

அன்னதானப்பட்டி:
சேலம் சீலநாயக்கன்பட்டி பெருமாள் கோவில் மேடு 4- வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளி.
இவரது2-வது மனைவி அலமேலு ( வயது 46). இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தினசரி குடும்பத்தில் அடிக்கடி வாக்குவாதம் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று கண்ணன் - அலமேலு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு, தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டு, ஒருவரை–யொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதாக தெரிகிறது. அந்த சமயம் கண்ணனுக்கு ஆதரவாக அவரது தம்பி குமார் மது போதையில் வந்து அலமேலுவை கடுமையாக தாக்கினாராம். பதிலுக்கு அலமேலு குமாரை வாய், உதடு பகுதியில் சரமாரியாக தாக்கினாராம். இதில் பலத்த காயம் அடைந்த குமார் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து பெற்று வருகிறார்.
இதுகுறித்து குமார் அளித்த புகாரின் பேரில் அடிதடி பிரிவில் வழக்குப் பதிவு செய்த அன்ன–தானப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகலா, சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் அலமேலுவை கைது செய்து சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் ஜெயிலில் அடைந்தனர்.