search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐகோர்ட்டு உத்தரவு"

    • கோவில் அதிகாரிகள், வங்கி, கோர்ட்டு அதிகாரிகள் வருவதற்காக திறந்து மூடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • ஐகோர்ட்டு உத்தரவு என்பதால் இதில் அதிகாரிகள் தலையிட முடியாது.

    பழனி:

    பழனி கிரிவலப்பாதையில் தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும், ஆக்கிரமிப்பு கடைகளாலும் பக்தர்கள் பாதிக்கப்படுவதாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து கிரிவலப்பாதையில் தனியார் வாகனங்களை அனுமதிக்க கூடாது, கோவிலை சுற்றியுள்ள வீதிகளை வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மார்ச் 8ம் தேதிக்குள் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது. அதன்படி பழனி கிரிவலப்பாதைக்கு வரும் 9 இணைப்புச்சாலைகளில் 8 சாலைகளில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு வாகனங்கள் வருவது தடுக்கப்பட்டது. கொடைக்கானலில் இருந்து வரும் வாகனங்கள் பாதையில் மட்டும் அடைப்பு ஏற்படுத்தாமல் தற்காலிக கேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக கோவில் அதிகாரிகள், வங்கி, கோர்ட்டு அதிகாரிகள் வருவதற்காக திறந்து மூடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


    இந்நிலையில் கிரிவலப்பாதை அடைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் ஊர்வலம் நடத்தி ஆர்.டி.ஓ.விடம் மனு அளித்தனர். ஐகோர்ட்டு உத்தரவு என்பதால் இதில் அதிகாரிகள் தலையிட முடியாது. கோர்ட்டு உத்தரவு இன்றுமுதல் நடைமுறைக்கு வந்தது. கிரிவலப்பாதை வாகனங்கள் எதுவுமின்றி வெறிச்சொடி காணப்பட்டது. 

    • சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் அறங்காவலரை நியமிக்க மதுரை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.
    • மனுதாரர் பொறுப்புக்கு வருவதற்கு முன்பே கோவில் நிலங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இதன் நிர்வாக அறங்காவலர் ஆனந்த் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    அதில், ஸ்ரீவில்லிபுத்தூர் சவுடேஸ்வரி அம்மன் கோவில் தேவாங்கர் சமூகத்திற்கு பாத்தி யப்பட்டது. கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் தனிநபர்களுக்கு குத்தகை விடப்பட்டது. ஆனால் அவர்கள் நிலத்தை குத்தகை காலம் முடிந்து ஒப்ப டைக்காமல் விற்பனை செய்துள்ளனர். அதனை செல்லாது என அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    இதனை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு மனுதாரர் புகார் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

    இந்த நிலையில் சவுடேஸ்வரி அம்மன் கோவில் நிர்வாக அறங்காவலர் ஆனந்தை நீக்கி அதற்கு பதிலாக வேறு நபரை இந்து சமய அறநிலை நியமித்தது. இதற்கு தடை விதிக்க கோரி ஆனந்த் மதுரை ஐகோர்ட்டை நாடினார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி தனது உத்தரவில் மனுதாரர் பொறுப்புக்கு வருவதற்கு முன்பே கோவில் நிலங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்காமல் புதிதாக நிர்வாகிகளை நியமித்து குழப்பி வருகிறார்கள்.

    எனவே நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் கோவில் அறங்காவலராக புதிய நபரை நியமிக்க தடை விதிக்கப்படுகிறது என தனது உத்தரவில் குறிப்பிட்டார்.

    • வைப்பாற்றில் கழிவுநீர்கலக்கும் விவகாரம் தொடர்பாக விருதுநகர் கலெக்டர் பதிலளிக்க வேண்டும்.
    • மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    விருதுநகர்

    சாத்தூர் அருகே படந்தாலை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வைப்பாற்றில் கழிவுநீர் கலக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டம் வருசநாட்டு மலை பகுதியில் இருந்து வைப்பாற்றுக்கு தண்ணீர் வருகிறது.

    இந்த தண்ணீர் மூலம் சாத்தூர் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் ஆற்றின் பல இடங்களில் கழிவுநீர் கலப்பதால் மாசு அடைந்துள்ளது. இதுதொடர்பாக நகராட்சியிடமும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திட மும் புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதுதொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சுவாமிநாதன் அமர்வு முன்பு வந்தது.அப்போது வைப்பாற்றில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக விருதுநகர் மாவட்ட கலெக்டர், மாசு கட்டுப்பாட்டு அலுவலர், பொதுப்பணித்துதுறை அதிகாரி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தார்.

    • புகையிலை பொருட்களை பதுக்கிய வழக்கில் கைதான வாலிபருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
    • அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.50 ஆயிரம் வழங்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவர் ரூ.1 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் தன்மீது எந்த ஒரு வழக்கும் நிலுவையில் இல்லை. எனவே ஜாமீன் வழங்குமாறு தெரிவிக்கப்ப ட்டது.

    இதனையடுத்து நீதிபதி, மனுதாரரின் சிறையில் இருந்த காலத்தை கருத்தில் கொண்டு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்படுகிறது. மனுதாரர் ரூ. 50 ஆயிரத்தை நன்கொடையாக மதுரை அரசு மருத்துவமனைக்கு வழங்க வேண்டும். அதற்கான ரசீதை விசா ரணை நீதிமன்றத்தில் ஒப்ப டைக்க வேண்டும்.

    மறு உத்தரவு வரும்வரை மனுதாரர் தினமும் காலை 10.30 மணிக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் போன்ற நிபந்தனைகளை நீதிபதி பிறப்பித்தார். 

    • 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை நேரடி வகுப்புகள் நடத்தலாம் என அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
    • வேறு பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் சக்தி மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு பிளஸ்-2 படித்துவந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இதற்கு நீதிகேட்டு நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. பள்ளியில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. அதோடு போலீஸ் ஜீப்களுக்கும், பள்ளி வகுப்பறைகளுக்கும் தீ வைக்கப்பட்டது. இதனால் பள்ளியில் பலகோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து கனியாமூர் சக்திமேல்நிலை பள்ளியில் வகுப்புகள் எதுவும் நடத்தப்படவில்லை. வேறு பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கனியாமூர் சக்திமெட்ரிக் மேல்நிலை பள்ளி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதிக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கனியாமூர் பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை நேரடி வகுப்புகள் நடத்தலாம் என அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

    • நீர்நிலையில் சட்டவிரோதமாக கிராவல் மண் எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • புளியங்குளம் குளத்தில் குவாரி செயல்பாட்டை நிறுத்தக்கோரி அதிகாரிகளிடம், பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.

    மதுரை

    தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகா கப்பிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா மூலக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட புளியங்குளம் கண்மாயில் குவாரி அமைத்து, கிராவல் மண் எடுக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அனுமதிக்கப்பட்டது. இந்த கிராவல் மண்ணை திருச்செந்தூரில் இருந்து அம்பாசமுத்திரம் வரை தொழில் வழிச்சாலை அமைப்பதற்கு பயன்படுத்த 25.2.2022 வரை காண்டிராக்டர்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது.

    ஆனால் சாலை அமைக்க கிராவல் மண் எடுக்க அனுமதி பெற்றுவிட்டு, இரவும், பகலும் புளியங்குளம் கண்மாயில் இருந்து கிராவல் மண்ணை அள்ளிச்சென்றனர். இதற்காக கண்மாயில் இருந்த பாசனத்திற்கு தேவையான தண்ணீரையும் வெளியேற்றினர். இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து குவாரிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டோம். சாலை அமைக்கும் பணிகள் முடிந்த பின்பும், குறிப்பிட்ட கால அனுமதியை தாண்டி, தற்போதும் அந்த குவாரி செயல்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர் படுபாதாளத்திற்கு சென்றுவிட்டது. அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையும் கேள்விக்குறியாகி விட்டது.

    எனவே புளியங்குளம் குளத்தில் குவாரி செயல்பாட்டை நிறுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினோம். இதுவரை எந்த பதிலும் இல்லை. இதுதொடர்பாக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, 2 மாதம் மட்டும் அவகாசம் அளிப்பதாக கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. அந்த அவகாசம் முடிந்தும் பலமாதங்களாக குவாரியில் கிராவல் மண் சட்டவிரோதமாக அள்ளப்பட்டு வருகிறது. இதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கிராவல் மண் எடுக்க அனுமதித்த அவகாசம் முடிந்த பின்பும் சட்டவிரோதமாக எதன் அடிப்படையில் மண் அள்ளப்படுகிறது? இதை ஏற்க இயலாது. அந்த குவாரியில் கிராவல் மண் எடுக்க இடைக்கால தடை விதிக்கிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட இளம் பெண் இறந்த விவகாரத்தில் மருத்துவக்குழு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • பூங்கொடி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    மதுரை

    தேனி கண்டமனூரைச் சேர்ந்த பூங்கொடி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    எனது மகள் கனிமொழியை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரசவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு குழந்தை பிறந்தது. பின்னர் ஜூன் 15ஆம் தேதி தையல் பிரிக்கப்பட்டு, தாயும் சேயும் நலமாக இருந்தனர்.

    மறுநாள் பயிற்சி மருத்துவர் எனது மகளுக்கு ஊசி ஒன்றை போட்டார். அதைத்தொடர்ந்து எனது மகளுக்கு கடுமையான வலி ஏற்பட்ட நிலையில், 21-ந் தேதி எனது மகள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனது மகளின் மரணத்திற்கான காரணத்தை தெரிவிக்காமல் உடலை பெற்றுக் கொள்ளுமாறு மிரட்டினர். காவல்துறையினரும் வற்புறுத்தினர்.

    இவ்வாறு மிரட்டியதால் எனது மகளின் உடலை சத்திரப்பட்டி கிராம மயானத்தில் அடக்கம் செய்தோம். பயிற்சி மருத்துவர் தவறான ஊசி செலுத்தியதே எனது மகளின் இறப்பிற்கு காரணம். ஆகவே எனது மகளின் உடலை 2 மூத்த தடய அறிவியல் துறையின் பேராசிரியர்கள் முன்னி லையில் உடற்கூராய்வு செய்யவும், மருத்துவ குழு அமைத்து இறப்பிற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்றும் மகளின் இறப்பிற்கு கார ணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி சுகுமார குருப் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உயிரிழந்த பெண் கனிமொழியின் மருத்துவ அறிக்கையை தேனி மருத்துவகல்லூரி முதல்வர் சார்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டது.

    இதனைத் தொடர்ந்து நீதிபதி தனது உத்தரவில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் தலைமையில் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம், துறைத்தலைவர், மயக்கவியல் துறை தலைவர் மற்றும் இருதயவியல் துறை தலைவர்கள் அடங்கிய மருத்துவர் குழுவை, சுகாதாரத்துறை செயலாளர் அமைக்க வேண்டும் அமைக்கப்பட்ட மருத்துவர்களின் உயர்மட்ட குழு பெண் இறப்பு குறித்து ஆய்வு செய்து அதன் அறி க்கையை ஒரு மாதத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

    ×