search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறப்பு"

    • இரண்டாவது மனைவி இறந்த சோகத்தை அடிக்கடி மூத்த மனைவியிடம் கூறி வேதனை பட்டு வந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    புத்தளம் அருகே உள்ள பெத்தபெருமாள் குடியிருப்பை சேர்ந்தவர் கமலன் (வயது 63).

    இவர் புத்தளம் பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இவருக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவி மூத்த மனைவியின் தங்கையாகும்.இரண்டாவது மனைவி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அன்று முதல் கமலன் மன வேதனையில் இருந்து வந்தார். இரண்டாவது மனைவி இறந்த சோகத்தை கமலன் அடிக்கடி மூத்த மனைவியிடம் கூறி வேதனை பட்டு வந்தார்.இரண்டாவது மனைவி இறந்த சோகத்தை கமலன் அடிக்கடி மூத்த மனைவியிடம் கூறி வேதனை பட்டு வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் டீக்கடையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து இவரது மூத்த மனைவி தங்ககனி சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கமலன் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட இளம் பெண் இறந்த விவகாரத்தில் மருத்துவக்குழு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • பூங்கொடி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    மதுரை

    தேனி கண்டமனூரைச் சேர்ந்த பூங்கொடி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    எனது மகள் கனிமொழியை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரசவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு குழந்தை பிறந்தது. பின்னர் ஜூன் 15ஆம் தேதி தையல் பிரிக்கப்பட்டு, தாயும் சேயும் நலமாக இருந்தனர்.

    மறுநாள் பயிற்சி மருத்துவர் எனது மகளுக்கு ஊசி ஒன்றை போட்டார். அதைத்தொடர்ந்து எனது மகளுக்கு கடுமையான வலி ஏற்பட்ட நிலையில், 21-ந் தேதி எனது மகள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனது மகளின் மரணத்திற்கான காரணத்தை தெரிவிக்காமல் உடலை பெற்றுக் கொள்ளுமாறு மிரட்டினர். காவல்துறையினரும் வற்புறுத்தினர்.

    இவ்வாறு மிரட்டியதால் எனது மகளின் உடலை சத்திரப்பட்டி கிராம மயானத்தில் அடக்கம் செய்தோம். பயிற்சி மருத்துவர் தவறான ஊசி செலுத்தியதே எனது மகளின் இறப்பிற்கு காரணம். ஆகவே எனது மகளின் உடலை 2 மூத்த தடய அறிவியல் துறையின் பேராசிரியர்கள் முன்னி லையில் உடற்கூராய்வு செய்யவும், மருத்துவ குழு அமைத்து இறப்பிற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்றும் மகளின் இறப்பிற்கு கார ணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி சுகுமார குருப் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உயிரிழந்த பெண் கனிமொழியின் மருத்துவ அறிக்கையை தேனி மருத்துவகல்லூரி முதல்வர் சார்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டது.

    இதனைத் தொடர்ந்து நீதிபதி தனது உத்தரவில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் தலைமையில் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம், துறைத்தலைவர், மயக்கவியல் துறை தலைவர் மற்றும் இருதயவியல் துறை தலைவர்கள் அடங்கிய மருத்துவர் குழுவை, சுகாதாரத்துறை செயலாளர் அமைக்க வேண்டும் அமைக்கப்பட்ட மருத்துவர்களின் உயர்மட்ட குழு பெண் இறப்பு குறித்து ஆய்வு செய்து அதன் அறி க்கையை ஒரு மாதத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

    • திருமங்கலம் அருகே தண்ணீரில் மூழ்கி வாலிபர் இறந்தார்.
    • மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கப்பலூர் காந்திநகரை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது39). சிட்கோவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். இவருக்கு அன்னலட்சுமி என்ற மனைவியும், 5 வயதில் மகளும் உள்ளனர்.

    மணிகண்டன் நேற்று காலை வீட்டுக்கு அருகில் உள்ள ஓடைக்கு சென்றார். இந்த நிலையில் ஓடை தண்ணீரில் மூழ்கி மணிகண்டன் இறந்து கிடந்தார். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் அன்னலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 சிறுவர்கள் விழுந்து இறந்த பள்ளம் ரெயில்வே தோண்டியதா? என்பது குறித்து அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
    • சம்பவம் நடந்த இடம், ரெயில்வே எல்லைக்கு 500 மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ளதாக கூறினார்.

    மதுரை

    திண்டுக்கல் மாவட்டம், தாமரைப்பட்டி அருகே தண்ணீர் தேங்கிய பள்ளத்தில் லத்தீஷ்வினி (வயது9), சர்வின்(8) என்ற 2 சிறுவர்கள் விழுந்து இறந்தனர்.

    அந்தப் பள்ளம் ரெயில்வே பணிகளுக்காக தோண்டப்பட்டது என்று தகவல் வெளியானது. இதுகுறித்து மதுரை கோட்ட ெரயில்வே அதிகாரி கூறுகையில், திண்டுக்கல்லில் 2 குழந்தைகள் பள்ளத்தில் விழுந்து பலியான இடம்- தனியார் மாவு மில்லுக்கு சொந்தமானது. அவர்கள் தோண்டிய பள்ளத்தில் மழை தண்ணீர் தேங்கி உள்ளது. அதற்குள் விழுந்து 2 குழந்தைகளும் இறந்துனர்.

    சம்பவம் நடந்த இடம், ெரயில்வே எல்லைக்கு 500 மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ளது. இந்த சம்பவத்துடன் ெரயில்வே நிர்வாகத்தை தொடர்புபடுத்த வேண்டாம் என்றார்.

    • பள்ளி மாணவர்களுக்கு டி.எஸ்.பி.தங்கராமன் அறிவுரை
    • மாணவர்கள் 18 வயது நிரம்பிய பிறகு ஓட்டுனர் உரிமம் பெற்றுக்கொண்டு தான் பைக்குகள் ஓட்ட வேண்டும்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் போக்குவரத்து காவல் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் குளச்சல் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    இதில் குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் கலந்து கொண்டு மாணவர்களிடையே அறிவுரை வழங்கி பேசியதாவது,

    மாணவர்கள் 18 வயது நிரம்பிய பிறகு ஓட்டுனர் உரிமம் பெற்றுக்கொண்டு தான் பைக்குகள் ஓட்ட வேண்டும்.ஆர்வ மிகுதியில் வீட்டில் உள்ள உறவினர்களின் பைக்குகளை அவர்களுக்கு தெரியாமல் எடுத்து ஓட்டக்கூடாது. நண்பர் களை பைக்கில் ஏற்றிக் கொண்டு சாலைக்கு வரக்கூடாது.

    போக்குவரத்து விதி முறைகளை தெரிந்து கொண்டு சாலையில் வாகனம் ஓட்ட வேண்டும். கவனமாகவும், ஜாக்கிரதை யாகவும் வாகனம் ஓட்டி னால் விபத்துகள் ஏற்படாது.

    விபத்தில் ஒருவரை இழந்தால் அது அந்த குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.வாகனத்தில் வெளியே கிளம்பினால் வீடு திரும்பும்வரை பெற்றோர்கள் வீட்டில் காத்து கொண்டிருப்பார்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

    நோயால் இறப்பவரை விடவும் சாலை விபத்தில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.வளைவில் திரும்பும் முன் முதலில் வாகனத்தின் வேகத்தை குறைக்க வேண்டும்.10 மீட்டர் தூரத்தில் திரும்பும் பக்கம் சிக்னல் செய்ய வேண்டும்.

    ஹெல்மெட் அணிந்தால் மட்டும் போதாது.அதன் பெல்ட்டை சரியாக நாடியில் போட வேண்டும்.போலீசுக்கு பயந்து ஹெல்மெட் போடாதீர்கள்.உங்கள் உயிருக்கு பயந்து ஹெல்மெட் போடுங்கள். போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பி டித்தால் விபத்தில்லாமல் சென்றிடலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து இன்ஸ்பெக் டர் வில்லியம் பெஞ்சமின் போக்குவரத்து விதிகள் குறித்து பதாகை மூலம் விளக்கி பேசினார். சப் - இன்ஸ்பெக்டர்கள் குருநா தன், பாலகிருஷ்ணன், பள்ளி தலைமையாசிரியை ஆன்டி புஷ்ப ரெனிதா, என்.எஸ்.எஸ்.ஒருங்கிணைப்பாளர் ஜோஸ், பள்ளி உடற்கல்வி இயக்குனர் வளர்மதி, உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஜூடின், ஷோபா மற்றும் ஆசிரியர்கள் மது, ஜெகன் உள்பட மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கருப்பாநதி அணை கடையநல்லூர் நகராட்சி, சொக்கம்பட்டி ஊராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன.
    • ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 2 டன் மீன்கள் இறந்துவிட்டதாக குத்தகை எடுத்த முருகன் வேதனையுடன் தெரிவித்தார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அருகே மேற்குதொடர்ச்சி மலையையொட்டிய பகுதியில் கருப்பாநதி அணை உள்ளது. இந்த அணையின் உயரம் 72 அடியாகும்.

    இந்த அணை கடையநல்லூர் நகராட்சி, சொக்கம்பட்டி ஊராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. இந்த அணையில் இருந்து பெருங்கால்வாய், பாப்பான் கால்வாய், சீவலன் கால்வாய், இடைகால் கால்வாய், கிளாங்காடு கால்வாய், ஊர்மேலழகியான் கால்வாய் ஆகியவற்றின் மூலம் 72 குளங்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு அதன் மூலம் சுமார் 9,514.7 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்நிலையில் மழை பொய்த்ததால் கருப்பாநதி அணைக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. இதன் காரணமாக அணை வறண்டு விட்டது. இதன் காரணமாக கடையநல்லூர் நகராட்சியில் குடிநீர் பிரச்னை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

    இதற்கிடையே மீன்பாசி குத்தகைக்காக அணையில் வளர்க்கப்பட்ட மீன்கள் நீர் இல்லாத காரணத்தால் செத்து மிதந்தன. ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 2 டன் மீன்கள் இறந்துவிட்டதாக குத்தகை எடுத்த முருகன் வேதனையுடன் தெரிவித்தார்.

    தற்போது இறந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×