பிரியர்கள் மற்றும் சமூக விரோதிகள் அதை தவறாக பயன்படுத்துவதால் உடனடியாக கழிப்பறையை சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

    18-வது வார்டு உறுப்பினர் ஷக்கீனா :- எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பேவர் பிளாக் கற்கள் போடப்பட்டு ஒரு இடத்திற்கு மட்டும் கற்கள் போடாததால் அந்தப்பகுதி மக்கள் என்னிடம் பலமுறை கேள்வி கேட்டு வருகின்றனர். நான் நகர் மன்றத்தில் பலமுறை கோரிக்கை வைத்தும் இன்று வரை சரி செய்யப்படாததால் அப்பகுதி மக்கள் என்னை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். ஆகையால் உடனடியாக கற்கள் போட்டு தர வேண்டும் என்றார்.

    20-வது வார்டு உறுப்பி னர் சேக் உசைன்:- கீழக் கரை ஊருக்குள் வரக்கூடிய வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். எங்கள் வார்டுக்கு உட்பட்ட பகுதி யில் முறையாக கால்வாயை சீர் செய்வதற்கு உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    24-வது வார்டு உறுப்பினர் சித்திக் :- எங்கள் வார்டுக்குட்பட்ட பகுதியில் குடிநீர் பிரச்சினைகள் அதிகம் காணப்படுவதால் முறையாக குடிநீர் வழங்க வேண்டும். வெளிப்பகுதியில் கால்வாய் நீரோட்டம் அதிகரித்து வருவதால் அதை சரி செய்வதற்கு எங்கள் பகுதியில் முறையாக குழாய்கள் அமைத்து தர வேண்டும் என்றார்.

    கவுன்சிலர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்து மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றி தரப்படும் என்று தலைவர் உறுதியளித்தார். இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கூட்டத்தில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா, நகராட்சி பொறியாளர் அருள், நகராட்சி அலுவ லர்கள் வார்டு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×