search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Enclosure"

    • கோவில் அதிகாரிகள், வங்கி, கோர்ட்டு அதிகாரிகள் வருவதற்காக திறந்து மூடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • ஐகோர்ட்டு உத்தரவு என்பதால் இதில் அதிகாரிகள் தலையிட முடியாது.

    பழனி:

    பழனி கிரிவலப்பாதையில் தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும், ஆக்கிரமிப்பு கடைகளாலும் பக்தர்கள் பாதிக்கப்படுவதாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து கிரிவலப்பாதையில் தனியார் வாகனங்களை அனுமதிக்க கூடாது, கோவிலை சுற்றியுள்ள வீதிகளை வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மார்ச் 8ம் தேதிக்குள் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது. அதன்படி பழனி கிரிவலப்பாதைக்கு வரும் 9 இணைப்புச்சாலைகளில் 8 சாலைகளில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு வாகனங்கள் வருவது தடுக்கப்பட்டது. கொடைக்கானலில் இருந்து வரும் வாகனங்கள் பாதையில் மட்டும் அடைப்பு ஏற்படுத்தாமல் தற்காலிக கேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக கோவில் அதிகாரிகள், வங்கி, கோர்ட்டு அதிகாரிகள் வருவதற்காக திறந்து மூடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


    இந்நிலையில் கிரிவலப்பாதை அடைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் ஊர்வலம் நடத்தி ஆர்.டி.ஓ.விடம் மனு அளித்தனர். ஐகோர்ட்டு உத்தரவு என்பதால் இதில் அதிகாரிகள் தலையிட முடியாது. கோர்ட்டு உத்தரவு இன்றுமுதல் நடைமுறைக்கு வந்தது. கிரிவலப்பாதை வாகனங்கள் எதுவுமின்றி வெறிச்சொடி காணப்பட்டது. 

    • 4 -ம் நூற்றாண்டை சேர்ந்த பிராமி தமிழ் கல்வெட்டும் பழங்கால வெண்கோட்டுரு ஓவியங்களும் உள்ளன.
    • இந்த நினைவுச் சின்னத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்பி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    செஞ்சியை அடுத்த நெகனூர் பட்டி கிராமத்தில் குன்றின் மீதுள்ள அடுக்குப் பாறையில் சமணப்படுக்கையும் 4 -ம் நூற்றாண்டை சேர்ந்த பிராமி தமிழ் கல்வெட்டும் பழங்கால வெண்கோட்டுரு ஓவியங்களும் உள்ளன. இந்த பாறைகளின் அருகே வெடிவைத்து கல் உடைத்ததில் பாறையில் விரிசல் ஏற்பட்டது.இது குறித்து கடந்த 2020 -ம் ஆண்டு விழுப்புரம் எம்.பி.ரவிக்குமார் தமிழ்நாடு தொல்லியல் துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றார். தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் நெகனூர்பட்டி மற்றும் தொண்டூர் கிராமத்தில் உள்ள கிராமிய கல்வெட்டு களை பாதுகாக்கப்பட்ட வரலாற்று நினைவு சின்னமாக அறிவித்தார். தற்போது இந்த நினைவுச் சின்னத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்பி வருகின்றனர்.

    இந்நிலையில் சின்னம் உள்ள இடத்திலிருந்து 300மீட்டர் தூரத்துக்கு எந்த கட்டுமானமும் வெடி வைத்தலும் செய்யக்கூடாது. ஆனால் 87 மீட்டர் தூரத்தில் பாறைகளை வெடிவைத்து உடைத்து வருகின்றனர். இதையடுத்து நேற்று தமிழ்நாடு தொல்லியல் துறை சென்னை அலுவ லகத்தை சேர்ந்த உதவி பொறியாளர் ராஜேஷ் இந்த இடத்தை நேரில் வந்து பார்வையிட்டார் பின்னர் அவர் இது குறித்து செஞ்சி தாசில்தாரிடமும், போலீசிலும் அவர் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தாசில்தார் கார்த்திகேயன், வருவாய் ஆய்வாளர் ஜமீனா, கிராம நிர்வாக அலுவலர் தேன்மொழி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வை யிட்டனர். யாரேனும் வெடி வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • 14 மாடுகள் பிடித்து அடைக்கப்பட்டு வைக்கோல் ஆகியவை இடப்படுகிறது.
    • மாடுகளின் உரிமையாளர் மீது காவல்துறையில் வழக்குபதிவு செய்திட அறிவுறுத்தப்படும்.

    சீர்காழி:

    சீர்காழியில் பிரதான சாலைகள் உள்ளிட்ட நகரின் அனைத்து பகுதிகளிலும் மாடுகள் சுற்றி திரிந்து வருகிறது.

    இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுதோடு சில நேரங்களில் மாடுகள் திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால் விபத்துக்களும் ஏற்பட்டது.

    சாலையில் சுற்றிதிரியும் மாடுகளை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனையடுத்து நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன், நகராட்சி ஆணையர் ஹேமலதா ஆகியோர் உத்தரவின்படி நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளை பிடிக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.

    இதுவரை சுமார் 14 மாடுகள் பிடிக்கப்பட்டு நகராட்சி குடிநீர் மேல்நிலைநீர் தேக்கதொட்டி அமைந்துள்ள வளாகத்தில் அடைக்கப்பட்டு வைக்கோல் ஆகியவை இடப்படுகிறது.

    மாடுகளை மீட்கவரும் கால்நடை உரிமையாளர்களுக்கு ரூ .2ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்படும் எனவும் அடுத்தமுறை மீண்டும் மாடுகளை சாலையில் விடும் உரிமையாளர் மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்திட அறிவுறு த்தப்படும் என நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன் தெரிவித்தார்.

    • அந்த வழியாக யாரும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை.
    • சத்யா விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பாதையில் விழுந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இடைவிடாது பெய்த கன மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின.

    தொடர்ந்து பலத்த காற்று வீசிக்கொண்டிருந்ததால் தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரி பின்புறம் உள்ள மகளிர் விடுதியில் இருந்த மரம் ஒன்று முறிந்து சுற்று சுவர் மீது விழுந்து சத்யா விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பாதையில் விழுந்தன. இதில் விடுதி சுற்று சுவரின் ஒரு பகுதி சேதமடைந்தது .

    அப்போது அந்த வழியாக யாரும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை . இதனை தொடர்ந்து விழுந்த மரத்தின் கிளைகள் வெட்டி அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது

    • திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜவுளி சந்தையில் உள்ள தினசரி கடைகள் இன்று ஒரு நாள் அடைக்கப்பட்டுள்ளது.
    • இது குறித்த அறிவிப்பு கடைகளில் வைக்கப்பட்டிருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திருமகன் ஈவெரா நேற்று உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ–மனையில் மாரடைப்பால் இறந்தார்.

    அவரது திடீர் இறப்பு காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள குடியரசு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    திருமகன் ஈவெரா உடலுக்கு ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்பு தலைவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் தினசரி ஜவுளி சந்தையில் 260-க்கும் மேற்பட்ட தினசரி கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் கடந்த சில நாட்களாகவே ஜவுளி சந்தையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜவுளி சந்தையில் உள்ள தினசரி கடைகள் இன்று ஒரு நாள் அடைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு கடைகளில் வைக்கப்பட்டிருந்தது.

    இன்று பன்னீர்செல்வம் பார்கில் ஜவுளி வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு மவுன ஊர்வலமாக கச்சேரி வீதியில் உள்ள திருமகன் ஈவெரா வீட்டுக்கு சென்றனர்.

    பின்னர் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    • சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்துள்ளதால் அதன் வழியே சமூக விரோதிகள் அட்டூழியம் செய்து வருகின்றனர்.
    • தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுற்றுச்சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தாமரைக்குளம் சீரமைக்கப்பட்டு திறக்கப்படாமலேயே மீண்டும் சிதிலமடைந்து காணப்படுகிறது.

    இந்நிலையில் நாகை எம்.எல்.ஏ. முகம்மது ஷா நவாஸ் தாமரைக் குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்குள்ள சுற்றுச் சுவரின் ஒரு பகுதி இடிந்துள்ளதால் அதன் வழியே சமூக விரோதிகள் புகுந்து குளத்தை பாழாக்கி வருகின்றனர்.

    எனவே அந்த சுவரை கட்ட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுற்றுச் சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.

    அத்துடன் இதர சீரமைப்புப் பணிகளையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென நகராட்சி நிர்வாகத்திடம் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.ஆய்வின் போது, நகர்மன்ற தலைவர் இரா.மாரிமுத்து, நகராட்சி ஆணையர், நகர்மன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • கணவன் மனைவி இருவருக்கும் இடையே தினசரி குடும்பத்தில் அடிக்கடி வாக்குவாதம் தகராறு ஏற்பட்டு வந்தது.
    • மது போதையில் வந்து அலமேலுவை கடுமையாக தாக்கினாராம். பதிலுக்கு அலமேலு குமாரை வாய், உதடு பகுதியில் சரமாரியாக தாக்கினாராம்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் சீலநாயக்கன்பட்டி பெருமாள் கோவில் மேடு 4- வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளி.

    இவரது2-வது மனைவி அலமேலு ( வயது 46). இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தினசரி குடும்பத்தில் அடிக்கடி வாக்குவாதம் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று கண்ணன் - அலமேலு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு, தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டு, ஒருவரை–யொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதாக தெரிகிறது. அந்த சமயம் கண்ணனுக்கு ஆதரவாக அவரது தம்பி குமார் மது போதையில் வந்து அலமேலுவை கடுமையாக தாக்கினாராம். பதிலுக்கு அலமேலு குமாரை வாய், உதடு பகுதியில் சரமாரியாக தாக்கினாராம். இதில் பலத்த காயம் அடைந்த குமார் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து பெற்று வருகிறார்.

    இதுகுறித்து குமார் அளித்த புகாரின் பேரில் அடிதடி பிரிவில் வழக்குப் பதிவு செய்த அன்ன–தானப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகலா, சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் அலமேலுவை கைது செய்து சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் ஜெயிலில் அடைந்தனர்.

    ×